For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலுவலகத்தில் உங்கள் இடத்தை அலங்கரிக்க சில ஐடியாக்கள்..!

By Ashok CR
|

கிறிஸ்துமஸ் என்பது அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. வேடிக்கை விளையாட்டுக்களை கொண்டுள்ள இந்த பண்டிகை ஒரு பெரிய விழா போல் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட பண்டிகையில் அலங்காரங்கள் இல்லாமல் எப்படி?

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அமரும் இடம் தனிப்பட்டு தெரிய வேண்டுமா? அப்படியானால் அதற்கான திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அமரும் இடத்தில் தான் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள்.

நீங்கள் அமரும் இடத்தை கவரும் வண்ணம் வடிவமைக்க சில முக்கிய வழிகாட்டிகள் உங்கள். அவைகளை நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் அழகான தோற்றத்தை பெற்று உங்கள் சக பணியாளர்கள் அதனை கண்டு வியக்கும் வேண்டாமா?

உங்கள் சக பணியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நாங்கள் கூறும் சில அலங்கார ஐடியாக்களை பின்பற்றுங்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் அலுவலக இடத்தை அலங்கரிப்பது சந்தோஷத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும். இப்படை அலங்கரிப்பதால் அது உங்களுடைய தனித்துவமான திறமையை அடுத்தவர்களுக்கு வெளிக்காட்டும். இதனால் நல்ல ஐடியாக்களுடன் உங்கள் இடத்தை அலங்கரித்து பார்பவர்களை ஈர்க்கும் படி உங்கள் இடத்தை உருமாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உட்பொருள் (தீம்)

உட்பொருள் (தீம்)

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உங்கள் இடத்தை அலங்கரிக்கும் போது உட்பொருள் என்பது முக்கியமான பங்கை கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அலங்காரம் என்று வந்து விட்டால் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது உட்பொருளில் தான். உங்கள் அலங்காரம் அழகாக தெரிவதற்கு உட்பொருள் தான் இந்த விளையாட்டின் காயை நகர்த்துகிறது. இருப்பினும் உங்களுக்கு உட்பொருளை தீர்மானிப்பதில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்றால் எளிய முறையில் உங்கள் இடத்தை அலங்கரிக்கலாம். உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தால் எளிமையான வகையில் உங்கள் இடத்தை அலங்கரித்து அதற்கு அழகை சேர்க்கவும். உங்கள் அலங்காரம் எளிமையாக இருந்தாலும் கூட அது சிறப்பாக காட்சியளிக்க சரியாக திட்டமிடுங்கள்.

பருத்தியில் உள்ள மாயம்

பருத்தியில் உள்ள மாயம்

நான்கு பருவக்காலத்திலேயே குளிர் காலம் தான் அழகானவை. குளிர் காலமான இந்நேரம், உங்கள் மன நிலையையும் குதூகலத்தையும் தூண்டும் விதமாக அமையும். கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் பருத்தியின் மாயமும் அடங்கியுள்ளது. பருத்தியால் மூடப்பட்ட மேஜை பார்ப்பவர்களின் மனநிலையை தூண்டி ஒரு வித பொறியை உண்டாக்கும். இது ஒரு இனிமையான தோற்றத்தையும் அளிக்கும். கிறிஸ்துமஸ் பண்டிக்கைகாக உங்கள் இடத்தை நீங்கள் அலங்கரிக்கும் விதம் மற்றவர்களை வயப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். பருத்தியின் இந்த மாயம் உங்கள் அலங்காரத்திற்கு கூடுதல் ஒளியை ஏற்படுத்தும்.

பசுமையான தொடர்பு

பசுமையான தொடர்பு

உங்கள் பணியிடத்தில் நீங்கள் அழகிய போன்சாய் மரம் வளர்க்கிறீர்களா? அப்படியானால் அதை தற்காலிகமாக எடுக்கும் நேரம் வந்து விட்டது. ஆம் அதற்கு பதில் கிறிஸ்துமஸ் மரத்தை வைக்க வேண்டும். நீங்கள் அந்த குட்டை மரங்களை நீக்கி விட்டு கிறிஸ்மஸ் மரங்களை அந்த இடத்தில் வைத்திடுங்கள். அலுவலகத்தில் நீங்கள் அமரும் இடம் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க வேண்டாமா? அதற்கு உங்கள் இடத்தை சுற்றியும் கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றியும் விளக்குகளை பொருத்துங்கள். இந்த விளக்குகள் உங்கள் இடத்தை பிரகாசமாகவும் அழகாகவும் காட்டும்.

சாண்டா-சாண்டா

சாண்டா-சாண்டா

கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்காரம் என்பது சாண்டா இல்லாமல் முழுமை பெறாது. சாண்டா பொம்மைகள் கிறிஸ்துமஸ் நெருங்குகிறது என்பதை சுட்டிக்காட்டும். மேலும் உங்கள் கொண்டாட்டங்களில் சாந்தாவை சேர்ப்பது என்பது அவசியமான ஒன்றாகும். மேலும் கிறிஸ்துமஸ் மரத்தில் குட்டி காலுறைகளையும் தொங்க விடுங்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற காலுறைகள் உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை மிகவும் அழகாக காண்பிக்கும். காலுறைகளில் மிட்டாய்களால் நிரப்பி விடுவது இன்னும் சிறப்பான ஐடியாவாக இருக்கும்.

கூடுதல் அழகை சேர்ப்பதற்கு மாலையை பயன்படுத்துதல்

கூடுதல் அழகை சேர்ப்பதற்கு மாலையை பயன்படுத்துதல்

உங்கள் அலுவலக இருப்பிடம் கூடுதல் கவர்ச்சியோடு குதூகலம் நிறைந்து காட்சியளிக்க உலோக மாலையை பயன்படுத்துங்கள். இந்த மாலையை தொங்க விடுவதன் மூலம் உங்கள் இருப்பிடத்தின் பரப்பளவில் உள்ள சுவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக தெரியும். ரிப்பன்கள் பயன்படுத்தினால் இருப்பிடம் மேலும் வண்ணமயமாக காட்சியளிக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யப்படும் அலங்காரம் உங்கள் அலுவலகத்திற்கும் அங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் அழகை சேர்க்கும். சிவப்பு நிற ரிப்பன்களை பயன்படுத்தினால் உங்கள் இடத்திற்கு அது மேலும் அழகூட்டும். தொலைபேசி ரிசீவரிலும் ரிப்பன்களை சுற்றினால் இன்னமும் வண்ணமயமாக இருக்கும்.

மினுமினுப்பு காகிதங்கள்

மினுமினுப்பு காகிதங்கள்

மினுமினுப்பு காகிதங்கள், நட்சத்திரங்கள் மற்றும் மலர்வளையங்கள் போன்றவற்றை கிறிஸ்துமஸ் மரத்தில் சேர்க்கலாம். இவை அனைத்தையும் உட்கூரையிலும் தொங்க விட்டு மேலும் அழகு சேர்க்கலாம். தொங்க விட்டிருக்கும் அலங்கார காகிதங்களும் வயர்களும் மேன்மேலும் அழகை சேர்க்கும்.

கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டங்கள் நிறைந்த காலம். அதனை சிறபிக்க அலங்காரங்களை மேற்கொள்ளுங்கள். உங்களின் புதுமையான ஐடியாக்களால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாகவும் குதூகலமாகவும் கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decorating Office Bay On Christmas: Ideas

Christmas is generally fun with colourful decorations and lightings all around. You cannot expect to carry a tree to your office bay for Christmas decoration.
Desktop Bottom Promotion