Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு பர்கின்சன் நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
World Parkinson's Day 2025: உலகளவில் மிகவும் பரவலாக காணப்படும் நரம்பு சிதைவு நோய்களில் ஒன்று தான் பர்கின்சன் நோய். இது பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் நிலையாக இருந்தாலும், ஆரம்ப காலத்திலும் ஏற்படலாம். 1817 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜேம்ஸ் பார்கின்சனின் 'எசே ஆன் தி ஷேக்கிங் பால்சி' என்ற கட்டுரை, பார்கின்சனை ஒரு மருத்துவ நிலையாக முதன்முறையாக அங்கீகரித்தது.
இந்த ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளை தான் ஒவ்வொரு ஏப்ரல் 11 ஆம் தேதியும் உலக பார்கின்சன் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் பர்கின்சன் நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். இன்று உலக பர்கின்சன் நோய் என்பதால், இந்த பர்கின்சன் நோய் என்றால் என்ன மற்றும் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.

பர்கின்சன் நோய் என்றால் என்ன?
பர்கின்சன் நோய் என்பது மைய நரம்பு மண்டலத்தை சிதைக்கின்ற ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கங்கள், பேச்சு மற்றும் மற்ற உடல் செயல்பாடுகள் சீராக இயங்காது. இந்த பர்கின்சன் நோயை நடுக்குவாதம் என்றும் அழைப்பர். இந்த நிலையில் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சப்ஸ்டாண்டியா நிக்ராவில் டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்களின் இழப்பால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது.
ஒருவரது உடலில் டோபமைனானது இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு வேதியியல் பொருளாகும். இதன் அளவுகள் குறையும் போது, உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும். இந்த பர்கின்சன் நோயின் பொதுவான அறிகுறிகளாக நடுக்கம், தசை விறைப்பு, இயக்கத்தில் மந்தநிலை போன்றவை இருந்தாலும், வேறு சில எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகளும் உள்ளன.
பர்கின்சன் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்
1. தூக்கமின்மை
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படக்கூடும். ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, விறைப்பு, வலி மற்றும் ஓய்வற்ற கால் நோய்க்குறி ஆகியவற்றால் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இப்படி ஒருவர் இரவு நேர தூக்கத்தை தொலைத்துவிட்டால், பகலில் மிகுந்த சோர்வையும், சில சமயங்களில் மயக்கத்தையும் அனுபவிக்கலாம்.
2. வாசனை உணர்வை இழப்பது
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு இருந்த அளவுக்கு வாசனை உணர்வு இல்லாமல் இருப்பதை சந்திக்கலாம். உதாரணமாக, தனக்கு பிடித்த நல்ல வாசனையான உணவுகளின் மணத்தை அனுபவிக்க முடியாமல் சிரமப்படலாம். சில நேரங்களில் நடுக்கம், விறைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வாசனை இழப்பு பிரச்சனையை சந்திக்கலாம்.
3. கையெழுத்தில் மாற்றம்
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அசைவுகள் முன்பை விட குறைவாக இருக்கும். அதாவது முன்பை விட குறைவான வலிமையுடன் கைகள் இருப்பதை அனுபவிக்கலாம். இதனால் ஒருவரது கையெழுத்து வழக்கத்தை விட சிறியதாகவோ அல்லது எழுதும் போது கொஞ்சம் கொஞ்சமாக அளவு குறைவதையோ சந்திக்க நேரிடும்.
4. சிறுநீர்ப்பை அல்லது குடலில் சிக்கல்கள்
சிறுநீர்ப்பை அல்லது குடலில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு பர்கின்சன் நோய் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டால் அல்லது இரவு நேரத்தில் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்த வேண்டியிருந்தால், பர்கின்சன் நோய் இருக்க வாய்ப்புள்ளது.
5. மனச்சோர்வு
நீண்ட காலமாக மிகுந்த சோகம் அல்லது வெறுமையான உணர்வை அனுபவித்து வந்தால், உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம். சொல்லப்போனால் பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சில சமயங்களின் அதன் பிற அறிகுறிகளை சந்திப்பதற்கு முன்பே மனச்சோர்வை சந்திக்க நேரிடும். மனச்சோர்வானது 'மோட்டார் அல்லாத ஏற்ற இறக்கங்களின்' அறிகுறியாகவும் இருக்கலாம்.
6. பதட்டம்
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதட்டத்தை அனுபவிக்கக்கூடும். அதுவும் இந்த பதட்டமானது ஆரம்ப காலத்தில் இருக்கும். அதுவும் படபடப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வியர்த்தல்,மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், கவலை, பயம் போன்ற அசௌகரிய உணர்வுகளை சந்திக்க நேரிடும்.
7. மிகுந்த சோர்வு
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். இப்படியான சோர்வு பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேரை பாதிக்கிறது. அதுவும் ஒரு நாள் நன்றாகவும், ஆரோக்கியமாகவும் உணரலாம். மறுநாள் எந்த வேலையும் செய்ய முடியாத அளவு சோர்வை சந்திக்கலாம். எனவே எப்போதும் உடல் சோர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
8. நடுக்கம்
நடுக்கம் என்பது உடலின் ஒரு பகுதியை பாதிக்கும் ஒரு கட்டுப்பாடற்ற இயக்கமாகும். அதுவும் பர்கின்சர் நடுக்கம் கையில் தொடங்கி பின் கையின் மற்ற பகுதிகளையோ அல்லது உடலின் அதே பக்கத்தில் உள்ள பாதத்தையோ பாதிக்கும் வகையில் பரவுகிறது. இந்த நடுக்கத்திற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் அதை நிபுணரின் உதவியுடன் நிர்வகிக்கலாம்.
9. இயக்கத்தில் மந்தநிலை
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் விஷயங்களை செய்ய நிறைய நேரம் எடுக்கும். அதாவது, நடப்பதாக இருந்தால், அந்த நடை ஒரு அசைவு போல மாறலாம் அல்லது நடையின் வேகம் குறையலாம். தினசரி வேலைகளை செய்ய அதிக நேரம் எடுக்க நேரிடும்.
மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். நிறைய பேருக்கு பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டால் நீண்ட காலம் வாழ முடியுமா என்ற கேள்வி இருக்கும். உண்மையில் பார்கின்சன் நோய் நேரடியாக மக்களை இறக்கச் செய்வதில்லை. ஆனால் இந்த நிலை உடலில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் சிலரை கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கு ஆளாக்கக்கூடும். ஆனால் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுடன், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இப்போது சாதாரண அல்லது கிட்டத்தட்ட சாதாரண ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளனர். முக்கியமாக யோகா போன்ற பயிற்சிகளின் மூலமும் பர்கின்சன் நோயை திறம்பட நிர்வகிக்கலாம் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications