Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
யாருக்கெல்லாம் செப்டிக் ஷாக் வர வாய்ப்புள்ளது தெரியுமா?
எந்த ஒரு வகை பாக்டீரியாவோ, பூஞ்சை கிருமியோ அல்லது வைரஸ் கிருமியோ செப்சிஸ் நோயை ஏற்படுத்தலாம், இதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், செப்டிக் ஷாக் ஏற்பட வாய்ப்புண்டு.
செப்டிக் ஷாக் என்பது தொற்று காரணமாக, ஒருவரின் ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு குறையும் ஒரு கவலைக்கிடமான நிலையாகும். எந்த ஒரு வகை பாக்டீரியாவோ, பூஞ்சை கிருமியோ அல்லது வைரஸ் கிருமியோ செப்சிஸ் நோயை ஏற்படுத்தலாம், இதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், செப்டிக் ஷாக் ஏற்பட வாய்ப்புண்டு.

நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரனாப் முகர்ஜி அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உயிரிழந்தது நமக்கு அதிரிச்சியூட்டும் செய்தியாகும். சரி, இப்போது யாரெல்லாம் செப்டிக் ஷாக் ஆபத்தில் உள்ளார்கள், அதன் அறிகுறிகள், எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது, சிக்கல்கள் போன்றவை குறித்து விரிவாக காண்போம்.

செப்டிக் ஷாக் ஆபத்தில் இருப்பவர்கள் யார்?
பொதுவாக வயதானவர்களுக்கும் மற்றும் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும் செப்டிக் ஷாக் ஏற்படுகிறது. எனினும், கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் போன்றவைகளும் செப்டிக் ஷாக்கை அதிகரிக்கும் காரணிகளாகும்.

செப்டிக் ஷாக் அறிகுறிகள்:
தேசிய சுகாதார சேவை தகவலின் படி, பின்வருவன செப்டி ஷாக் அறிகுறிகளாகும்.
* குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக குறிப்பாக எழுந்து நிற்கும் போது மயக்கம் ஏற்படுதல்
* குமட்டல் மற்றும் வாந்தி
* வயிற்றுப்போக்கு
* சளி, வெளிரிய தோல்
* மனக் குழப்பம் மற்றும் தடுமாற்றம் போன்ற மனநிலை மாற்றம்
செப்டிக் ஷாக் என்பது ஒரு மருத்துவ அவசர நிலை. உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ செப்டிக் ஷாக் எற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அவசியம்.

செப்டிக் ஷாக்கிற்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
பொதுவாக, செப்டிக் ஷாக் ஏற்பட்ட ஒரு நோயாளி அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ சி யு) அனுமதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அதே வேளையில், அவருடைய உடல் உறுப்புகள் இயங்குவதற்கு மருத்துவ உதவி செய்யப்படும். சில சூழ்நிலைகளில், அவசரப் பிரிவில் சிகிச்சை ஆரம்பிக்கப்படலாம். பின்வருவன சிகிச்சை முறைகளாகும்.
* ஆன்டி-பயாடிக் கொடுத்தல்
* ஆக்சிஜன் தெரபி
* இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மருந்து கொடுத்தல்
* வாசோப்பிரஷர் மருந்துகள்- இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து ரத்த அழுத்தத்தைக் கூட்ட உதவும் மருத்துகள்
* அறுவைச் சிகிச்சை(சில சூழ்நிலைகளில்)
* இரத்த நாளம் வழியே நேரடியாக திரவங்களைச் உட்செலுத்துதல்

செப்டிக் ஷாக் மூலம் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பாதிப்புகள்:
செப்டிக் ஷாக் காரணமாக பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
* இதய மற்றும் சிறுநீரக செயலிழப்பு
* சுவாச செயலிழப்பு
* அடிவயிற்றில் இரத்தம் உறைதல்
* கல்லீரல் செயலிழப்பு
* பக்கவாதம்
* குடலின் ஒரு பகுதியை இழக்ககூடிய நிலை

முடிவு
செப்டிக் ஷாக் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். எனவே இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். ஹெல்த்லைன் அறிக்கையின் படி, செப்டிக் ஷாக் நோயாளிகளில் 50 சதவிகிதத்தினருக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையளிக்கப்படுகிறது, எதனால் தொற்று ஏற்பட்டுள்ளது, தொற்று காரணமாக எத்தனை உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications
