Just In
- 36 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கோடைகாலத்துல நீங்க ஏன் வாழைப்பழம் சாப்பிடணும் தெரியுமா?
வாழைப்பழம் குறைந்த அமிலம் கொண்ட பழமாகும். மேலும் இது நாள் தொடங்குவதற்கு ஏற்ற பழமாகும், ஏனெனில் இது அமிலத்தன்மை, ஒற்றைத் தலைவலி மற்றும் கால்களில் ஏற்படும் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
வாழைப்பழம் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடும் பழம். வாழைப்பழம் ஒரு அதிசய பழம் மற்றும் ஒரு முழுமையான உணவாகும். எல்லா பருவகாலத்திலும் நாம் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறோம். கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குறித்து கவனமாக இருக்க வேண்டும். கோடைகாலத்தில் வாழைப்பழங்களை நம் அன்றாட உணவில் சேர்க்கலாமா?
உங்கள் பிரதான உணவு தாமதமாகும்போது ஒரு மினி உணவாக காலையில் முதல், முன் மற்றும் வொர்க்அவுட்டுக்கு பிறகு உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். உங்கள் முக்கிய உணவில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து, ஒரு சப்ஸி (வாழை மலர்), பக்ரி (வாழை தண்டு), மற்றும் பல வழிகளில் சேர்க்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கோடையில் வாழைப்பழத்தை திறம்பட பயன்படுத்துவதற்கான வழிகளை இக்கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
நாள் தொடங்க வாழைப்பழம்
வாழைப்பழம் குறைந்த அமிலம் கொண்ட பழமாகும். மேலும் இது நாள் தொடங்குவதற்கு ஏற்ற பழமாகும், ஏனெனில் இது அமிலத்தன்மை, ஒற்றைத் தலைவலி மற்றும் கால்களில் ஏற்படும் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
MOST READ: ஆண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்க நம் முன்னோர்கள் இந்த மூலிகை பவுடரைத்தான் பயன்படுத்தினார்களாம்!
இடைப்பட்ட பகுதியில் உணவாக வாழைப்பழம்
ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை. மேலும் வளமான ஆற்றல் மூலமாக வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசத்துடன் வரும் ஆற்றல் சரிவைத் துடிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த மனநிலை மேம்பாட்டாகும், இது உடலை உற்சாகப்படுத்த ஒரு இடைப்பட்டப் பகுதியில் உணவாக உட்கொள்ளலாம்.
பால், சர்க்கரை மற்றும் ரொட்டியுடன் வாழைப்பழம்
இந்த ஆரோக்கியமான கலவையானது சிக்ரானின் பாரம்பரிய உணவாகும். தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை வெல்ல இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஜீரணிக்க எளிதானது என்பதால் குழந்தைகளுக்கு இது உணவாக நல்லது.
உணவை முடிக்க வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மேலும், வாழைப்பழத்தில் குறைந்த அளவு பிரக்டோஸ் உள்ளது, இது ஐ.பி.எஸ் (எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி) கட்டுப்படுத்த உதவுகிறது.
MOST READ: உங்க தொப்பை கொழுப்பை குறைக்க நீங்க செய்யுற இந்த விஷயம் உதவாதம்... ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?
மில்க் ஷேக்காக வாழைப்பழம்
நீங்கள் நாள் முழுவதும் சிறிய உணவை உட்கொள்ளும் பழக்கமுள்ள ஒருவராக இருந்தால், வாழைப்பழ மில்க் ஷேக்கை உங்கள் தீர்வாக சேர்க்கலாம். வாழைப்பழ மில்க்ஷேக் தற்போதைய ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையில் அல்லது ஒரு சிறந்த உடற்பயிற்சியின் பிற்பகுதியில் இரவு நேர படிப்புக்கு ஏற்ற உணவாகும்.
இறுதிகுறிப்பு
வாழைப்பழங்கள் நன்மைகள் நிறைந்தவை. மேலும் அவை ஜீரணிக்க எளிதானவை. மேலும், வாழைப்பழங்களை வாங்கும் போது, உள்ளூர் வகையை கேட்க நினைவில் கொள்ளுங்கள். இது கலப்படம் மற்றும் ரசாயண பழங்களிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. மேலும் உள்ளூர் உற்பத்திக்கான தேவையை உருவாக்க உதவும், இதனால் பூர்வீக இனங்கள் தொழில்துறை அளவிலான உணவு உற்பத்தியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும்.