Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இதுல உங்க உதடு எந்த நிறத்தில் இருக்குன்னு சொல்லுங்க... உங்க உடம்புல இருக்குற பிரச்சனைய சொல்றோம்...
ஒருவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் உதடுகளின் நிறத்தைக் கொண்டே தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கை கிழக்கு மருத்துவத்தில் உள்ளது.
உதடுகள் ஒருவரது அழகில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய உதட்டைக் கொண்டே உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கணிக்க முடியும். என்பது தெரியுமா? பொதுவாக ஒருவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் உதடுகளின் நிறத்தைக் கொண்டே தீர்மானிக்க முடியும் என்ற நம்பிக்கை கிழக்கு மருத்துவத்தில் உள்ளது.

உடலில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளைப் பொறுத்தும், உதடுகளின் நிறத்தில் மாற்றங்கள் தெரியும். அந்த மாற்றங்களைக் கொண்டே உடலில் என்ன பிரச்சனை உள்ளது மற்றும் எந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆகவே இனிமேல் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, ஒவ்வொரு முறையும் உங்கள் உதடுகளின் நிறத்தைக் கவனியுங்கள். உதடுகளின் நிறங்கள் இயற்கையாக பிங்க் நிறத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் நிறத்தில் சிறு மாற்றங்கள் தெரிந்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

வெளிரிய பிங்க் நிற உதடுகள்
உங்கள் உதடுகள் வெளிரிய பிங்க் நிறத்தில் இருந்தால், அது இரத்த சோகைக்கான அறிகுறிகள் ஆகும். உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால் தான் உதடுகள் வெளுத்துப் போயுள்ளது.

சாப்பிட வேண்டிய உணவுகள்
வெளிரிய பிங்க் நிற உதடுகளைக் கொண்டவர்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான ப்ராக்கோலி, மாட்டிறைச்சி மற்றும் பேரிச்சம் பழம் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

சிவப்பு நிற உதடுகள்
ஒருவரது உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, இம்மாதிரியான நிறத்தில் உதடுகளைக் கொண்டவர்களின் கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறது.

சாப்பிட வேண்டிய உணவுகள்
சிவப்பு நிற உதடுகளைக் கொண்டவர்கள் கிரிஸான்தமம் தேநீரை போதுமான அளவு குடியுங்கள். அதுமட்டுமின்றி, பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேன் நன்மை பயக்கும். முக்கியமாக இத்தகையவர்கள் விரைவில் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக்கூடாது.

ஊதா-பச்சை நிற உதடுகள்
பெரும்பாலும் இம்மாதிரியான உதடுகள் குளிர்காலங்களில் தான் ஏற்படும். ஆனால் உங்கள் உதடுகள் தொடர்ந்து ஊதா-பச்சை நிறத்தில் இருந்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இது இதய பிரச்சனைகள் அல்லது சுவாச பிரச்சனைகளைக் குறிக்கிறது. ஆகவே உங்கள் உதடுகள் இந்த நிறத்தில் இருந்தால் உடனே மருத்துவரைக் காணுங்கள்.

கருப்பு நிற உதடுகள்
எப்போது ஒருவரது உதடுகள் அடர் சிவப்பில் இருந்து கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறதோ, அத்தகையவர்களுக்கு செரிமான மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதாவது இத்தகையவர்கள் மலச்சிக்கல், அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
கருப்பு நிறத்தில் உதடுகளைக் கொண்டவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் எளிதில் செரிமானமாகும். ஆகவே நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான அடர் பச்சை நிற காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், நட்ஸ், தானியங்கள், பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

உதடுகளைச் சுற்றி கருப்பு நிற கோடு
உங்கள் உதடுகளைச் சுற்றி ஏதோ கருப்பு நிற கோடு புதிதாக காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் உடல் சமநிலையில் இல்லை என்று அர்த்தம். அதாவது ஒரே நேரத்தில் மிகுந்த குளிராக மற்றும் மிகுந்த வெப்பத்தை உணரக்கூடும். என்ன புரியவில்லையா? அப்படித் தான் என்னவென்று சரியாக சொல்லத் தெரியாதது போன்ற உணர்வை உணரக்கூடும்.

செய்ய வேண்டியவைகள்
உதடுகளைச் சுற்றி அவுட்லைன் கொடுத்தது போன்று கருப்பு கோடு கொண்டவர்கள், மிகவும் காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.



Click it and Unblock the Notifications
