Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. அது கருப்பை புற்றுநோயா இருக்கலாம்..
World Ovarian Cancer Day 2025: பெண்களைத் தாக்கும் மூன்று முக்கியமான புற்றுநோய்கள் என்றால் அது மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகும். இதில் கருப்பை புற்றுநோய் என்பது பெண்களின் கருப்பை அல்லது ஃபாலோபியன் குழாய்களில் தொடங்கும் ஒரு வகையான புற்றுநோயாகும். இந்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இடுப்பு மற்றும் அடிவயிற்றின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த புற்றுநோயை ஆரம்ப காலத்தில் கண்டறிவது என்பது கடினமான ஒன்று. அப்படியே இந்த புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்தாலும், அது மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், நிறைய பேர் அவற்றைப் புறக்கணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சொல்லப்போனால் மற்ற வகை புற்றுநோய்களை ஆரம்பத்தில் கண்டறிய ஸ்கிரீனிங் முறைகள் உள்ளன. ஆனால் கருப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய எந்த ஒரு ஸ்க்ரீனிங் முறைகளும் இல்லை. இதனால் இந்த வகை புற்றுநோயை பெரும்பாலும் ஸ்டேட்-3 நிலையில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுவும் இந்த கருப்பை புற்றுநோய் பெண்களை எந்த வயதிலும் பாதிக்கலாம், குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலக கருப்பை புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பெண்களை அதிகம் தாக்கும் கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்ப்பு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இந்த கருப்பை புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதையும், யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து காண்போம். இது தவிர கருப்பை புற்றுநோயாளிகளுக்கு அக்குபஞ்சர் எந்த வகையில் உதவி புரிகிறது என்பது குறித்தும் காண்போம்.
கருப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது?
* கருப்பை அல்லது மார்பகப் புற்றுநோயின் குடும்ப வரலாறு
* சீரற்ற மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
* எண்டோமெட்ரியோசிஸ்
* கர்ப்பமாகாமல் இருப்பது
* ஹார்மோன் மாற்று சிகிச்சை
* உடல் பருமன்
* புகைப்பிடிப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.
கருப்பை புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்:
1. வயிற்று உப்புசம்
மிகவும் குறைவாக சாப்பிட்டாலும், வயிறு உப்புசம் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் வயிற்றைச் சுற்றி இறுக்கமாக உணர்ந்தாலோ, அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் வயிற்றின் அளவு சுருங்காமல், அதிகரித்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோய், சிறுநீர் பாதை தொற்று போன்ற பல பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் அது சிறுநீர்ப்பையில் வளரும் கட்டியின் அழுத்தத்தாலும் ஏற்படலாம். அதுவும் கருப்பை புற்றுநோய் செல்கள் சிறுநீர்ப்பை சுவரின் வெளியே வளர்ந்தால், அது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கத் தூண்டலாம்.
3. இடுப்பு வலி
இடுப்புப் பகுதியில் வலி அல்லது அடிவயிற்றின் கீழ் பகுதியில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தை சந்தித்தால், அது கருப்பையில் வளர்ந்து வரும் கட்டியைக் குறிக்கலாம். இருப்பினும் இடுப்பு வலி பல ஆரோக்கிய பிரச்சனைகளினாலும் வரக்கூடும். ஆனால் கருப்பை புற்றுநோயால் ஏற்படும் இடுப்பு வலி பெரும்பாலும் தொடர்ந்து, தெளிவற்றதாக இருக்கும். இப்படி தொடர்ந்து கடுமையான இடுப்பு வலியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
4. உடல் சோர்வு
மற்ற வகை புற்றுநோய்களைப் போலவே, கருப்பை புற்றுநோயும் மிகுந்த சோர்வை ஏற்படுத்தலாம். எனவே எந்த வேலையுமே செய்யாமல் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
5. முதுகு வலி
ஒருவருக்கு முதுகு வலி பல பிரச்சனைகளால் ஏற்படலாம். ஆனால் சரியாக தூங்க முடியாத அளவில் கீழ் முதுகில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை சந்தித்தால், அது ஒரு கொடிய நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
6. மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் திடீரென்று பெரிய மாற்றத்தைக் காண்டால், அதாவது மாதவிடாய் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து காரணத்தை அறிய வேண்டும். பெண்கள் எப்போதும் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கை சந்தித்தால், புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து காரணத்தை அறிய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் சாதாரணமாக சந்திக்கும் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் கருப்பை புற்றுநோய் உள்ள பெண்கள் அனுபவிக்கும் வலி மிகவும் கொடுமையாக இருக்கும். இந்நிலையில் இந்த புற்றுநோய்க்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்து மாத்திரைகளை எடுக்கும் அதே வேளையில் அக்குபஞ்சர் சிகிச்சையையும் மேற்கொண்டால் கருப்பை புற்றுநோயால் சந்திக்கும் வலியைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? இப்போது கருப்பை புற்றுநோயால் சந்திக்கும் வலியைக் குறைக்க அக்குபஞ்சர் எப்படி உதவுகிறது என்று அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர்.எம். ஆனிஷா சபிகா தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
கருப்பை புற்றுநோயில் அக்குபஞ்சர்
பொதுவாக கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள் கடுமையான வலியை சந்திப்பார்கள். அதே வேளையில் புற்றுநோய் கட்டிகள் வளர்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் பலவீனமாக இருக்கும். இந்நிலையில் நோயாளிகள் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப அக்குபஞ்சரில் உள்ள சிகிச்சையை மேற்கொண்டால், நிச்சயம் வலியைக் குறைக்கலாம் என்று அக்குபஞ்சர் நிபுணர் ஆனிஷா சபிகா கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











