For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட்டிற்குள் வீட்டை புதுப்பிக்க சில டிப்ஸ்...

By Ashok CR
|

உங்கள் இல்லம் எல்லா வகையிலும் உங்களுக்கு வசதியாக இருந்தால் மட்டுமே அது உங்கள் வீடு என்ற திருப்தியை அளிக்கும். உங்கள் இல்லமே உங்கள் சொர்க்கம். இதனால் அதை நன்கு பராமரிப்பது அவசியம். வீட்டை அழகாகவும், தோரணையாகவும் வைப்பதற்கும், அதை தக்க வைத்து கொள்வதற்கும், வீட்டை புதுப்பித்தல் அவசியம். வீட்டை புதுப்பிக்க நினைத்தவுடன், நாம் கருத்தில் கொள்வது பட்ஜெட் தான்.

நீங்கள் உங்கள் வீட்டை புதுப்பிக்க முடிவு செய்த பின், அதற்காக நிர்ணயித்த தொகையை விட எப்போதுமே அதிக தொகையே செலவாகும். இதனால் சிக்கல்கல் ஏற்படுகின்றன. இந்த குளிர் காலத்தில் உங்கள் இல்லத்தை உங்கள் பட்ஜெட்டுக்குள் புதுப்பிக்க தேவையான சில டிப்ஸ்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.

Renovate Your Home On A Budget: Winter Spcl

அறிவுப்பூர்வமாக திட்டமிடுதல்

வீட்டை புதுப்பிக்க முடிவு செய்தவுடன், அதற்கான திட்டங்களை தெளிவாக சரிவர திட்டமிட வேண்டும். புதுப்பிக்கும் போது, நாம் வாழும் பகுதிகளை பெரியதாக தெரியுமாறு காட்டுவதே, திறமையாகும். உதாரணமாக, நாம் ஒரு பட்ஜெட்டை தீர்மானித்து, வீட்டை புதுப்பிக்க முடிவு செய்ததாக எடுத்துக்கொள்வோம். சமையலறையை புதுப்பிக்கும் போது, அதில் உள்ள சாமான் அடுக்கும் தட்டுக்களில், அலமாரிகள் மற்றும் இழுப்பறைகள் அமைத்து புதுப்பித்தால், சமையலறை பெரிதாக தோற்றமளிக்கும்.

எப்படி பயனுள்ள வகையில் அமைத்தல் என்பதை அறிதல்

இல்லத்தை தகுந்த செலவு செய்து புதுப்பிக்கும் போது, பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும். தேவையற்ற செயல்களையும் மற்றும் அவசியமற்ற செலவுகளையும் தவிர்த்து, பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கு போதுமான அளவு வெளிச்சம் வேண்டுமாயின், பல இடங்களில் தோண்டி, சில ஜன்னல்களை பொருத்துவதை விட டியுப் லைட்டை பொருத்துவதே போதுமானது.

மறு சுழற்சியை மேற்கொள்ளுதல்

குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் வீட்டை புதுப்பிக்கும் போது, மறு சுழற்சியை மேற்கொள்ளுதல் சிறந்த முறையாகும். உங்கள் கான்ராக்டர் அழிவு மீட்பு பொருட்களை பயன்படுத்த ஒத்துக்கொள்ள மாட்டார். இருப்பினும் மறு சுழற்சியாக்கப்பட்ட பொருட்களை உபயோகிப்பது சிறந்ததாகும். இதுவே குறைந்த செலவில், தரமான பொருட்களைக் கொண்டு சீரமைப்பதற்கு சிறந்த வழியாகும்.

மறுவிற்பனை செய்தல்

நீங்கள் உங்கள் இல்லத்தை புதுப்பிக்கும் போது, உபயோகப் படுத்தப்படாத பொருள்களை ஒதுக்கி, அவற்றை யாருக்காவது வழங்குதல் அல்லது மறு விற்பனை செய்து விட வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு மறு விற்பனை செய்வதன் மூலம், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் இல்லத்தை புதுப்பிக்கலாம்.

உங்களை நீங்களே சார்ந்து இருத்தல்

நீங்கள் யாரையாவது சார்ந்திருக்க வேண்டுமாயின், உங்களை மட்டுமே சார்தல் போதுமானது. வீட்டை புதுப்பிக்கும் பணியில், நீங்களே சில வேலைகளை செய்வதன் மூலம், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் செலவை முடிக்கலாம். உதாரணமாக இடித்தல் போன்ற வேலைகளை நீங்களே செய்வதன் மூலம் அதிக அளவிலான தொகையை மிச்சப்படுத்தலாம்.

தேவையற்ற நிலைப் பொருத்திகளை தவிர்த்தல்

நீங்கள் மின் விளக்குகளை பொருத்த முற்பட்டால், அதற்கு தேவையான பொருத்திகளை மட்டுமே பொருத்த வேண்டும். தேவையற்ற பொருத்திகளைத் தவிர்க்க வேண்டும். இதனால் புதுப்பிக்கும் போது செலவு கூடுவதை தவிர்த்து குறைந்த செலவில் புதுப்பிக்கலாம்.

இவ்வாறாக உங்கள் இல்லத்தை புதுப்பிக்கும் போது, எளியமுறையில் திட்டமிட்டு பல்வேறு வழிகளில் புதுப்பிக்கலாம். தேவையானால், உங்கள் நண்பர்கள் யாராவது, சமீபத்தில் இல்லத்தை புதுப்பித்திருந்தால், அவர்களிடம் உங்கள் இல்லத்தை புதுப்பிக்கும் திட்டத்தை கூறி, ஆலோசனைகள் பெறுவது சிறந்தது.

English summary

Renovate Your Home On A Budget: Winter Spcl

There is something you can always expect when you are renovating your home and it is clearly a budget surprise. You often tend to exceed your budget and this may cause a hitch. However, to renovate your home on a budget this winter season may always seem a good idea and you can well do that following some simple tips.
Story first published: Monday, December 23, 2013, 17:49 [IST]
Desktop Bottom Promotion