Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
World Kidney Day 2023: யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது தெரியுமா?
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, தமிழ் போல்ட்ஸ்கை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள், வகைகன், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
World Kidney Day 2023: உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக புற்றுநோயால் தான் மக்கள் அதிகமாக இறக்கிறார்கள். புற்றுநோய் என்றதுமே பலருக்கும் மனதில் தோன்றுவது, இது மரணத்தை உண்டாக்கும் மிகவும் கொடிய நோய். இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானலும் ஏற்படலாம். புற்றுநோய் செல்களானது வேகமாக வளரும் திறன் கொண்டது மட்டுமின்றி, உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி சேதத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் காரணிகளால், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் ஏராளமான மக்கள் பாதக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் கடந்த சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டது சிறுநீரக புற்றுநோயால் தான். இந்த வகை புற்றுநோயில் சிறுநீரகங்களில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் முற்றிய நிலையில் கண்டறிந்தால், மரணத்தையே சந்திக்க நேரிடும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 09 ஆம் தேதி உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, தமிழ் போல்ட்ஸ்கை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள், வகைகன், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
சிறுநீரகங்களில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் ஒன்று டிஎன்ஏ-வில் ஏற்படும் மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். இது தவிர பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவையும் சிறுநீரகங்களில் புற்றுநோயை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி உடல் பருமனும் மற்றொரு ஆபத்துக் காரணியாகும். ஏனெனில் இது உடலில் உள்ள ஹார்மோன்களை தொந்தரவு செய்கிறது மற்றும் உடலில் பல நோய்கள் ஏற்பட வழிவகை செய்கிறது.

சிறுநீரக புற்றுநோயின் வகைகள்
சிறுநீரக புற்றுநோயில் 4 வகைகள் உள்ளன. அவை
* ரீனல் சார்கோமா
ரீனல் சார்கோமா சிறுநீரக புற்றுநோயின் பொதுவான வகை. இதில் புற்றுநோய் செல்களானது சிறுநீரகங்களின் இணைப்புத்திசுக்களில் தொடங்கும். இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது அருகில் உள்ள பிற உறுப்புக்கள் மற்றும் எலும்புகளுக்கும் பரவிவிடும்.
* சிறுநீரக செல் கார்சினோமா (RCC)
இந்த வகை சிறுநீரக புற்றுநோய் பெரியவர்களிடம் காணப்படும். இந்த வகை புற்றுநோய் சிறுநீரகத்தில் ஒற்றை கட்டியாக உருவாகும். ஆனால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதித்துவிடும்.
* வில்ம்ஸ் கட்டி
இந்த வகை புற்றுநோய் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இது 3-4 வயது குழந்தைகளிடம் காணப்படும் அரிய வகை புற்றுநோயாகும். இது மரபணு மாற்றம் காரணமாக ஏற்படலாம். இந்த வகையில் சிறுநீரக செல்கள் மரபணு மாற்றங்களால் கட்டிகளாக உருவாகி, புற்றுநோயை உண்டாக்குகின்றன.
* இடைநிலை செல் கார்சினோமா (TCC)
இந்த வகை புற்றுநோய் சிறுநீரகத்தில் உள்ள சிறுநீர்க்குழாய் இணைக்கும் பகுதியில் தொடங்குகிறது. சிறுநீர்க் குழாயானது சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்து செல்லும் குழாய் ஆகும். இந்த வகை புற்றுநோயில் சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பையும் பாதிக்கப்படும்.

சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்
புற்றுநோயானது ஆரம்ப கட்டத்தில் எவ்வித குறிப்பிட்ட அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. ஆனால் படிப்படியாக அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
* சிறுநீரில் இரத்தம்
* முதுகு அல்லது பக்கவாட்டு பகுதியில் கடுமையான வலி
* பசியின்மை
* விவரிக்க முடியாத எடை இழப்பு
* உடல் சோர்வு
* காய்ச்சல்
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த சோகை

சிறுநீரக புற்றுநோயை தடுக்க முடியுமா?
சிறுநீரக புற்றுநோயைத் தடுக்க முடியாது. பல நோயாளிகளில் புற்றுநோய் வருவதற்கான காரணம் தெரியாது. ஒருவேளை காரணம் தெரிந்தாலும், அதைத் தடுக்க முடியாது. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், கெட்ட பழக்கங்களை கைவிடுவது போன்றவை நம் வாழ்வில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

சிகிச்சைகள்
சிறுநீரக புற்றுநோயை வெறும் உடல் பரிசோதனைகளின் மூலம் கண்டறிய முடியாது. சிறுநீரக புற்றுநோய் இருப்பது போன்ற சந்தேகம் கொண்டவர்கள், அதை உறுதி செய்ய எம்ஆர்ஐ அல்லது சிடி ஸ்கேன் செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். சிறுநீரக புற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தால், அதுவும் ஒரு சிறுநீரகத்தில் புற்றுநோய் இருந்தால், அந்த ஒரு சிறுநீரகத்தை அகற்றுவதன் மூலம், அதன் பரவலைத் தடுக்கலாம். முற்றிய நிலையில், நோயாளியின் நிலையைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சைகளை வழங்குவார்கள்.



Click it and Unblock the Notifications