Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நீங்கள் எந்த நேரத்திலும் எடுத்து கொள்ள கூடிய எளிய உணவு வகைகளில் ஒன்று. இது எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக்கூடிய ஒரு எளிதான பழமாகும். இது இயற்கையாகவே இனிப்பு சுவையை கொண்டிருப்பதோடு, உங்கள் வயிற்றை நிரப்ப கூடிய சிறந்த உணவு.
தினசரி இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உணவின் நிறைவு மட்டும் தராமல், உடலுக்கு தேவையான பல சத்துக்களையும் கொடுக்கிறது. இதனால் கிடைக்க கூடிய பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆய்வுகள் சொல்லும் செய்தி
ஒரு மருத்துவ ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, வாழைப்பழங்களில் பீனாலிக் அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற உயிரியல் பண்புகளை ஊக்குவிக்கும் சேர்மங்கள் அதிக அளவில் நிரம்பி இருப்பதால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றன. இந்த சேர்மங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிராடிக்கல் பண்புகளை கொண்டிருப்பதால் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வாழைப்பழங்களில் உள்ள பீனாலிக் அமிலம் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டிருக்கின்றன. மேலும் இவை வீக்கம், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுடன் தொடர்புடைய செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்துவதில் வாழைப்பழங்கள் சிறப்பான ஆற்றலை கொண்டிருக்கின்றன.
இதயத்தை பலப்படுத்தும்
பொட்டாசியம் இதயத்தை பலப்படுத்தும் சிறந்த பண்புகளை கொண்டிருக்கிறது. இது வாழைப்பழங்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க இந்த முக்கிய தாது உதவுகிறது. இதனால் இதயம் அதிகமாக வேலை செய்வது குறைகிறது. இதயம் படபடப்பின்றி அமைதியாக இருக்கும் போது, அதிக உற்சாகமாக உணர்வதோடு எதையும் எதிர்கொள்ள தேவையான ஆற்றலையும் பெறுவீர்கள்.
புகைபிடிப்பதை நிறுத்த உதவும்
புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? ஆனால் அதற்கான பலன் இல்லையா. வாழைப்பழங்கள் அதற்கான சிறந்த தீர்வாக இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கலவையான வாழைப்பழம் நிக்கோடின் வேண்டும் என்கிற உந்துதல் எண்ணத்தை குறைக்கவும், திரும்பவும் புகைபிடிக்க தூண்டும் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. மேலும், வாழைப்பழத்தின் இனிமையான சுவை மற்றும் மென்மையான அமைப்பும் உங்களை புகை பிடிக்காமல் நிறுத்த உதவுகின்றன.
இயற்கையாக ஆற்றல் அதிகரிக்கிறது
உடலில் உடனடியாக ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? வாழைப்பழம் இயற்கையாகவே சர்க்கரையை கொண்டிருக்கின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, வாழைப்பழமும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் எளிதாக கிடைக்கும். இது உடலுக்கு சிறிய எரிபொருள் போன்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக நாம் கவனமாக இருக்க வேண்டிய தருணத்தில் சிறப்பாக செயல்பட கூடியது.
மனநிலையை மேம்படுத்தும்
மனநிலை சற்று அழுத்தமாகவோ அல்லது சோகமாகவோ உணர செய்கிறதா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, மூளையில் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நல்ல இரசாயனங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் பரபரப்பாக இருக்கும் தருணத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தி கடினமான பிரச்சனைகளை நிர்வகித்து எளிதாக்குவதில் ஒரு சிறு பகுதியாகிறது.
இரத்த சோகையை எதிர்க்கிறது
பகல் நேரத்தில் உடல் சோர்வாக உணர்கிறீர்களா? இரும்புசத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது உடலில் அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது. அதிக இரத்த சிவப்பணுக்கள் சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்தை ஏற்படுத்தும். இதனால் உற்சாகமாகவும் அடுத்து வரும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் கொடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

