Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
வெள்ளரிக்காயை தோலுரிக்காம அப்படியே சாப்பிடுறீங்களா? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...!
Cucumber Peel In Tamil: கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்கும்போது, குளிர்ச்சியான உணவுகளையே சாப்பிட நாம் அதிகம் விரும்புவோம். அந்த வகையில், மிகவும் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால வரப் பிரசாதங்களில் ஒன்றான வெள்ளரி, பழமாகவும் காய்கறியாகவும் அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது.
உடலை குளிர்விப்பது முதல் உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பது வரை வெள்ளரிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் வெள்ளரிக்காய் சாலடுகள் மற்றும் பானங்களில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, ரைதா மற்றும் கறி வடிவிலும் உட்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் வெள்ளரிக்காய் அவர்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து உண்ணப்படுகிறது.

கோடையில் வெள்ளரி தண்ணீர் மிகவும் பிரபலாமானது. பெரும்பாலும் நாம் அனைவரும் வெள்ளரியை அப்படியே சாப்பிட விரும்புவோம். வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லதா? அது உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துமா? தோல் நீக்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து நிறைந்தது
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதோடு, அவை உங்களை குளிர்விக்க உதவுகின்றன. சில அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் வெள்ளரியில் நிறைந்துள்ளன. ஒரு வெள்ளரிக்காயில் வெறும் 30 கலோரிகள் மற்றும் ஜீயோ கொழுப்புடன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும் வைட்டமின் கே இன் வளமான மூலமான வெள்ளரி, தினசரி மதிப்பில் 57% எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுகிறது மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள லிக்னான்கள் ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
அதிக ஊட்டச்சத்துக்கள்
வெள்ளரியில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், வயதாவதை தாமதப்படுத்தவும் உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள், வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெள்ளரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
கோடையில் அதிகம் தேவைப்படுகிறது
வெள்ளரிக்காய் ஒரு பல்துறை காய்கறியாக இருக்கிறது மற்றும் இந்திய சமையலறையில் பல்வேறு வகைகளில் பயன்படுத்ததப்படுகிறது. இது அதிக தேவையுள்ள காய்கறியாக இருப்பதால், அந்த தேவையைப் பூர்த்தி செய்ய, அவை பெரும்பாலும் இரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
இரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படும் வெள்ளரியை தோலோடு சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. எனவே, வெள்ளரிக்காய் தோலில் இரசாயனங்கள் மற்றும் அழுக்குகள் இருக்கலாம் என்பதால், அவற்றின் தோல் உரிக்கப்பட்டு உண்ணப்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சமையல் பயன்பாடுகள்
வெள்ளரி இந்திய சாலட்களின் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு காய்கறி. வெள்ளரி துண்டுகள் இல்லாமல் எந்த காய்கறி சாலட்டையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. கோடை நாட்களில் வெள்ளரிக்காயை நான்கு துண்டுகளாக வெட்டி, உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள்.
வெள்ளரிக்காய் தயிர் ரைதா மிகவும் பிரபலமான வட இந்திய உணவுகளில் ஒன்றாகும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வெள்ளரிக்காய் தயிர், மசாலா மற்றும் பச்சை மிளகாயுடன் கலந்து பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம்.
வெள்ளரிக்காய் கறி பிரபலமான தென்னிந்திய உணவு. இது வெள்ளரிக்காயை மசாலாப் பொருட்களுடன் சேர்த்து சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. கோடையில் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் குளிர்ச்சியூட்டும் வெள்ளரிக்காய் பானம் அனைவராலும் விரும்பி குடிக்கப்படுகிறது. மேலும், புதிதாக பிழிந்த வெள்ளரிக்காய் சாற்றில் சர்க்கரை, உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து பானம் தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

