Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பால்கனியை செடிகளால் அழகுப்படுத்த வேண்டுமா...? இத படிச்சு பாருங்க...
பெரிய நகரங்களிலும், அடுக்குமாடி கட்டிடங்களிலும் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய வீட்டு தோட்டமும் நிழல் நிறைந்த பால்கனியும் இருந்தால் அது அண்டை வீட்டாரையும் கூட கவரக் கூடியதாக இருக்கும். உங்கள் பால்கனியில் குப்பை நிறைந்திருந்தால், அதை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பால்கனியை இனிமையானதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் அமைக்கவேன்டியது தான். எப்படியானாலும் அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நீங்கள், வெறும் பால்கனியை வைத்து என்ன செய்வது என்பது ஒரு சவாலான காரியமாகத்தான் இருக்கும். பலர் இந்த சவாலான பணியை மேற்கொள்ளாமல் பால்கனியை பயன்படுத்தாமலும், வெற்றிடமாகவும் வைத்துள்ளனர். சிலர் அந்த இடத்தை தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் அல்லது பால் பாக்கெட் டப்பாவை வைக்கும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆரம்பத்தில் இது சற்றே கடினமாக இருப்பது போல் தான் தோன்றும், ஆனாலும் ஒரு சில அழகான தாவரங்கள், இருக்கை மற்றும் ஒளி அமைப்புகளால் உங்கள் பால்கனியை நீங்கள் அலங்காரம் செய்ய முடியும். மிகுந்த சலிப்பான வார இறுதி நாட்களில், சிற்சில முயற்சிகளால், உங்களுடைய பால்கனியின் இடத்தை தனியாகவும், வரவேற்கத்தக்கதாகவும் மாற்றம் செய்யலாம். அதுமட்டும் அல்லாமல் நீங்கள் பால்கனியை அலங்காரம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும் முன்பு, அதன் இடஅமைப்பினை புரிந்து கொள்வது அவசியம். பால்கனியை கட்டியிருக்கும் விதம் மற்றும் அமைப்பையும், அதன் கட்டமைப்பையும் கண்.டறியுங்கள். இந்த விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் பால்கனியை சீரமைப்பதற்கான சரியான முடிவுகளை எடுக்க இயலும். உங்களுடைய பால்கனியை எவ்வாறு அழகு படுத்துவது மற்றும் அதற்கான சரியான தாவரங்களைப் பற்றி கீழ் வரும் பகுதியில் காணலாம்.

பால்கனி என்பது மற்றொரு அறை - பொருட்களை தேக்கி வைக்கும் இடமல்ல
உங்கள் இருப்பிடத்தை அழகாக வைக்க விரும்பினால், பால்கனியை மற்றொறு அறையாக கருத வேண்டும் மற்றும் அதை தேவையற்றை பொருட்களை போட்டு வைக்கும் இடமாக கருதக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் பொதுவாகவே பயன்படுத்தாத விளையாட்டு பொருட்கள், சைக்கிள் போன்ற பொருட்களை தான் பால்கனியில் தான் வைப்போம். இவ்வாறு உங்கள் வீடு அலங்கோலமாக இருப்பதை எப்பொழுதும் தவிர்ப்பது நல்லது.
தரைத்தளம் அமைப்பதன் பங்கு
உங்களுடைய பால்கனியை அலங்காரம் செய்ய முடிவெடுத்தவுடன் கவனிக்க வேண்டிய முதல் படியாக தரைதளம் அமைப்பது தான். சரியான தரைதளத்தை அமைத்தால் உங்களுடைய தளம் அழகுற காட்சியளிக்கும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஓடுகளை பயண்படுத்துவது பால்கனி தரையின் அழகை நாகரீகமுடையதாக காட்டும்.
செடிகள் வைத்தல்
சரியான செடிகளை தேர்ந்தெடுப்பது தான் நாம் பால்கனியை அழகு படுத்துவதன் அடுத்த பெரிய இரண்டாவது படியாகும். புத்துணர்ச்சியுடனும் மற்றும் துடிப்பான செடிகள் நமது மனநிலையை மாற்றவும், அமைதிப்படுத்தவும் செய்கின்றன. செடிகளை வாங்குவதற்காக நாம் பயன்படுத்திய பணம் மதிப்புடையதாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் பால்கனியில் செடிகளை வளர்த்திருந்தால், அவற்றிற்கு சற்றே கவனம் செலுத்த வேண்டும். காய்ந்த இலைகளை செடிகளிலிருந்து நீக்குவதும் மற்றும் நன்றாக தண்ணீர் ஊற்றுவதும் நல்லது.
காலியான தொட்டிகளை நிரப்புங்கள்
உங்களிடம் காலியான தொட்டிகள் இருந்தால் அருகில் உள்ள நர்சரிக்கு சென்று சில செடிகளை வாங்குவது நல்லது. செடிகளை வாங்கும் போது ஆரோக்கியமான செடிகளாக பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். நம் பால்கனிக்கு வரும் ஒளியை கருத்தில் கொன்டு அதற்கேற்ற செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இது பால்கனியை அழகு படுத்துவதில் கடைபிடிக்கப்படும் ஒரு சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும்.
அழகான சிறு குறிப்பு
மிக நேர்த்தியான முறையில் நாம் நமது பால்கனிகளை அழகுபடுத்த வேண்டும் என்பதை யாராலும் மருக்க முடியாது. சரியான செடிகளை தேர்வு செய்து வளர்த்தும் மற்றும் லேவென்டர் செடியை நடச் செய்தும் உங்கள் பால்கனியை நீங்கள் அழகுபடுத்தினால், அது உங்கள் இருப்பிடத்தின் அழகுக்கு குறிப்பாக இருக்கும்.
பால்கனிக்கு ஒரு வரையறை!
உங்களுடைய பால்கனிக்கு ஒரு எல்லையை வரையறை செய்யவும். மிகச்சரியான செடிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் அவற்றை பால்கனியின் வரையறை செய்யப்பட்ட இடத்தில் வைத்தல் ஆகியவை பார்வையை ஈர்ப்பதாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பால்கனியின் இடத்தை மேலும் விரிவுபடுத்தி காட்டும். அதிக இடம் உள்ள பால்கனியில் செடிகளை நடுவது, அதனை ஒரு வேலியாகவும் காட்டும். அதே சமயம், சிறிய பால்கனியாக இருந்தாலும் அவை செழிப்பான பார்வையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பால்கனிக்கு நல்ல வண்ணத்தை தேர்ந்தெடுப்பதும் அழகூட்டுவதாக இருக்கும். மூன்று வெவ்வேறு வர்ணங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் பால்கனியின் அழகையும் வளமையையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications