Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
வீட்டுல ரொம்ப குளிருதா? இந்த மாதிரி ட்ரை பண்ணலாமே!!!
இன்றைய நவீன உலகில் அனைத்துமே மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. மேலும் இந்த மாதிரியான வித்தியாசத்தை பார்க்கும் போது இப்படியும் உள்ளதா என்று பலர் கேட்கும் வகையில் பல தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தகையவற்றில் ஒன்று தான் அறை வெப்பமூட்டி. என்ன புதிதாக இருக்கிறதா? ஆம், குளிர்காலத்தில் வீட்டில் கூட இருக்க முடியாத வகையில் குளிரானது நடுங்க வைத்துவிடும். தரையில் கூட காலை வைக்க முடியாது, அந்த அளவில் தரையே அவ்வளவு குளிர்ச்சியுடன் இருக்கும். எனவே அந்த குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் எவ்வளவு தான் மின்சார வெப்பமூட்டி வந்தாலும், இயற்கையாக விறகை வைத்து அப்போது உண்டாகும் வெப்பத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.
ஆனால், அதுப் போன்று விறகை வைத்து வீட்டிலேயே இயற்கையான வெப்பமூட்டிகளை செய்வதற்கு பல நவீன டிசைன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இந்த மாதிரியான டிசைன்கள் வீட்டை அலங்கரிப்பதிலும் முக்கியத்துவமுடையதாக உள்ளது.

கேபினட் வெப்பமூட்டி
இந்த மாதிரியான அறை வெப்பமூட்டி, கேபினட்டின் ஒரு பகுதியில் இருப்பது போல், அழகாகவும், பார்ப்பதற்கே வித்தயாசமானதாகவும் இருக்கும்.

ஏசி போன்ற வெப்பமூட்டி
இந்த டிசைனானது, எப்படி ஏசி குளிர்ச்சியை வெளிப்படுத்துகிறதோ, அதேப்போன்று இது வெப்பத்தை வெளிப்படுத்தும். மேலும் இந்த வெப்பமூட்டியானது அறைக்கு சரியான அளவில் வெப்பத்தை பரப்பும்.

விண்டேஜ் வெப்பமூட்டி
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இது விண்டேஜ் வெப்பமூட்டியாக இருக்கலாம். மேலும் இந்த வெப்பமூட்டி, நவீன புகைக் கூண்டுகளைக் கொண்டது.

சிறிய வெப்பமூட்டி
இந்த வடிவ வெப்பமூட்டி பார்ப்பதற்கு ஒரு பொம்மைப் போல், சுவற்றில் அழகாகப், புகைக்கூண்டுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.

கிச்சன் வெப்பமூட்டி
இந்த வெப்பமூட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படியெனில் இது சமையலறையில் பொருத்தப்பட்டிருப்பதோடு, கெண்டி (Kettle) என்னும் ஒரு வகையான பாத்திரத்தை வெப்பப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாடிப்படி அடியில்
இந்த வடிவ வெப்பமூட்டி மாடிப்படியின் அடியில் உள்ள இடமானது வீணாகாமல், அங்கு பொருத்தப்படும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்போது அந்த நவீன வெப்பமூட்டிகளில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பார்த்து, உங்கள் வீட்டிற்கு எந்த மாதிரியான வெப்பமூட்டியை வைக்கலாம் என்று முடிவெடுங்கள்.



Click it and Unblock the Notifications
