Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
2023 ஆம் ஆண்டில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற டாப் 5 நோய்கள்!
Year Ender 2023: என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் விதவிதமான நோய்கள் உலகெங்கிலும் பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் பல நோய்கள் நம் காதுகளை எட்டுவதில்லை. இன்னும் பல நோய்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வகையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுவும் 2019-க்கு பிறகு 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தான் முன்னணியில் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் இந்த கொரோனா தொற்றினால் அதிக உயிர்சேதம் ஏற்படவில்லை.

தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். எனவே 2023 ஆம் ஆண்டில் எந்த நோய்கள் எல்லாம் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று நீண்ட நாட்களாக பேசப்பட்டன என்பதை இப்போது காண்போம்.
மர்ம நிமோனியா
2023 ஆம் ஆண்டில் குழந்தைகளிடையே நிமோனியா வழக்குகள் அதிகமாக இருந்தன. இது நிபுணர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. அதுவும் சீனாவில் இந்த மர்ம நிமோனியாவில் மருத்துவமனைகளில் குழந்தைகள் குவிந்து இருந்தனர். இந்த நிமோனியா வழக்குகள் சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்பட்டன.
நிமோனியா பெரியவர்களையும் தாக்கும் என்றாலும், இநத மர்ம நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த நிமோனியா வைரஸ் தொற்றினால் கழந்தைகள் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று போன்ற அறிகுறிகளை அனுபவித்தனர். முக்கியமாக சீனாவில் இப்படி படிவும் நிமோனியாவைக் கண்டு, இந்தியாவில் உள்ள மக்களும் அச்சம் அடைந்தனர்.
திடீர் மாரடைப்பு
முன்னாள் பிரபஞ்ச அழகியான நடிகை சுஷ்மிதா சென் முதல் நடிகர் புனித் ராஜ்குமார் வரை ஏராளமான இந்திய பிரபலங்கள் 2023-ல் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவற்றில் அதிர்ஷ்டவசமாக சிலரே உயிர் பிழைக்க முடிந்தது. சொல்லப்போனால் உலகிலேயே இந்தியர்களுக்கு தான் கரோனரி தமனி நோயை உருவாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
ஏனெனில் இந்தியர்களின் தமனிகள் சற்று சிறியதாக இருக்கும். மேலும் இந்தியர்களின் மோசமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், ஃபாஸ்ட் புட், சிகரெட், அதிகப்படியான மன அழுத்தம், அதிகமாக மது அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவையும் மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மேலும் கோவிட்-19 தொற்றுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதும் ஒரு முக்கிய காரணம். மேலும் பல ஆய்வுகள் COVID-19 மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன. அதுவும் இந்த தொடர்பு இளைஞர்களிடையே நன்கு தென்பட்டன. ஆகவே இந்த மாரடைப்பைத் தடுக்க சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை, இரத்த பரிசோதனை, எக்கோ ஸ்கேன் டிரெட்மில் சோதனை போன்றவற்றை செய்ய வேண்டும்.
கோவிட்-19
2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை பலவாறு உருமாற்றமடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஊடக அறிக்கைகளின் படி, ஓமிக்ரான், பைரோலா ஆகிய கொரோனா வைரஸின் வகைகளால் அதிகம் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் கொரோனாவால் பெரிய பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், இந்த ஆண்டின் இறுதியில் JN.1 என்ற புதிய மாறுபாட்டினால் உலகளவில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த புதிய மாறுபாடு 2024-ஆம் ஆண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV)
மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஜலதோஷம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இது பெலும்பாலும் மேல் சுவாச தொற்றுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது நிமோனியா மற்றும் ஆஸ்துமா போன்ற கீழ் சுவாசக்குழாய் நோய்களை ஏற்படுத்தும். HMPV தொற்றானது COPD உள்ளவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. பெரும்பாலும் இந்த வைரஸால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் அறிகுறிகள் கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தக்காளி காய்ச்சல்
தக்காளி காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படுகிறது, அறிக்கைகளின் படி, தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடலில் அரிப்புகளுடன் சிவப்பு நிற தடிப்புகளும் காணப்படும். மேலும் இந்த தொற்று உடலை வறண்டு போகச் செய்து, வாயை வறட்சி அடையச் செய்யும். இது தவிர, உயர் காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி மற்றும் வாய்ப்புண் போன்ற அறிகுறிகளும் தென்படும். தக்காளி காய்ச்சலின் அடிப்படை அறிகுறி கைகள், முழங்கால், முழங்கை, இடுப்பு பகுதிகளில் நிறமாற்றம் ஏற்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நோய்களைத் தவிர, டெங்கு, ஜிக்கா, சிக்கன்குனியா போன்றவற்றாலும் 2023-ல் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். இவையெல்லாம் காலநிலை மாற்றங்களால் பரவுகின்றன. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை சந்திப்பதாக கூறுகின்றனர். சில வழக்குகளில், இது நரம்பு மண்டலத்தையும் சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
