For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பாரம்பரிய முறையில் அலங்கரிப்பதற்கான வழிகள்!!!

By Submitted By Ashok CR
|

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இந்த கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையை முன்னிட்டு நமது இல்லங்களில் செய்யப்படும் அலங்காரங்கள் தான் இந்த பண்டிகையில் சிறப்பு அம்சமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாவே நாம் அனைவரும் நமது இல்லத்தை அலங்கரிக்க தொடங்கி விடுவோம். இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை பாரம்பரிய முறையில் கொண்டாடுவது எப்படி என இப்பொழுது படிக்கலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையானது அன்பும், விளக்குகளும் பாரம்பரியமும் நிறைந்த பண்டிகையாகும். நாம் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று கூடி இந்த பண்டிகையை கொண்டாடவே விரும்புவோம். நமது வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து வீடு முழுவதும் அழகான வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடுவோம். நாம் அனைவருமே இந்த கொண்டாட்டதிற்காகவே காத்து கொண்டு இருக்கின்றோம்.

Traditional Ways To Decorate For Christmas

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யும் பாரம்பரிய முறை அலங்காரங்கள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. இது நமது பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். இந்நாளில் செய்யும் சிறிய பல விஷயங்கள் நமது கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு கூடுதல் சந்தோஷத்தை அளிக்கச் செய்யும். நீங்களும் உங்கள் வீட்டை பாரம்பரிய முறையில் அலங்கரிப்பதற்கு இந்த எளிய டிப்ஸ்களை பயன்படுத்தலாம்.

பாரம்பரிய முறையில் அலங்கரித்தல் என்றவுடன் நமது நினைவில் வரும் முதல் நிறம் சிவப்பு தான். ஆம், சாண்டா கிளாஸ்சின் உடைகள் மற்றும் எல்லா அலங்காரங்களுமே சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். மேலும், பாரம்பரிய முறையில் உங்கள் வீட்டை அலங்கரித்தல் மூலமாக அது உங்கள் நினைவுகளில் என்றுமே நிறைந்திருக்கும். இந்த கிறிஸ்துமஸ்சின்போது உங்கள் வீட்டை பாரம்பரிய முறையில் அலங்கரிக்க நீங்கள் நினைத்தால், கீழுள்ள இந்த வரிசையை பின்பற்றி பராம்பரியத்தை உங்கள் இல்லங்களில் மீண்டும் கொண்டு வாருங்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பாரம்பரிய முறையில் அலங்கரிப்பதற்கான டிப்ஸ்கள்:

எளிமையான முறையில் எனினும் அழகான முறையில்

இந்த பண்டிகையின்போது உங்கள் வீட்டில் இருக்கும் கிறிஸ்துமஸ் மரம் தான் எல்லோராலும் ஈர்க்கப்படும் பொருளாக இருக்கும். இதனை எளிமையான நிறங்களான சிவப்பு அல்லது நீல நிறங்களில் அலங்கரியுங்கள். ஒரே நிறமாக அலங்கரித்து அதில் சில ரிப்பன்களையும் பளபளக்கும் வெள்ளி பாபில்ஸ்சையும் தொங்கவிடுங்கள்.

மாண்டில்பீஸ்

உங்கள் பயர் ப்ளேசை சுற்றியுள்ள மாண்டில்பீஸ்சை அழகால மாலைகளாலும் தோரணங்களாலும் மெழுகுவத்திகளாலும் அலங்கரிக்கலாம். இது உங்கள் மாண்டில்பீஸ்க்கு ஒரு பழங்கால தோற்றத்தை அளித்து உங்கள் அறைக்கு பாரம்பரிய அழகைக் கொடுக்கும்.

மேஜை அலங்காரங்கள்

உங்கள் சாப்பாட்டு மேஜையில் அழகான பழத்தட்டுக்கள் அமைத்து பாரம்பரிய முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம். பழங்களாலான கூம்பகத்தை செய்து உங்கள் மேஜையை அலங்கரிக்கலாம். அதில் ஆரஞ்ச் பழங்கள் சேர்ப்பதன் மூலம் பாரம்பரிய முறையை பின்பற்றலாம்.

பேப்பர் அலங்காரங்கள்

விக்டோரியா காலம் முதல் பேப்பர் அலங்காரங்கள்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அழகான வண்ணமிகு பேப்பர் அலங்காரங்களை செய்து உங்கள் வீட்டை அழகாக மாற்றியமைக்கலாம். மேலும், இவற்றை உங்கள் பரிசுகளை சுற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.

ஹாலை அலங்கரித்தல்

உங்கள் ஹாலில் விண்டர்பெர்ரியால் செய்த மலர்வளையங்களை கொண்டு அலங்கரித்து உங்கள் விருந்தினர்களை பாரம்பரிய முறையில் வரவேற்கலாம். அல்லது,பச்சைநிற ரிப்பன்களாலான மலர்வளையங்களை உபயோகித்து உங்கள் ஹாலுக்கு பழங்கால தோற்றத்தை உண்டாக்கலாம். சிவப்பும் பச்சையும் பாரம்பரிய நிறங்கள் ஆகும்.

சாண்டிலியர் (செடிவிளக்கு)

உங்கள் வீட்டில் தொங்கு விளக்கு இருந்தால் அதில் சில பாரம்பரிய தோரணங்களை தொங்க விட்டு உங்கள் வீட்டிற்கு பாரம்பரிய தோற்றத்தை கொடுக்கலாம். மேலும், கூண்டு விளக்குகள் அல்லது பொருத்துகள் கொண்டு அலங்கரிக்கலாம்.

ஹாலை அழகாக்குதல்

உங்கள் ஹாலில் அழகான கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சுற்றிலும் பரிசுப் பொருட்களை வைத்து அலங்கரிக்க வேண்டும். உங்கள் ஹாலில் உள்ள பார்நீச்சர்களில் வண்ணமிகு தலையணைகளையும், உங்கள் ஜன்னல்களில் பளிச்சிடும் திரைச்சீலைகளையும்,உங்கள் சுவர்களில் மலர்வளையங்களையும் வைத்து அலங்கரிக்கலாம்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்த பாரம்பரிய அலங்கரித்தல் ஐடியாக்களை பயன்படுத்தி கொண்டாடி மகிழுங்கள். இந்த சிறிய மாற்றங்களை செய்து உங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடி மகிழுங்கள்.

English summary

Traditional Ways To Decorate For Christmas

If you want to decorate your home the traditional way this Christmas, then browse through the list to get some exciting ideas to go traditional.
Story first published: Saturday, December 7, 2013, 18:02 [IST]
Desktop Bottom Promotion