Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பெங்களூருவில் 6 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று.. உங்களுக்கும் வரக்கூடாதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..
Zika Virus In Bangalore: வடஇந்தியாவில் பரவி வந்த ஜிகா வைரஸ், தற்போது தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்து, பெங்ளூருவில் நுழைந்துவிட்டது. அதுவும் இந்த மாதம் பெங்களூருவில் மட்டும் சுமார் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இதில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள். இந்த 4 பெண்களுள் 2 பெண்கள் கர்ப்பிணிகள்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா தொற்று ஏற்பட்டால் அது வயிற்றில் வளரும் குழந்தைகளில் மைக்ரோசெபாலி மற்றும் பிறவி குறைபாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இத்தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

இந்த ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே பகுதியின் அருகருவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு பெங்களூருவில் உள்ள ஜிகானியின் அருகில் தான் கண்டறிய்ப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நலமாகவே உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரிடமும் டெங்கு காய்ச்சலுக்கு என்னனென்ன அறிகுறிகள் தெரியுமோ, அந்த அறிகுறிகள் தான் தென்பட்டன. எப்படி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அவ்வாறே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால், வலி நிவாரண மாத்திரைகள் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்
ஜிகா வைரஸ் என்பது டெங்குவைப் போன்றே கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த பாதிப்பை ஏடிஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் தான் பரப்புகின்றன. இந்த வகையான கொசுக்கள் பகல் வேளையில் தான் ஒருவரை அதிகம் கடிக்கும். இது தவிர இந்த வைரஸ் கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு, பாலியல் தொடர்பு, இரத்தம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலமும் பரவும்.
ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரிடம் எவ்வித அறிகுறிகளும் தெரியாது. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், தொற்று ஏற்பட்ட 3-14 நாட்களுக்கு பின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அது அரிப்பு, காய்ச்சல், தலை வலி மற்றும் மூட்டு வலி, விழி வெண்படல அழற்சி, உடல்நலக் குறைவு, தசை வலி என தெரியும். இந்த அறிகுறிகள் 2-7 நாட்கள் வரை நீடிக்கும். இந்த வைரஸ் தொற்றை இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களின் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
ஜிகா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
1. கொசு விரட்டிகளை பயன்படுத்தவும்
கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதால், கொசுக்கள் கடிக்காமல் இருக்க கை, கால்களில் கொசுக்களை விரட்டும் திரவங்களை பயன்படுத்தலாம். மேலும் வீட்டில் பல்வேறு விதமான கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தலாம்.
2. முழு ஆடைகள் அணியவும்
ஜிகா வைரஸ் உங்கள் சுற்றுப்புறங்களில் பரவிக் கொண்டிருந்தால், கொசுக்கள் கடிக்காமல் இருக்க முழு கை, முழு கால் ஆடைகளை அணியுங்கள். அடர் நிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, வெளிர் நிறங்களில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். இதன் மூலம் கொசுக்கடியைத் தவிர்க்கலாம்.
3. வெளியே சுற்றாதீர்
ஜிகா வைரஸை பரப்பும் கொசுக்கள் பகல் வேளையில் தான் அதிகம் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே இந்த நேரங்களில் வீட்டிற்கு வெளியே கொசுக்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு அருகில் உட்கார்ந்து பேசுவதைத் தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
4. கொசுவலைகளை பயன்படுத்தவும்
வீட்டில் என்ன தான் கொசு விரட்டிகளை பயன்படுத்தினாலும், தூங்கும் போது கொசுவலையினுள் தூங்குங்கள். இந்த வலைகள் கொசுக்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பைத் தரும். தூங்கும் போது உங்களை எந்த ஒரு பூச்சியும் கடிக்காமல் தடுக்கும்.
5. ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு திரையை அமைக்கவும்
பகல் வேளையில் இந்த கொசுக்கள் கடிப்பதால், வீட்டை எந்நேரமும் மூடி வைத்திருக்க முடியாது. எனவே ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை திரையை அமைத்துக் கொள்ளுங்கள். இது கொசுக்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும்.
6. நீர் தேக்கத்தைத் தவிர்க்கவும்
தேங்கிய நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருந்தால் உடனே அவற்றை சரிசெய்ய பாருங்கள். மேலும் வீட்டில் வாளியில் நீரை நிரப்பி வைத்திருந்தால், அவற்றை மூடி வையுங்கள் அல்லது உடனே அப்புறப்படுத்துங்கள்.
7. பாதுகாப்பான உடலுறவு
ஜிகா வைரஸ் பாலியல் தொடர்பு மூலமும் பரவுகிறது. எனவே உங்கள் துணைக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தால், ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரை உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











