Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
படுக்கையறை அழகானால் மனம் அமைதியடையும்!

படுக்கை அறை உள் அலங்காரம்
படுக்கை அறை என்று பார்த்தோமானால் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அறை இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்லது. ரெடிமேட் அலமாரிகளுக்கு பதிலாக சுவரில் இருக்குமாறு அலமாரிகளை கட்டி மரக் கதவுகளை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். குளியல் அறை ஒவ்வொரு படுக்கையறையிலும் இருந்தால் நல்லது. அல்லது குறைந்தது இரண்டாவது இருந்தால் நல்லது. அதில் ஒன்று வீட்டின் பொதுவான இடத்தில் இருந்தால் விருந்தினருக்கும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
இலவம்பஞ்சு மெத்தை தலையணை
மாஸ்டர் படுக்கை அறையில் தேர்ந்தெடுக்கும் மெத்தை சரியானதாக இருக்க வேண்டும். அது இலவம் பஞ்சு மெத்தையாக இருக்கும் பட்சத்தில் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆடம்பரமான மெத்தையாக இல்லாமல் பாரம்பரியத்தை காக்கும் வகையில் உடல் நலத்திற்கு ஏற்றதாக இருப்பது நல்லது.
படுக்கையறைக்கு தேவையான தலையணைகளை சரியானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அமைதியோடும், உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது தலையணை. எனவே வர்ணங்களோடு, சிறியதாக, தலைக்கு ஏற்ற உயரத்தில் தேர்ந்தெடுப்பது அவசியம்
இள வர்ணங்கள்
படுக்கையறை அலங்காரத்தில் கற்பனைத்திறன் அவசியம். சுவர்களுக்கு பூசும் வர்ணங்கள் கண்களை உறுத்தாத இள நிறங்களில் இருப்பது அவசியம். மின் விளங்குகள் மைல்டாக குறிப்பாக நீல நிறத்தில் இருப்பது ஏற்றது என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.
சில நேரங்களில் அமர்ந்து ரிலாக்சாக பேசுவதற்கு சிறிய அளவில் பெஞ்ச் அதுவும் மரத்தில் செய்யப்பட்டதாக இருந்தால் அறையை அடைக்காத வகையில் நேர்த்தியாக இருக்கும்.
சுவர் ஓவியங்கள்
கண்ணாடியில் வறைந்த சுவர் ஓவியங்களை மாட்டிவைப்பது அறைக்கு கூடுதல் அழகைத் தரும் அதுவும், கருப்பு, வெள்ளை படங்களாக இருந்தால் அறைக்கு அழகு கூடும்.
படுக்கையின் தலைப்பகுதிகளில் கண்ணாடிகளை வைத்திருப்பது அழகோடு, அமைதியான சூழலையும் தரும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள். இந்த எளிமையான அலங்காரங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவையாகவும் படுக்கையறையை அழகாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
