Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
நைட் நேரத்தில் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொடிய ஹெபடைடிஸ் இருக்கு-ன்னு அர்த்தம்...
World Hepatitis Day 2024: ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் அழற்சியாகும். எப்போது கல்லீரலில் உள்ள செல்கள் காயமடைந்தாலோ அல்லது தொற்று ஏற்பட்டாலோ, இப்படி அழற்சி ஏற்படும். இப்படி ஏற்படும் அழற்சியால் கல்லீரலில் சேதம் ஏற்படக்கூடும்.
இப்படி கல்லீரலில் சேதம் ஏற்பட்டால், அது கல்லீரலின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி, அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஒருவருக்கு ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற வைரஸ்கள், அதிகமாக மது அருந்துவது, குறிப்பிட்ட மருந்துகள், நச்சுக்கள் மற்றும் ஆட்டோஇம்யூன் நிலைமைகள் போன்றவற்றால் ஏற்படலாம்.

இப்படிப்பட்ட ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று உலக ஹெபடைடிஸ் தினம் என்பதால், ஹெபடைடிஸ் இருந்தால் இரவு நேரத்தில் கால்களில் தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
இரவு நேரங்களில் மட்டும் கால்களில் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், கல்லீரலில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக இப்படியான வீக்கத்தை எடிமா என்று அழைப்பர். இவ்வாறு அடிக்கடி இரவு நேரத்தில் மட்டும் கால் வீக்கத்தை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அசாதாரண வலி மற்றும் அசௌகரியம்
ஹெபடைடிஸ் ஒருவருக்கு இருந்தால், அது ஒருவருக்கு கால்கள் மற்றும் பாதங்களில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். இந்த வலியானது மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கும். அதுவும் வலியானது தொடர்ச்சியாக நீடித்திருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
சரும எரிச்சல்
கால்கள் மற்றும் பாதங்களில் கடுமையான வறட்சியுடன், எரிச்சல் மற்றும் அரிப்பை இரவு தூங்க முடியாத அளவில் சந்தித்தால், ஹெபடைடிஸ் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இப்படியான அசௌகரியத்தை அதிகம் சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொள்வதோடு, சரும பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வாருங்கள்.
சரும நிறம் மற்றும் அமைப்புக்களில் மாற்றம்
திடீரென்று உங்கள் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள சருமத்தின் நிறத்தில் மற்றும் அமைப்புக்களில் ஏதேனும் மாற்றத்தை சந்தித்தால், அது ஹெபடைடிஸ் தொடர்பான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே உங்களின் சருமத்தில் இப்படியான மாற்றங்களை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
கால் மரத்துப் போவது மற்றும் கூசுவது
கால்கள் மற்றும் பாதங்களில் மரத்துப் போவது மற்றும் கூச்சஉணர்வை அடிக்கடி சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது நரம்பு சேதம் அல்லது ஹெபடைடிஸ் உடன் தொடர்புடைய இரத்த ஓட்ட பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
அசாதாரண தசை பிடிப்புகள்
இரவு நேரங்களில் கால்கள் மற்றும் பாதங்களில் அசாதாரண தசைப் பிடிப்புக்களை சந்திக்கிறீர்களா? இப்படியான பிடிப்புக்கள் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, நீரிழப்பு அல்லது கல்லீரல் நோயுடன் தொடர்புடைய தசை பிரச்சனைகளால் ஏற்படலாம். எனவே இப்படியான பிடிப்புக்களைக் குறைக்க நீரேற்றத்துடன் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஹெபடைடிஸ் அறிகுறிகளைப் பராமரிப்பது எப்படி?
ஹெபடைடிஸ் என்பது ஒரு தீவிரமான கல்லீரல் நோயாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகளை புரிந்து கொள்வதன் மூலம், அவற்றைத் தடுக்கலாம் மற்றும் பராமரிக்கலாம்.
ஹெபடைடிஸை தடுப்பதற்கு நல்ல சுகாதாரத்தைப் பேணுவது, ஊசிகளை பகிர்ந்து கொள்வது அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது போன்ற ஆபத்தான நடத்தைகளைத் தவிர்ப்பது மற்றும் ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி-க்கு எதிரான தடுப்பூசிகளைப் போடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications