Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த பொருள்கள் உங்க கிட்சன்ல இருக்கா? அதை உடனே தூக்கிபோடுங்க.. கேன்சர் வரக்கூடுமாம்..!
உலகில் அதிகமான நோயாளிகளின் உயிரைக் கொல்லும் நோய்களில் ஒன்று புற்றுநோய் ஆகும். அதிலும் சமீபக்காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.. புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதனால், இதுபோன்ற பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. வாங்க அது என்னென்ன பொருட்கள்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் மருத்துவர் சொன்ன விஷயத்தை கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்.. ஆம் தினமும் நாம் வீட்டில் பயன்படுத்தும் இந்த 3 பொருட்களை பற்றிதான்.. இந்த 3 பொருட்களுமே புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கும் ன்னமை கொண்டுள்ளன என கூறியுள்ளார்.. அந்த 3 பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. முதலாவதாக நாம் அனைவரின் வீட்டிலும் பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள் இருக்கும்.. இது உடலுக்கு நல்லதல்ல.. பல ஆய்வுகளின்படி, பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகளைப் பயன்படுத்துவது மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் உணவில் சேர வழிவகுக்கும். இந்த பிளாஸ்டிக் துண்டுகள் உடலில் நுழைந்து புற்றுநோய் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அதற்கு பதிலாக உட்டன் கட்டிங் போர்டுகளை பயன்படுத்தலாம்..
2. அடுத்தது மெழுகுவர்த்திகளை நம் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடாது.. நாம் வீட்டில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகள் மிகவும் ஆபத்தானவை என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார். இந்த மெழுகுவர்த்திகளில் phthalates எனப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன.மேலும் வீட்டிற்குள் வரும் காற்றையும் உட்புற காற்றை மாசுபடுத்துகிறது.
3. அந்த 3வது பொருள் என்ன தெரியுமா? நான்-ஸ்டிக் பாத்திரங்கள்தான் .. கண்டிப்பாக கீறப்பட்ட அல்லது துண்டாக்கப்பட்ட நான்-ஸ்டிக் பாத்திரங்கள் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களை வெளியிடுகின்றன. இந்த பான்களில் PFAகள் உள்ளன. இவை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவை சேதமடையும் போது, இந்த ரசாயனங்கள் உணவில் உறிஞ்சப்படுகின்றன என்று டாக்டர் சேத்தி கூறியுள்ளார். கீறப்பட்ட பாத்திரங்கள் எப்போதும் இரசாயனங்களை (PFAs) வெளியிடுகின்றன. அவை கல்லீரல் நோய், சிறுநீரக புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மேலும் இந்த இரசாயனங்கள் கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இருந்து வெளியாகும் நச்சுப் பொருட்கள் உணவில் உறிஞ்சப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு சிறிய கீறல் கூட 9,100 பிளாஸ்டிக் துண்டுகளை வெளியிடுகிறது. அதனால்தான் துருப்பிடிக்காத ஸ்டீல்களைப் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த பாத்திரங்களில் பயன்படுத்த மிகவும் எளிதானது. சமைக்க குறைந்த நேரத்தை மட்டுமே எடுக்கும்



Click it and Unblock the Notifications