Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
குளிர்காலங்களில் பயன்படுத்த வேண்டிய திரைச்சீலையின் நிறங்கள்!!!
நாம் அனைவரும் விரும்புவது நமக்கென்று ஒரு வீட்டைத்தான். வீட்டை வாங்கிய பிறகு அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து வீட்டை பராமரிக்க வேண்டும். வீட்டை அலங்கரிப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் தங்களது வீட்டின் ஒவ்வொரு பகுகளிலும் ஒவ்வொரு பொருள்களிலும் கவனம் செலுத்தி அலங்கரிக்க வேண்டும்.
வீடு வாங்குவது என்பது எளிதான காரியம் கிடையாது. மேலும் அதனை அழகாகவும் நேர்த்தியாகவும் பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் வாழும் இடம் அமைதியாகவும் நிம்மதி அளிக்ககூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் வீட்டு அலங்கரிக்கும் பொருட்கள் நமது ஆர்வத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தும். வீட்டின் அழகும் பராமரிப்பும் ஒவ்வொருவரது விருப்பத்தை பொறுத்தே இருக்கும். நமது வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் நாம் வசிப்பதற்கு ஏற்ப நேர்த்தியாகவும் அழகானதாகவும் இருக்க வேண்டும். ஒரு சிலர் திரைசீலைகளை தனிமையை மறைக்கக் கூடிய பொருளாக மட்டுமே எண்ணி வருகின்றனர். எனினும், அவைகளால் மேலும் பல பயன்கள் இருக்கின்றன.

வீட்டின் அழகை விளக்குவதற்கு திரைச்சீலைகளின் நிறங்களும் உதவுகின்றன. வீட்டின் அழகு நாம் பயன்படுத்தும் அலங்கார பொருட்களிலும், நமது கதவு ஜன்னல்களில் தொங்கும் திரைச்சீலைகளின் நிறங்களிலும் தான் நிறைந்துள்ளது. இவை குளிர்காலங்களில் வெப்பம் நீங்குவதை தவிர்க்க உதவுகின்றது. குளிர் காலங்களில் நமது வீட்டின் உள்ளே வெப்பநிலையை தக்க வைக்க உதவுகின்றது. அதனால் குளிர்காலத்திற்கு ஏற்ப சரியான திரைச்சீலை நிறத்தையும் சரியான திரைச்சீலை துணியையும் தெரிந்தெடுக்க வேண்டும். நிறங்கள் அழகு மட்டுமே கொடுக்கும் என்பது இல்லாமல் உட்கவர் திறனையும் நிர்ணயிப்பவைகளாகும். இதோ குளிர்காலங்களில் நாம் தேர்ந்தேடுக்கும் திரைச்சீலைகளின் நிறங்களுக்கான டிப்ஸ்.
இயற்கையின் நிறங்கள்
இவ்வகை நிறங்கள் நேர்த்தியாக காட்சியளிப்பதால் சிலர்க்கு இவ்வகை நிறங்களையே மிகவும் பிடிக்கும். உங்கள் சுவர்களில் மென் நிறப்பூச்சு உபயோகித்து இருந்தால் இவ்வகை நிறங்களிலான திரைச்சீலைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும். ப்ளைனாக இருக்காமல் பேட்டர்ன் வகையாக இருந்தால் ஈர்ப்புள்ளதாக இருக்கும். அவை உங்கள் சுவர்களுக்கு மேலும் அழகைச் சேர்க்கும். உங்கள் வீட்டை அலங்கரிப்பதில் திரைச்சீலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வகை இயற்கையின் நிறங்கள் குளிர்காலத்தில் பயன்படுத்தும் வகைகளில் ஒன்றாகும்.
சிவப்பு
சிவப்பு நிற திரைச்சீலைகள் மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கும். இந்நிறம் மழைக்காலங்களுக்கு ஏற்ற நிறமாகும் மேலும் காப்புறை தன்மையையும் அளிக்கக்கூடியதாகும். குளிரில் இருந்து பாதுகாத்து வெப்பத்தை தக்கவைக்கும் திரைச்சீலைகளையே தேர்ந்தேடுத்து வாங்குங்கள்.
மஞ்சள்
மஞ்சள் நிறம் அதற்கே உரிதான நுட்பத்தன்மையும் அழகுத்தன்மையும் வாய்ந்தது. இந்நிற திரைச்சீலைகள் உங்கள் வீட்டிற்கு அமைதியான சூழ்நிலையை அளிக்கச் செய்யும். உங்கள் அறைக்கு போதுமான வெளிச்சத்தை கொடுத்து பிரகாசமாக காட்சியளிக்கச் செய்யும். எனினும், இந்நிறம் உங்கள் சுவருக்கும் தரைக்கும் ஏற்றவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு நிறம் குளிர்காலங்களுக்கு ஏற்ற நிறமாகும். உங்கள் வீடு டிரெண்டியாக காட்சியளிக்க விரும்புவர்கள் இந்நிற திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். ஆரஞ்சு நிறம் உங்கள் வீட்டை பிரகாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கச் செய்யும். வீட்டின் வெப்பம் வெளியில் செல்லாமல் தடுக்க மென்னிற காப்புறை கொண்ட ஆரஞ்சு நிற திரைச்சீலைகள் வாங்குங்கள்.
பளிச்சிடும் நிறங்கள்
சுவர்களின் நிறங்கள் மந்தமாகவோ அல்லது பொலிவிழந்து இருந்தாலோ பளிச்சிடும் நிற திரைச்சீலைகளை உபயோகிக்க வேண்டும். இந்நிற திரைச்சீலைகள் உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்யும்.இவ்வகை நிறங்கள் குளிர்காலங்களுக்கு மிகவும் ஏற்ற நிறங்களாகும். மேலும், இவை நமது அறைகளின் வெப்பத்தை தக்க வைக்க உதவும்.
கருஞ்சிவப்பு
கருஞ்சிவப்பு நிறம் மிகவும் பிரகாசமான நிறங்களில் ஒன்றாகும். இந்நிறம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பர்னீச்சர்களுக்கும் பொருந்தத்தக்கதாக இருக்கும். அறையில் உள்ள விளக்குகளும் திரைச்சீலைகளின் நிறமும் சரியாக அமைந்தால் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும். இந்நிற திரைச்சீலைகள் வெளிச்சத்தை உள்வாங்கி அறையில் வெப்பத்தை தக்க வைக்க உதவும். அதனால், கருஞ்சிவப்பு நிறம் குளிர்க்காலங்களில் தேர்ந்தேடுக்கும் வண்ணங்களில் ஒன்றாக இருகின்றது.
நீலம்
நீல நிறம் குளிர்காலங்களுக்கு தகுந்த நிறமாகும் மேலும் இவை நமது வீட்டின் அழகை வலுப்படுத்தி மேலும் அழகாக்கும். இந்நிற திரைச்சீலைகளுடன் பூந்தொட்டிகளும் கூடிய அறை மிகவும் அழகாக ஜொலிக்கும். இந்த நீலநிறம் உங்கள் ஹாலுக்கும் படுக்கை அறைக்கும் ஏற்ற நிறமாகும். எனினும், குழந்தைகள் அறைக்கும் மற்ற அறைகளுக்கும் வேறு நிறங்களை தேர்வு செய்யாலாம்.



Click it and Unblock the Notifications