Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
பெண்கள் எந்தெந்த நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள் தெரியுமா?
பொதுவாக ஆண்கள்தான் தாம்பத்யத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு நிகராக சிலசமயங்களில் ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் தாம்பத்யத்தில் நாட்டத்த
தாம்பத்யம் என்பது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் அவசியமான அதேசமயம் அவர்கள் விரும்பும் ஒன்றாகும். கணவன், மனைவி உறவுக்குள் தாம்பத்யம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எந்த அளவிற்கு அவர்களுக்குள் தாம்பத்யம் சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும்.

பொதுவாக ஆண்கள்தான் தாம்பத்யத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு நிகராக சிலசமயங்களில் ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் தாம்பத்யத்தில் நாட்டத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கென இதில் சில ஆசைகளும், எதிர்பார்புக்களும் இருக்கும். இந்த பதிவில் தாம்பத்யத்தில் ஈடுபட சிறந்த சமயங்கள் எதுவென்று பார்க்கலாம்.

முக்கியமான அலுவலகப் பணிக்கு முன்
தாம்பத்யத்தில் ஈடுபவது ரம்புகளை அமைதிப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. முக்கியமான சந்திப்புகள் முன்னரோ அல்லது அலுவலகப் பணிக்கு முன்னரோ தாம்பத்யத்தில் ஈடுபடுவது அவர்கள் மனஅழுத்தத்தை குறைத்து சிறப்பாக செயல்பட உதவுவதாக பெண்கள் கூறுகிறார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

காலை நேரத்தில்
உண்மையில் நமது உடலானது காலை நேர தாம்பத்யத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும். காலை நேர தாம்பத்யம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். காலை நேரம் 7:30 தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மோசமான வானிலையில்
இது வேடிக்கையானதாகவோ, எதிர்மறையானதாகவோ இருக்கும், ஆனால் இது உண்மையானதாகும். தாம்பத்யத்தில் ஈடுபடுவது உண்மையில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காய்ச்சல் ஏற்பட தொடங்கும் சமயத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் காய்ச்சலை எதிர்த்து போராட இது உங்கள் உடலை தயாராக்கும்.

சுழற்சியின் 14 வது நாள்
சமீபத்திய ஆய்வில் உங்கள் சுழற்சியின் இரண்டாவது வாரத்தில், பெண்குறிமூலம் 20 சதவிகிதம் பெரியதாக வளர்ந்து தாம்பத்யத்தில் ஈடுபடுவதை எளிதாக்குகிறது. இந்த நாளில் பெண்களுக்கு உச்சநிலை ஏற்படுவது மிகவும் எளிதாக இருக்கிறது, அண்டவிடுப்பின் நிகழும் நேரத்தில் இது சரியானதாக இருக்கிறது. எனவே பெண்கள் அந்த நாளில் தாம்பத்யத்தில் ஈடுபட அதிக நாட்டத்துடன் இருப்பார்கள்.

உடற்பயிற்சிக்குப் பின்
உடற்பயிற்சிக்குப் பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடுவது உங்கள் உடலில் அதிக ஆற்றல் மாற்றங்களை ஏற்படுத்தும். உடற்பயிற்சி மூலம் கிடைக்கும் பலனை இது இரட்டிப்பாக்கும். உடற்பயிற்சிக்கு பிறகு பெண்களின் பிறப்புறுப்பை சுற்றி இரத்த ஓட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது பெண்களின் உடல் டெஸ்டோஸ்டிரோன் பாலியல் ஹார்மோனை அதிகமாக வெளியேற்றுகிறது, எனவே வியர்வை அமர்வுக்குப் பிறகுபெண்களின் இயல்பான ஆசை இன்னும் அதிகமாக இருக்கும்.

மோசமான நாளுக்குப் பிறகு
ஒரு மோசமான நாளை சிறப்பான நாளாக மாற்றுவதற்கு தாம்பத்யத்தை தவிர சிறந்த வழி எதுவுமில்லை. தாம்பத்யத்தில் ஈடுபடுவது அல்லது பாலியல் தொடர்பான செய்கைகளில் ஈடுபடுவதும் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. பெண்களும் மோசமான அலுவலக நாளுக்குப் பிறகு மாலையில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புகிறார்கள்.

பயமான காரியங்களை செய்த பிறகு
பயத்தை அதிகரிக்கும் செயல்களான இராட்டினம் சுற்றுவது, பேய் படம் பார்ப்பது போன்ற செயல்களுக்குப் பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம். உங்கள் அட்ரினலின் உற்பத்தி அதிகரிக்கும் போது, உங்கள் உடல் ஏற்கனவே விழிப்புணர்வு நிலையில் இருக்கும், மேலும் உங்கள் பாலியல் திறனை மேலும் மேலும் உயர்த்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அட்ரினலின் உற்பத்திக்கு பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடுவது புதிய அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
