வீட்டின் மதிப்பை உயர்த்த 8 சிறந்த வழிமுறைகள்

By Super

உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் மனித வாழ்க்கையின் முக்கியமான தேவைகள், உணவு மற்றும் உடைகளில் நம் பல முன்னேற்றமும், பரிமானங்களையும் அடைந்துளோம். இன்றைய வாழ்க்கை முறையில் வீடும், பல மாற்றங்களை அடைந்துள்ளது. அத்தகைய வீட்டை தேடி அலைபவர்கள் எத்தனையோ பேர். ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். எனினும், தங்கும் இடத்தை கனவு இல்லமாக மாற்றுவதற்கு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்.

நாம் வசிக்கும் இடம் சுத்தமாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தால் தான் அது நம்முடைய மனநிலை மற்றும் உடல் நிலையின் ஆரோக்கியத்தை அளிக்க கூடியதக இருக்கும். அந்த வகையில் நம்முடைய வீட்டை நாம் பராமரித்து வரும் போது, வீட்டின் மதிப்பும் உயர்வது இயற்கை. வீட்டை வாங்கும் முன் அல்லது கட்டும் முன் வீட்டின் இட வசதி, அந்த இடத்தின் தோற்றம் மற்றும் பல அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீட்டை அழகுப்படுத்தவும், மின்னச் செய்திடவும் மற்றும் அதன் மதிப்பை உயர்த்தவும் எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அத்தகைய வீட்டை அழகுப்படுத்துவதற்கான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மையக்கருத்துடன் அலங்கரிக்கவும்!

மையக்கருத்துடன் அலங்கரிக்கவும்!

பொதுவாகவே வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள், வீட்டின் உட்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகளையே அதிகம் கவனிப்பார்கள். ஆகவே வீட்டை உயிரோட்டத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் வகையில் அலங்கரிக்க வேண்டியது மிகவும் அவசியம். சரியான அளவுகளிலான மேசை மற்றும் நாற்காலிகள், வெளிச்சம், உள்கட்டமைப்பு மற்றும் சுவர் அலங்காரங்கள் ஆகியவற்றை செய்வதன் மூலமாக வீட்டை அழகாக்க முடியும். குறிப்பாக வேகமாக வீடு கட்டி விற்க நினைப்பவர்கள், அதன் தோற்றத்தையும், காண்பவரின் முகத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துமாறு வீடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்காக ஹோம் ஸ்டாகிங் எக்ஸ்பர்ட்டின் (home staging) ஆலோசனை முலம், வீட்டை குறைந்த செலவில் மிகுந்த அழகுடன் காண்பிக்க முடியும். சில வீட்டு உரிமையாளர்கள், உலோகங்கள் மற்றும் கண்ணாடிகள் கொண்டு, மிகவும் நவீனமான மற்றும் தற்கால வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். சிலர், பாரம்பரியமிக்க மரப் பொருட்களை பயன்படுத்தி வீட்டின் மதிப்பையும் மற்றும் ஈர்ப்பையும் அதிகப்படுத்துவர்.

போதுமான இடத்தை பயன்படுத்தவும்!

போதுமான இடத்தை பயன்படுத்தவும்!

குடியிருப்பவர்கள் அல்லது விருந்தினர்கள் என யாராக இருந்தாலும், வீட்டில் எவ்வளவு இடம் உள்ளது அதற்கேற்றவாறு வீட்டை அலங்கரிக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் பெரிய ஹால் இருந்தால், வீட்டை அமைதியாக காட்ட முடியும் மற்றும் அழகிய சோபா செட்டுகள் மற்றும் சாய்வு நாற்காலிகளுடன் அந்த இடத்தை பொழுதுபோக்கிடமாகவும் மாற்றிட முடியும். சிறிய அறைகளின் மூலைகளில் விளக்குகள் மற்றும் கண்ணாடிகளை வைத்து, அவற்றை ஒளி பொருந்திய அறைகளாக மாற்றலாம். மேலும், மடிக்கக்கூடிய உணவருந்தும் நாற்காலிகள், சிறிய இடத்தை சிறப்பாக பயன்படுத்த ஏற்றவையாகும். எனவே, சிறிய அறைகளில் கண்ட படி பொருட்களை வைத்திருக்காமல், உடனடியாக அழகு படுத்துங்கள்.

கலையுணர்வு

கலையுணர்வு

மீன் தொட்டிகள், சுவற்றில் பதிக்கப்படும் வளையங்கள், சரவிளக்கு மற்றும் ஓரியண்டல் விளக்கு வெளிச்சங்கள் ஆகியவை வீட்டை கலையுணர்வுடன் வைத்திருக்க உதவும். பிடித்தமான இந்த கலை வேலைப்பாடுகளை வீட்டு சுவற்றில் உருவாக்க முயற்சி செய்யுங்கள். மேலும், வீட்டில் உள்ள ஓவியங்கள் மற்றும் குடும்ப படங்களுக்கிடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அதிலும் அருமையான வண்ணங்கள் மற்றும் வடிவங்களை பயன்படுத்துவதன் மூலம் கலைநயமிக்க சூழலை இல்லத்திற்கு உருவாக்க முடியும். சரியான அளவிலான வண்ணங்களைக் கொண்ட வெளிச்சம் மற்றும் சுவற்றின் வண்ணங்களை கொண்டு வீட்டை உருவாக்கினால், அதன் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சென்று விடும். அக்ஸன்ட் (Accent) லைட்டிங், கேலரி (gallery) லைட்டிங், கேபினட் (cabinet) லைட்டிங் மற்றும் ஸ்டேர் (stair) லைட்டிங் ஆகியவை மின்சார கட்டணத்தை சேமிப்பதுடன், வீடும் சரியான வெளிச்சத்தை கொண்டிருக்கும்.

பசுமை

பசுமை

வீட்டில் பசுமையான புல்வெளிகள் இருக்க வேண்டும். பசுமையான புல்வெளிகள் வீட்டை கவரும் முதன்மையான அம்சமாக இருக்கும். வீட்டின் முன் பகுதியில் குளம் இருந்தால், எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேப்போல, வீட்டின் கூரைகள் மற்றும் வெளிப்புற சுவர்கள் ஆகியவைகளுக்கும் அவ்வப்போது பெயிண்ட் அடித்து புதிதாக வைத்திருக்கவும். மேலும் வீட்டின் முன்பகுதி அல்லது தோட்டத்தில் சரியான மேசை நாற்காலிகளை வைத்து உருவாக்கப்படும் காலை உணவு அல்லது மதிய விருந்து ஏற்பாடுகள், வீட்டிற்கு குடும்பப் பாங்கான தோற்றத்தை கொடுக்கும். தேக்கு, கண்ணாடி மற்றும் கரும்பு போன்றவற்றையும் வீட்டை அழகுபடுத்தப் பயன்படுத்தலாம். பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் செடிகள் மற்றும் அழகாக பூத்திருக்கும் பூக்கள், வீட்டை ஆடம்பரமாகவும், அழகாகவும் வெளிப்படுத்தும்.

மர வேலைப்பாடு

மர வேலைப்பாடு

மரத்தாலான சுவர்கள் மற்றும் தளங்கள் கொண்ட வீடுகள் மிகவும் வசதியானவையாகும். மரத்தை தேய்த்தோ அல்லது மெருகேற்றியோ, அவற்றை சுத்தமாக வைத்திருக்க முடியும். வினைல் தளங்களையும், டைல்ஸ்களையும் வேறு வகையில் சுத்தப்படுத்திட முடியும். 'கிரீச்' என்று சத்தமெழுப்பும் தளங்களை உடனடியாக கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டின் மரப்பொருட்களை அவ்வப்போது முழுமையாக கழுவ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் செல்லரித்தல், உடைசல் அல்லது பூச்சி அரிப்புகள் போன்றவை மரத்தாலான பொருட்களை அரித்து அவற்றின் மதிப்பை கெடுத்து விடும், வீட்டின் மதிப்பையும் குறைத்து விடும்.

ப்ளம்பிங் (plumbing) மற்றும் அலமாரிகள்

ப்ளம்பிங் (plumbing) மற்றும் அலமாரிகள்

குளியல் தொட்டிகள், குழாய் திறப்புகள் மற்றும் ஷவர்கள் சரியான இடங்களில், சரியான அளவுகளில் இருக்க வேண்டும். ஒழுகும் குழாய் திறப்புகள் மற்றும் அழுக்கான தொட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வீட்டின் மதிப்பை பெருமளவு குறைத்து விடும். டி.ஐ.ஒய்-ன் (DIY)-ன் திட்டங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் ப்ளம்பிங் மற்றும் இழுவை மேஜைகளில் உள்ள சில குறைபாடுகளை நீக்கி, அவற்றை பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கச் செய்திட முடியும். உடைந்த ஜன்னல்கள் மற்றும் சரிந்து கிடக்கும் மேஜை டிராயர்கள், ஒழுகத் தயாராக உள்ள குழாய்கள் மற்றும் விரிசல் மிக்க டைல்ஸ்கள் என அனைத்தையுமே குறைந்த செலவில் சரி செய்திட முடியும்.

திரைகள்

திரைகள்

வீட்டின் ஜன்னல் அல்லது ஷவர்களுக்கான தரை விரிப்புகள் என எந்த விதமான திரைகள் வாங்க வேண்டியிருந்தாலும், அதற்கு முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், எந்த வகை திரை வீட்டிற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று கவனிப்பது தான். சுவருக்கேற்றபடியான தரை விரிப்புகள், பொழுதுபோக்கு கேபினட் மற்றும் ஹாலில் உள்ள நாற்காலிகள் ஆகியவற்றுடன் இயல்பாக இணைக்கப்பட்டிருக்கும் திரைகளால் வீட்டின் அழகு பன்மடங்கு அதிகரிக்கும். சுவற்றை ஒட்டியுள்ள அலமாரிகள், புத்தக அலமாரிகள் மற்றும் பிற ஷெல்ப்கள் மற்றும் தரையின் அமைப்பு ஆகியவை வீட்டை அழகாக காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. புதுமையான அமைப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் அமைப்புகளில் சுற்றும் வகையில் அமைக்கப்பட்ட சி.டி ஸ்டாண்ட்கள், தொங்கும் விளக்குகள், புத்தக அலமாரிகள் மற்றும் வீடுகளில் செய்யப்பட்ட மறுமுறை பயன்படுத்தக் கூடிய குப்பை தொட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

வீட்டின் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டே வீட்டின் மதிப்பு இருக்கும். வீட்டை கஷ்டப்பட்டு அழகாகவும், நாகரீகமாகவும் காட்டி விட்டு, அதனை பாதுகாப்பில்லாமல் விட்டு விடுவதில் அர்த்தம் இருக்காது. சர்க்யூட் கேமராக்கள் அல்லது அலாரம் என ஏதாவது ஒன்றை வைத்து பாதுகாப்பினை உறுதி செய்வதும் அவசியம். அதே நேரத்தில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதற்காக சர்க்யூட் மற்றும் மின்சார இணைப்புகளை கவனிப்பதும், சுவிட்ச் போர்டுகள் மற்றும் பிற இணைப்புகள் ஆகியவற்றை கவனிப்பது மிகவும் அவசியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion