Latest Updates
-
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
மூச்சுத்திணறல் நுரையீரல் பிரச்சனை மட்டுமல்ல.. இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்! -
அரைச்சுவிட்ட சிக்கன் சால்னா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
நவம்பர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது
தினமும் 10 மணிக்கு தூங்கினால் உங்க உடலுக்குள் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
தூக்கம் என்பது மனிதர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும் அவசியமான ஒன்றாகும். தூக்க சுழற்சியில் பாதிப்பு ஏற்படும் போது அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதன் நன்மைகள் நீண்ட காலமாக மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
நம்முடைய பிஸியான கால அட்டவணைகள் எப்போதும் முன்கூட்டியே படுக்கைக்கு செல்ல அனுமதிக்காது என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம் நமது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றிற்கு நன்மைப் பயக்கும்.

தூக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் அதே வேளையில், இரவில் சீக்கிரம் தூங்குவது நீண்ட கால நல்வாழ்வோடு தொடர்புடையது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
சீக்கிரம் தூங்குவது, நீண்ட காலத்திற்கு நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதோடு, உங்கள் நாளைக் சீக்கிரமாகத் தொடங்க உங்களை அனுமதிக்கிறது, இது அதிகாலை சூரிய ஒளி மற்றும் சில காலை உடற்பயிற்சிகளின் பலன்களைப் பெறவும் உதவும்.
ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குவது இதயம் மற்றும் இரத்த ஓட்ட நோய் அபாயத்தைக் குறைக்கும். இந்த நேரத்தில் தூங்குவது உங்கள் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். தினமும் 10 மணிக்குத் தூங்கினால் உடலுக்குள் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது
நீங்கள் சீக்கிரம் தூங்கச் செல்லும் போது, குறைவான தொந்தரவுடன் ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல், சிறந்த ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் 8-9 மணிநேர உறக்கத்தை பெறுவதற்கும் போதுமான நேரம் இருக்கும்.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
உங்கள் சர்க்காடியன் தாளத்துடன் நன்றாக தூங்குவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான பிற ஆபத்து காரணிகளின் அபாயத்தைக் குறைக்கும். Journal Current Cardiology Reviews அறிக்கையின் படி தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் (HT), கரோனரி இதய நோய் (CHD) மற்றும் நீரிழிவு நோய் (DM) ஆகியவற்றுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.
ஹார்மோன்கள் சமநிலையை ஏற்படுத்துகிறது
தினமும் இரவு 10 மணிக்கு தூங்குவது உங்கள் இயற்கையான சர்க்காடியன் தாளத்திற்கு மிகவும் உகந்தது. சர்க்கடியான் தாளம் மூளையில் உள்ள பினியல் சுரப்பி மற்றும் நமது சூழலில் உள்ள ஒளியின் அளவுகளுக்கு இடையிலான தொடர்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனுடன் ஒத்துப்போகாமல் இருப்பது உங்கள் ஹார்மோன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேலையில் செயல்திறனை அதிகரிக்கிறது
க்ரோனோபயாலஜி இன்டர்நேஷனல், இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, இரவில் தாமதமாக தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது தினமும் 10 மணிக்கு தூங்குபவர்கள் பள்ளியில் அல்லது வேலையில் சிறப்பாக செயல்படுகிறார்கள் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். பொதுவாக அறிவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு சீக்கிரம் படுக்கைக்குச் செல்வது முக்கியம். ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இரவு விழித்திருப்பவர்கள், குறைந்த ஏரோபிக் ஃபிட்னஸ் அளவைக் கொண்டிருப்பதாகவும், ஓய்வில் குறைந்த கொழுப்பை எரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
சீக்கிரம் தூங்குவதும் போதுமான ஓய்வு பெறுவதும் நோய்த்தொற்றுகள் மற்றும் பொதுவாக நோய்வாய்ப்படும் அபாயத்துடன் தொடர்புடையது. தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குகிறது மற்றும் போதுமான மணிநேர உயர்தர தூக்கத்தைப் பெறுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

