Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
பழைய காலெண்டரை பயனுள்ளதாகப் பயன்படுத்த சில டிப்ஸ்...
மாதங்களும் ஆண்டுகளும் கடந்து போக அதை குறிக்கும் நாட்காட்டிகளும் பழசாகி விடுகின்றன. நாம் அதை பழைய உபயோகப்படுத்தாத பொருட்கள் வைக்கும் இடத்தில் போட்டு விடுகிறோம். இத்தகைய பொருட்களை தூக்கிப் போட நினைத்தாலும் அதில் உள்ள அழகிகளின் படங்கள் மற்றும் அதன் வண்ணங்கள், அதன் பளபளப்பான காகிதங்கள் நம்மை பத்திரபடுத்தி வைக்கத் தூண்டுகின்றன. இந்த வகை பேப்பர்களை நாம் வேறு ஏதேனும் உபயோக பொருளாக மாற்றி அதை பயன்படுத்தலாம். இப்படி பழைய காலண்டர்களை கொண்டு ஏதேனும் ஆக்கப்பூர்வமாக செய்ய நினைத்ததுண்டா?
சிறிதளவு யோசனையும், கொஞ்சம் படைப்புத் திறனும் இருந்தால் போதும், உங்கள் பழைய காலண்டர்களை வேறு பொருட்களாக மாற்றி பயன்படுத்த முடியும். உங்கள் குழந்கைளுக்கும் பல காகித கைவினைப் பொருட்களை செய்யவும் சொல்லித் தர முடியும். பழைய காலண்டர்களில் உள்ள பொம்மை படங்கள் மற்றும் பூ படங்களை கொண்டு புத்தகங்களையும் அதன் மேலட்டையையும் அலங்கரிக்க முடியும். இவ்வாறு பல உபயோகங்கள் பழைய காலண்டர்களுக்கு உள்ளது.
இனிமேல் பழைய காலண்டரை தூக்கி போடாமல் அதை நல்ல விதத்தில் பயன்படுத்துங்கள். இதற்காக சிறிது நேரம் செலவழித்து காலண்டர்களை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயனுள்ளதாகவும் அழகுபடுத்துபவையாகவும் பயன்படுத்தலாம். உங்களது படைப்புத் திறனைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்து அதை பின்பற்றுங்கள். கீழ்வரும் பகுதியில் சில ஐடியாக்களை நாங்கள் கொடுத்துள்ளோம். இவற்றை செய்து பாருங்கள்!

புக் மார்க்
பழைய காலண்டர் மூலம் புத்தக பக்கங்களை அடையாளம் காண உதவும் புக் மார்க் செய்ய முயற்சியுங்கள். வண்ணமயமான படங்கள் கொண்ட காகிதம் மூலம் புக் மார்க் தயாரிக்கலாம். காகிதத்திற்கு பின் மேலே ஒரு அட்டையை ஒட்டினால் அது இன்னும் வலிமையுடன் இருக்கும்.

பிளேஸ் மேட்
பழைய காலண்டர்களை பயன்படுத்த புதுமையான வழி அதை பிளேஸ்மேட்டாக உபயோகிப்பது தான். அதாவது ‘மௌஸ் பேட்', டேபிள் மேட் ஆகிய பொருட்களை வாங்குவதற்கு பதிலாக இந்த பளபளப்பான பேப்பர்கள் மூலம் இத்தகை பொருட்களை செய்யலாம். அந்த பேப்பரில் உள்ள படத்தை மட்டும் வெட்டியும் இதை செய்யலாம்.

சுவற்றில் தொங்கவிடலாம்
பழைய காலண்டர்கள் பலவற்றில் பிரபலமான படங்கள் மற்றும் பிரபலமானவர்களின் படங்கள் அமைந்திருக்கும். இந்த படங்களை வெட்டி அதை பிரேம் செய்து நமது வீட்டு சுவர்களில் அலங்கார பொருளாக மாட்டி பயன்படுத்தலாம். இவ்வாறு நமது வீட்டை பிரபலமான படங்களை தாங்கிய சுவர்களாக மாற்றலாம்.

எண் விளையாட்டு
பொதுவாக காலண்டர்களில் உள்ள நம்பர்கள் பெரிதாக இருக்கும். அதை எடுத்து நாம் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டலாம். காட்சி அட்டைகளை (Flash Cards) செய்ய முயும். பேப்பரின் பின்புறம் ஒரு திடமான அட்டையை ஒட்டுவதன் மூலம் அவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். இந்த முயற்சியில் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைவர்.

தபால் உறைகள்
கடைகளில் விற்பனை செய்யப்படும் தபால் உறைகளை வாங்கி பணத்தை வீண் செய்யாமல் இத்தகைய காகிதங்கள் மூலம் நீங்களாகவே உறைகளை தயார் செய்யலாம். சில சிறிய மற்றும் எளிய மடிப்புக்களை செய்தால் உங்களுக்கான தபால் உறைகள் தயாhர்.

அன்பளிப்பு உறை (Gift-wrap)
பழைய காலண்டர்களின் படங்களை கொண்டு அதை ஒரு காகிதத்தில் மொத்தமாக ஒட்டி 'கொலாஜ்' செய்து ஒரு அழகான அன்பளிப்பு உறையாக மாற்ற முடியும். இத்தகைய பளபளப்பான வண்ண காகிதங்களை கொண்டு ஒருவருக்கு கொடுக்கும் அன்பளிப்பிற்கு உறைகள் செய்ய உதவும்

காகித பை
இந்த காகிதங்களை கொண்டு எளிய காகித பைகளை செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது சுற்றுச்சூழலிற்கு உங்களது பங்கை சிறப்பாக செய்கிறீர்கள். சுற்றுச் சூழலை மாசு படுத்தாமல் காகிதத்தையும் பைகளை செய்வதற்கு பயன்படுத்தி மகிழலாம். இதை பரிசுகளையும் அன்பளிப்புகளையும் தாங்கி செல்ல உதவியாக இருக்கும்.

போட்டே ஸ்டேண்ட்
மேசை காலண்டரை, உங்களது படைப்பு திறனை பயன்படுத்தி பழைய புகைப்படங்களை அதில் ஒட்டி வைக்கலாம். இதை மேசையில் போட்டே ஸ்டேண்டாக வைத்து உங்கள் அறையை அழகுபடுத்தலாம்.

பெயர் எழுதும் அட்டை
பரிசுகள் கொடுக்கும் போது பெயரை எழுதுவோம். அதை பழைய பளபளப்பான காகிதங்களை கொண்டு செய்யலாம். பரிசுப்பொருட்களுக்கு மட்டுமல்லாமல் நம் குழந்தைகளின் பள்ளி புத்தகங்களிலும் பெயர் ஒட்டி வைக்கும் லேபிள்களாக பயன்படுத்தலாம். அதில் உள்ள சிறிய வண்ண படங்களையும் லேபிள்களில் பயன்படுத்தலாம். லாமினேட் செய்யப்பட்ட பெயர் ஒட்டியை பரிசில் ஒட்டினால் அவை மேலும் அழகூட்டுபவையாக இருக்கும்.

கைவினை பொருட்கள்
காகிதத்தை கொண்டு பல கைவினை பொருட்களை செய்ய முடியும். இதை பள்ளியில் உள்ள பிராஜக்ட்டிற்கும் பயன்படுத்த முடியும். இத்தகைய எளிமையான பொருட்கள் மற்றும் பழைய காகிதங்களை கொண்டு செய்யப்படும் கைவினை பொம்மைகள் குழந்தையின் படைப்புதிறனை மிகுதிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications