Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
நாட்பட்ட இருமல் இருப்பவர்களுக்கும் தொடர்ச்சியான இருமல் பாதிப்பு இருக்கும். இருமல் தொடர்ச்சியாக இருந்து வந்தால் அதன் அடிப்படை காரணத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படலாம்.
தீங்கு விளைவிக்காத பல்வேறு உடல் நிலைகளுக்கு இருமல் ஒரு பொதுவான அறிகுறியாக விளங்கும். திடீரென்று ஏற்படும் சில வகை இருமல் தொடர்ச்சியாக இருக்கலாம் . இது சில வாரங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். நாட்பட்ட இருமல் இருப்பவர்களுக்கும் தொடர்ச்சியான இருமல் பாதிப்பு இருக்கும்.

இந்த நிலை சுமார் 8 வாரங்கள் நீடிக்கலாம். இருமல் தொடர்ச்சியாக இருந்து வந்தால் அதன் அடிப்படை காரணத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படலாம்.

இடைநிலை இருமல் காரணங்கள்:
கொரோனா வைரஸ்
இந்நாட்களில் வறண்ட இருமலுக்கான ஓர் காரணமாக கொரோனா கிருமி இருக்கலாம். கோவிட் 19 கிருமிக்கான முக்கிய அறிகுறி வறண்ட இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவையாகும். பரவி வரும் இந்த தொற்று பாதிப்பின் அறிகுறி உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது . இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கலாம்.

மேல் சுவாச பாதை தொற்று பாதிப்பு
சைனஸ், குரல்வளை அல்லது மூக்கில் உண்டாகும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று மேல் சுவாசக்குழாய் தொற்று என்று அழைக்கப்படுகிறது. தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், முகத்தை சுற்றி அழுத்தம் போன்றவை இந்த தொற்று பாதிப்பின் அறிகுறியாகும். மிகக் குறைந்த அளவு காய்ச்சலும் ஏற்படலாம்.

கீழ் சுவாச பாதை தொற்று பாதிப்பு
நுரையீரலுக்கு செல்லும் காற்றுப்பாதையை இது பாதிக்கிறது. நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை கீழ்சுவாச பாதை தொற்று பாதிப்பின் வகைகளாகும். வறண்ட இருமல், மூச்சுக்குழாய் அழற்சியின் பொதுவான அறிகுறியாகும். இருமல் காரணமாக பச்சை, மஞ்சள் அல்லது லேசான இரத்தம் கலந்த சளி வெளியாகும். தொண்டை வறட்சி, நெஞ்சு பகுதியில் வறட்சி, வீசிங், தலை மற்றும் உடல் வலி போன்றவை இதன் மேலும் சில அறிகுறிகளாகும். நுரையீரலில் ஏற்படும் மற்றொரு தொற்று பாதிப்பு நிமோனியா. இதுவும் பெரும்பாலும் மேலே கூறப்பட்ட அதே அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

எரிச்சலூட்டும் பொருட்கள்
சில நேரங்களில் சில எரிச்சலூட்டிகளை நுகர்வதால் இருமல் உண்டாகலாம். சிகரெட், புகை, வாசனை திரவியம், டீசல் புகை போன்றவை இந்த வகையில் அடங்கும்.

நாட்பட்ட இருமலுக்கான காரணங்கள்:
ஆஸ்துமா
இது ஒரு நாட்பட்ட அழற்சி பாதிப்பாகும். இது காற்றுப்பாதையை சுருக்குகிறது. இதனால் காற்று உள்ளே வெளியே செல்ல கடினமாகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, இருமல் உண்டாகிறது. இந்த வகை நோயாளிகளுக்கு வீசிங், நெஞ்சு பகுதியில் இறுக்கம், மூச்சுத்திணறல் போன்ற அனுபவமும் உண்டாகலாம். ஆஸ்துமா பாதிப்பிற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆனால் இதற்கான சிகிச்சையை மேற்கொண்டால், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

நாட்பட்ட நுரையீரல் நோய் (COPD)
காற்றோட்டத்தை தடுக்கும் நுரையீரல் பாதிப்பு குழுவை COPD என்று குறிப்பிடுவோம். இந்த வகை பாதிப்பில் காற்றுப்பாதை வீக்கமடையலாம் அல்லது தடிமனாக நேரலாம் மற்றும் நுரையீரல் திசுக்கள் சேதமாகலாம். நாட்பட்ட இருமல், மூச்சுத்திணறல், வீசிங் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

தொடர்ச்சியான இருமலை தடுப்பது எப்படி?
முதல் நிலையாக இருமலின் அடிப்படை காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். COPD போன்ற மருத்தவ பாதிப்புகள் உள்ள நோயாளிகள் இதற்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் இருமலை ஏற்படுத்தும் எரிச்சலூட்டிகளைக் கடந்து வருபவர்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டி-ஹிஸ்டமின்களை எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications