Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு
விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்

மணம் மயக்கும் மலர்கள்
மேஜையின் மீது சிறிய அளவிலான கிண்ணம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மலர்களைப் போட்டு வைக்கலாம். வண்ணமயமான இந்த மலர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சிறிய பூ ஜாடியை வைத்து அதில் பல வண்ண மலர்களால் அலங்கரிப்பது அறைக்கு பளிச் தோற்றத்தை ஏற்படுத்தும். மேஜையின் வடிவத்திற்கு தக்கவாறு ஏற்ற மலர்களால் அலங்கரிப்பது அழகை அதிகரிக்கும்.
போன்சாய் மரங்கள்
தற்போது போன்சாய் மரங்களினால் அலங்கரிப்பது அதிகரித்து வருகிறது. எனவே மேஜையின் நடுவே பூக்களைக் கொண்டும் , போன்சாய் மரங்கள் மூலமும் அலங்கரிக்கலாம். காய்கறிகள், பழங்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம், அது வரவேற்பரையின் அழகை அதிகரிக்கும். வருபவர்கள் எடுத்த உண்ண வசதியாகவும் இருக்கும்.
மன அமைதி தரும்
மேஜையின் நடுவில் மெழுகுவர்த்தியால் அலங்கரிப்பது, எழிலோடு, ஸ்டைலாகவும் இருக்கும். மெழுகுவர்த்தி ஏற்றுவது மனதிற்கு அமைதியை தரும். அதுவும், வரவேற்பு அறையின் மேஜையில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியை மாலை நேரத்தில் அதனை ஏற்றி வைப்பது அழகோடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.
புத்தகங்கள், நாளிதழ்கள்
புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவைகளை மேஜை மீது அழகாக அடுக்கி வைப்பது வரவேற்பறையின் அழகினை அதிகரிக்கும். படிகங்களினால் ஆனா பொருட்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம்.
பாரம்பரியப் பொருட்கள்
மேஜை மீது பாரம்பரியம் மிக்க விரிப்புகளை பயன்படுத்துவது அழகை அதிகரிக்கும். சணல் மேஜை விரிப்பை பயன்படுத்துவது அழகாக இருப்பதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும். வெண்கலத்தான் ஆன சிலைகளை மேஜை மீது அலங்கரிப்பது பாரம்பரியமாக இருப்பதோடு அழகை அதிகரிக்கும். ஆனால் அது ஸ்டைலுக்கு மட்டுமே ஏற்றது.
எளிமையே அழகு
மேஜையில் இடம் காலியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் கொண்டு நிரப்பவேண்டாம். எளிமையான சிறிய அளவிலான பொருட்களே அழகே அதிகரிக்கும். உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் உள்அலங்கார நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications