Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
யாருக்கெல்லாம் கொரோனா வந்தால், தீவிரமாகி உயிர்போக வாய்ப்பிருக்கு-ன்னு தெரியுமா?
பொதுவாக கொரோனா வைரஸ் ஆரோக்கியமானவர்களை பாதித்தாலும், ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடியது.
பல மாதங்களாக கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று உலகையே உலுக்கியதோடு, பலரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த கொடிய கொரோனா வைரஸ் அனைவரையும் ஒரே மாதிரியாக பாதிக்காது. சிலருக்கு மற்றவர்களை விட பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா?

பொதுவாக கொரோனா வைரஸ் ஆரோக்கியமானவர்களை பாதித்தாலும், ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடியது. அதுவும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான மூச்சுக்குழாய் அழற்சி, இதய நோய், தீவிர இதய நிலைகள், உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் போன்றவை உள்ளவர்களுக்கு, வயதுக்கு ஏற்ப பாதிப்பின் தீவிரம் உள்ளது.
கீழே எந்த வகையான மக்களுக்கு கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாவதற்கான வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.

வயதானவர்கள் மற்றும் கோவிட்-19
வயதானவர்களுக்கு நீண்டகால ஆரோக்கிய பிரச்சநைகள் இருக்க வாய்ப்புள்ளது மற்றும் அது அவர்களுக்கு கொரோனா ஆபத்தை உண்டாக்கும். ஏனெனில் வயதானவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் வயதிற்கேற்ப பலவீனமாகின்றன. இதனால் வயதானவர்களால் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம். மற்றொரு காரணம், வயதிற்கு ஏற்ப நுரையீரல் நெகிழ்ச்சி இழக்கப்படுவதால், கோவிட்-19 போன்ற சுவாச நோய்கள் வயதானவர்களிடையே மிகவும் பொதுவானதாக இருக்கிறது.

இதய நோய்கள் மற்றும் கோவிட்-19
கோவிட்-19 பெரும்பாலும் சுவாச பாதை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது என்றாலும், இந்த உறுப்புக்கள் இதயத்துடன் இணைந்து ஆக்ஸிஜனை உடலின் திசுக்களுக்கு இயக்குகின்றன. நோய் காரணமாக நுரையீரல் அதிகமாக செயல்பட முடியாத நிலையின் போது, இதயம் கடினமாக செயல்பட வேண்டும். இது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு சவால் நிறைந்த வாழ்க்கையை உருவாக்குகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கோவிட்-19
ஆய்வுகளின் படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஏசிஇ 2 ஏற்பிகள் குறைவாக இருப்பதால், இத்தகையவர்களுக்கு பிரச்சனை தீவிரமாக வாய்ப்புள்ளது மற்றும் அவர்களின் உடலும் கிருமித் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை இழந்து, பின் உடல் முழுவதும் கிருமியை பரவச் செய்திடுகின்றன. இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தீவிரமாக அதிக வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் கோவிட்-19
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவால் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகம் உள்ளது. டைப்-1 மற்றும் டைப்-2 வகை என இரண்டுமே இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க காரணமாகின்றன. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, கோவிட்-19 போன்ற வைரஸ் நோய்களை மிகவும் ஆபத்தானதாக்குகிறது. ஏனெனில் அதிகளவு இரத்த சர்க்கரை நிறைந்த சூழல் வைரஸ்கள் செழிப்பாக வளர ஏற்ற சூழலாகும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும் என்பதால், இது கோவிட்-19 போன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்குகின்றன. எனவே தான் கொரோனா பரவும் காலத்தில் சர்க்கரை நோயாளிகளை கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர். அதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருந்துகளை சரியான நேரத்தில் எடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கோவிட் -19 மற்றும் எச்.ஐ.வி-எய்ட்ஸ்
எய்ட்ஸ் நோயானது முதலில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. இது உண்மையில் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, கோவிட் -19 போன்ற வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் பாதுகாப்பதை கடினமாக்குகிறது. தற்போதைய சான்றுகள் மற்ற சுகாதார நிலைமைகளை விட கடுமையான கோவிட்-19 க்கான ஆபத்து காரணி எச்.ஐ.வி / எய்ட்ஸ்-க்கு குறைவாக இருப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளியாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கோவிட்-19 மற்றும் நுரையீரல் நோய்கள்
நாள்பட்ட சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் நோய்களான நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD), ஆஸ்துமா, நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்றவை புதிய கொரோனா வைரஸுடன் சேரும் போது, அது நிலைமையை மேலும் மோசமாக்கும். ஆகவே தான் இந்த நிலைமைகளைக் கொண்டவர்களை மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்துவதோடு, சரியான சிகிச்சையை மேற்கொள்ளவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சுவாச பாதைகளில் சேதத்தை உண்டாக்கத் தொடங்குகிறது. மேலும் இங்கு தான் பொதுவான குளிர்கால பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே கொரோனா காலத்தில் சளி, இருமல் பிடிக்காமல் பார்த்து கவனமாக இருக்க சொல்கிறார்கள்.

கொரோனாவின் அறிகுறிகள்
* காய்ச்சல்
* இருமல்
* மூச்சுத்திணறல் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம்
* களைப்பு
* குளிர், சில சமயங்களில் உடல் நடுக்கம்
* உடல் வலி
* தலை வலி
* தொண்டை புண் அல்லது தொண்டை வலி
* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு
* சுவை இழப்பு
* வாசனை இழப்பு
* வாந்தி அல்லது குமட்டல்
* வயிற்றுப்போக்கு

பாதுகாப்பாக இருப்பது எப்படி?
* கொரோனா வைரஸைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் கைகளை அடிக்கடி முழுமையாகக் கழுவ வேண்டும் - குறிப்பாக நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு, உங்கள் முகம் அல்லது உடல் உறுப்புகளைத் தொடவும்.
* எங்கு செல்லும் போதும் கையில் சானிடைசரைக் கொண்டு செல்லுங்கள் மற்றும் நல்ல தரமான முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். ஒரே முகமூடியை அலசாமல் பல முறை பயன்படுத்துவது தவிர்த்திடுங்கள்.
* நீங்கள் காட்டன் முகமூடியை பயன்படுத்துபவரானால், வீட்டிற்கு வந்ததும் அதை உடனே துவைத்துவிடுங்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் முகமூடியை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுங்கள்.
* கொரோனா வைரஸ் ஒருவரது உடலினுள் மூக்கு, கண்கள் மற்றும் வாயின் வழியே உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே கண்ட இடத்தை கைகளால் தொட்ட பின், முகத்தில் கைகளை கழுவாமல் வைக்காதீர்கள். முக்கியமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
* ஆரோக்கியமான உணவுகளான வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட உதவி, கொரோனாவில் இருந்து உடல் பாதுகாப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications