Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக பிரச்சனை இதய நோயை ஏற்படுத்த போகுதுன்னு அர்த்தம்.. உஷார்..
World Kidney Day 2024: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சிறுநீரகங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், சிறுநீரக நோயைத் தடுக்கும் வழிகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு தினமும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு சிறுநீரகங்களில் பிரச்சனை இருப்பதே தெரிவதில்லை. இதன் விளைவாக நிலைமை முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி, எளிதில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட சிறுநீரக பிரச்சனையை முழுமையாக குணப்படுத்த முடியாது. அதே சமயம் இந்த நாள்பட்ட சிறுநீரக பிரச்சனையானது இதயத்தில் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும்.
சொல்லப்போனால், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டுமே சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் இருந்து தான் வரத் தொடங்குகிறது. அதுவும் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இதய செயலிழப்பும், இதய நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோயும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பலருக்கு சிறுநீரக நோய் அல்லது இதய நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் அதிகம் தெரியாமல், முற்றிய நிலையில் அறிகுறிகள் தெரிய வருகின்றன. இப்போது சிறுநீரக நோய் மற்றும் இதய நோயின் ஆபத்தை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
கண்களில் வீக்கம்
அடிக்கடி காலையில் எழும் போது கண்கள் வீக்கமடைந்து காணப்படுகிறதா? அப்படியானால் அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் நிபுணர்களின் கூற்றுப்படி, கண்களின் பின்புறத்தில் அமைந்துள்ள இரத்த நாளங்களானது இதயத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன.
இந்நிலையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அது தமனிகளுக்கு எதிராக இரத்த அழுத்தத்தை அதிகரித்து, கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும் பிரச்சனைகளை வரத் தூண்டும்.
மேலும் இப்படியான நிலை கண்களில் இரத்தக்கசிவு, மங்கலான பார்வை, வீக்கம், இரத்த உறைவு, கண்களில் உள்ள நரம்புகளில் சேதம் போன்றவற்றை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் பார்வையையே இழக்க வைத்துவிடும். எனவே கண் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயங்களை அதிகரிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, புகைப்பிடிப்பதை நிறுத்துவதை, உணவில் உப்பைத் தவிர்ப்பது மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைக்கான மருந்துகளை தவறாமல் எடுப்பதன் மூலம் இதன் அபாயத்தைக் குறைக்கலாம்.
உயர் இரத்த அழுத்தமானது சிறுநீரகங்களில் உள்ள மிகச்சிறிய வடிகட்டும் குழாய்களை சேதப்படுத்தி, அதன் விளைவாக கழிவுகளை அகற்ற முடியாமல், கழிவுப் பொருட்கள் மற்றும் திரவங்கள் இரத்தத்திலேயே தங்கிவிடுகின்றன. இப்படி இரத்த நாளங்களில் அதிகப்படியான திரவம் தேங்கினால், அதன் காரணமாக இரத்த அழுத்தம் இன்னும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறிக்கும் இதய செயலிழப்பைத் தூண்டலாம். எனவே கவனமாக இருங்கள்.
கை, கால்களில் வீக்கம்
சிறுநீரகங்களானது உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே வெளியேற்றுகின்றன. இருப்பினும், எப்போது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் உள்ளதோ, அப்போது அந்த அதிகப்படியான திரவங்கள் அப்படியே தேங்கி, ஒரு கட்டத்தில் கை வீக்கம், கால் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். எனவே அசால்ட்டாக இருக்காதீர்கள்.
இரத்தத்தில் அதிக புரோட்டீன்
தேசிய சிறுநீரக பவுண்டேணன் படி, ஒரு சிறுநீர் பரிசோதனையின் மூலம், சிறுநீரங்களில் உள்ள பிரச்சனைகளை அறிந்துவிடலாம். அதவும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான புரோட்டீன், சீழ், பாக்டீரியா மற்றும் சர்க்கரை போன்றவை எவ்வளவு உள்ளது என்பதைக் கொண்டு, சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனைகளை அறியலாம்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரது சிறுநீரில் அல்புமின் மற்றும் பிற புரோட்டீன்கள் இருந்தால், அவை சிறுநீரகங்களில் உள்ள சேதத்தைக் குறிப்பதோடு, இதய நோயால் மரணம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் குறிக்கின்றன.
அதிக கொலஸ்ட்ரால்
இரத்த நாளில் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது இரத்த நாளங்களில் அந்த கொழுப்புக்கள் அப்படியே தங்கி, இரத்த குழாய்களை சுருங்கச் செய்து, இதயத்தில் அடைப்பு அல்லது மாரடைக்கை உண்டாக்கும். அதுவும் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ஒருகட்டத்தில் நாள்பட்ட சிறுநீரக நோயால் இருமடங்கு அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வருடத்திற்கு 2 முறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
