Latest Updates
-
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்!
காலிஃபிளவரை உங்க உணவில் கட்டாயம் ஏன் சேர்க்கணும்? அது உங்க உடலில் என்ன பண்ணும் தெரியுமா?
கோவிட் தொற்றுக்கு பிறகு மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள் மற்றும் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, ஆரோக்கியமான உணவு விருப்பங்களை தேடுபவராக நீங்களும் இருந்தால், புதிதாக ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால், காலிஃபிளவரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்த கார்ப் மற்றும் பசையம் இல்லாத காலிஃபிளவர் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பிரதானமாக இருக்கும் இந்த காய், ஊட்டச்சத்துக்களின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறது.

பசையம் இல்லாத காய்கறி என்பதால், செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்தது. பல்துறை திறன் வாய்ந்த காலிஃபிளவரை, நீங்கள் பச்சையாகவோ, வறுத்தோ, சமைத்தோ, வேகவைத்தோ அல்லது சுடப்பட்டோ சாப்பிடலாம்.
க்ரூசிஃபெரஸ் காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த காலிஃபிளவர், குளுக்கோசினோலேட்ஸ் எனப்படும் கந்தகம் கொண்ட பைட்டோநியூட்ரியண்ட்களின் தனித்துவமான குழுவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் நச்சுத்தன்மையை ஊக்குவிக்கின்றன மற்றும் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை உருவாக்குகின்றன.
காலிஃபிளவரின் ஊட்டச்சத்துக்கள்
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலிஃபிளவரில், அதிகளவு நார்ச்சத்து மற்றும் பி மற்றும் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன. இதில் கரோட்டினாய்டுகள் (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்) மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் நிறைந்த செறிவு உள்ளது. இந்த இரண்டு சேர்மங்களும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் காட்டுவதாக அறியப்படுகிறது.
காலிஃபிளவர் ஒரு சூப்பர்ஃபுட்
சூப்பர்ஃபுட்-ஆன காலிஃபிளவரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற சத்தான மூலக்கூறுகள் அதன் வெளிர் நிற தோற்றத்தில் அதிகமாக உள்ளது. இப்போதெல்லாம், காலிஃபிளவர் பல கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான அரிசி மற்றும் பீட்சா க்ரஸ்ட்களுக்கு சரியான மாற்றாக உள்ளது.
இயற்கையாகவே பசையம் இல்லாதது
இயற்கையாகவே பசையம் இல்லாத இந்த காய்கறியில், அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, கோலின் நல்ல ஆதாரம் மற்றும் எடை இழப்புக்கு உதவும் சல்ஃபோராபேன் என்ற நல்ல ஆதாரமும் இதிலுள்ளது. காலிஃபிளவர் சாப்பிடுவதால், நீண்ட காலத்திற்கு நீங்கள் முழுமையான உணர்வைப் பெறலாம். இதனால் உங்கள் எடை இழப்பு உணவுத் திட்டத்திற்கு இது ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். குறைந்த கார்ப் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு மாற்றாக இவை இருக்கும்.
கருவுறுதல் மற்றும் பிற ஊட்டச்சத்து உண்மைகள்
சி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ள இந்த காய்கறியில், ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் தேவைப்படும் இந்த ஊட்டச்சத்துக்கள், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த காய், குறைந்த சோடியம் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. ஒரு கப் காலிஃபிளவரில் 25 கலோரிகள், 5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2 கிராம் உணவு நார்ச்சத்து மட்டுமே உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



