Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
ஆண்களே! உங்கள் விந்தணுக்கள் பலவீனமாக உள்ளதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..
தற்போது திருமணமான தம்பதிகள் பலர் கருத்தரிப்பதில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதோடு, நம்மைச் சுற்றி அதிகம் இருப்பதால், அந்த வகை உணவுகளை தினமும் சாப்பிடுகிறோம்.
இப்படி இளம் வயதில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. இதன் விளைவாக கருத்தரிப்பதில் மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

தம்பதிகள் கருத்தரிப்பதில் பிரச்சனைகளை சந்திப்பதற்கு பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிக்க தேவையான ஆணின் விந்தணுக்களானது ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் கருமுட்டையை அடைய விந்தணுக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.
அதற்கு விந்தணுக்களின் இயக்கம் ஆரோக்கியமாகவும், தரமானதாகவும், போதுமான எண்ணிக்கையுடன்ம், நல்ல அமைப்புடனும் இருக்க வேண்டும். அதற்கு ஆண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். கீழே ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நட்ஸ்
நட்ஸ்கள் ஆண்களின் கருவளத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன. அப்படி வால்நட்ஸ், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களை ஆண்கள் தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் வால்நட்ஸ் ஆண்களின் விந்தணுக்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.
இறைச்சிகள்
விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு ஜிங்க் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது ஒவ்வொரு விந்து வெளியேற்றத்திலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது, விந்தணுவின் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஜிங்க் இறைச்சிகளில் அதிகம் உள்ளன. குறிப்பாக மாட்டிறைச்சியில் ஜிங்க் ஏராளமான அளவு நிறைந்துள்ளது.
ஒமேகா-3
விந்தணுக்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிட்னி பீன்ஸ், வால்நட்ஸ், ஆளி விதைகளில் அதிகம் உள்ளன. வேண்டுமானால், ஒமேகா-3 கேப்ஸ்யூலையும் உட்கொள்ளலாம்.
வைட்டமின் டி
ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடானது விந்தணுக்களின் இயக்கத்தை குறைக்கிறது. இந்த வைட்டமின் டி இயற்கையாக சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்டாலும், கொழுப்புள்ள மீன்கள், மாட்டிறைச்சி, ஈரல், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றிலும் அதிகமாக உள்ளன. எனவே இந்த வகை உணவுகளை உண்பதன் மூலம் விந்தணுக்களின் தரத்தை வலிமையை அதிகரிக்கலாம்.
வைட்டமின் சி
வைட்டமின் சியானது உடலில் உள்ள செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட வைட்டமின் சி சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி பழங்கள், கிவி, திராட்சை போன்றவற்றில் அதிகமாக உள்ளன.
டார்க் சாக்லேட்
கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள எல்-அர்ஜினைன் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க உதவுகிறது. ஆகவே ஆண்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், விந்தணுக்களின் ஆரோக்கியம் மற்றும் வலிமை அதிகரிக்கும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஆண் கருவளத்திற்கு தேவையான ஜிங்க் சத்து அதிகமாக உள்ளன. எனவே ஆண்கள் பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் நேரத்தை உட்கொண்டு வந்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பை மேம்படுத்துகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications