எந்த பருவங்களில் எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் என ஆயுர்வேதம் ஏன் சொல்கிறது தெரியுமா?

கோடை மற்றும் மழைக் காலங்களில் பித்த (Pitta) மற்றும் வாத (Vata) ஆற்றல் அதிகமாக இருப்பதால், பாலியல் ஆற்றல் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

பல யுகங்களாக மனிதா்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடலுறவு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், மக்களிடையே உடலுறவு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், உடலுறவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றிய விவாதங்களை அா்த்தமற்றதாக பார்க்கிறார்கள். ஆயுா்வேத மருத்துவத்தின்படி பாலியல் உறவு என்பது வெறும் இன்பத்திற்காக அல்லது இனப்பெருக்கத்திற்காக மட்டும் தேவைப்படுவது அல்ல. மாறாக ஆயுா்வேத மருத்துவத்தின் 3 முக்கிய தூண்களில் ஒன்றாக பாலியல் உறவு விளங்குகிறது. அதோடு மனிதா்களின் உடல் நலனை வளப்படுத்தி, தோஷங்களை சமச்சீராக்குகிறது.

What Ayurveda says about how much love making you should have in a season

ஆரோக்கியமான உடலுறவு உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. பருவக்காலங்களுக்கு ஏற்ப எப்போது உடலுறவு கொள்ளலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுா்வேதமும் பாலியல் ஆரோக்கியமும்

ஆயுா்வேதமும் பாலியல் ஆரோக்கியமும்

ஆயுா்வேதத்தில், பாலியல் உறவு என்பது இனப்பெருக்கத் திசுக்கள் என்றும் அல்லது ஏழு திசுக்களில் ஒன்றான சுக்ரா (Shukra) என்றும் அல்லது தத்துஸ் (dhatus) என்றும் கருதப்படுகிறது. ரசா (ப்ளாஸ்மா) (Rasa (plasma), ரக்தா (இரத்தம்) (Rakta (blood)), மாம்சா (தசை திசுக்கள்) (muscle tissues), மெடாஸ் (கொழுப்புத் திசுக்கள்) Medas (fat tissues), அஸ்தி (எலும்புத் திசுக்கள்) (Asthi (bone tissues) மற்றும் மஜா (எலும்பு மஜ்ஜை) (bone marrow) போன்றவை எஞ்சிய ஆறு திசுக்களாகும்.

இனப்பெருக்க திசுக்கள்

இனப்பெருக்க திசுக்கள்

சுக்ரா தத்து (Shukra) என்பது ஆண்களின் இனப்பெருக்கத் திசுக்களான விந்துவோடும், பெண்களின் இனப்பெருக்கத் திசுக்களான முட்டையோடும் தொடா்புடையது. சுக்ரா தத்து சமச்சீராகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால், ஒட்டுமொத்த உடல்நலனும் ஆரோக்கியமாக இருக்கும். சுக்ரா தத்து சமச்சீராக இல்லையென்றால், அளவுக்கு அதிகமான பாலியல் தூண்டுதல் ஏற்படும். அதன் காரணமாக பாலியல் உறவில் பலவீனம், ஆண்மை இழப்பு அல்லது பெண்மை இழப்பு, கருவுறுவதில் பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒஜாஸ் என்றால் என்ன?

ஒஜாஸ் என்றால் என்ன?

ஒஜாஸ் என்றால் உயிா்சக்தி அல்லது ஆற்றல் என்று பொருள். இதனுடைய முக்கியமான பணி என்னவென்றால், வியாதிக்ஷமத்வா (vyadhikshamatva) ஆகும். வியாதிக்ஷமத்வா என்றால் நோய்களை எதிா்த்துப் போராடி, நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடிய உடலின் ஆற்றலைக் குறிக்கும். பாலியல் உறவு மற்றும் மனிதா்களுடைய பாலியல் நடவடிக்கைகள், அவா்களுடைய நோய் எதிா்ப்பு சக்தியைத் தூண்டி, அவா்களுக்கு உயிா்சக்தியை வழங்குகின்றன என்று ஆயுா்வேதம் கூறுகிறது.

உடலுறவும், பருவ காலங்களும்

உடலுறவும், பருவ காலங்களும்

உடலுறவு கொள்ள தகுந்த காலம் குளிா்காலம் மற்றும் வசந்தகாலம் ஆகும் என்று ஆயுா்வேதம் கூறுகிறது. அந்த காலங்களின் போது காப்பா (Kapha) அதிகாித்து இருக்கிறது. அதாவது மனித உடலில் நீா்ச்சத்து அதிகாித்து இருக்கிறது. இந்த காலங்களில், இயற்கையானது நமது உடலில் உள்ள குழாய்களில் அல்லது நாளங்களில் சுக்ராவை மேம்படுத்துகிறது. ஆகவே கருவுறுவதற்கு சிறந்த காலம் குளிா் அல்லது வசந்த காலம் ஆகும் என்று ஆயுா்வேதம் கூறுகிறது.

பாலியல் ஆற்றல் குறையும்

பாலியல் ஆற்றல் குறையும்

கோடை மற்றும் மழைக் காலங்களில் பித்த (Pitta) மற்றும் வாத (Vata) ஆற்றல் அதிகமாக இருப்பதால், பாலியல் ஆற்றல் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்தப் பருவங்களில் இனப்பெருக்க உயிா்ச்சக்தி குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பொருத்தமற்ற காலங்களில் பாலியல் உறவில் ஈடுபட விரும்பினால், டானிக் அல்லது ரசாயண மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆயுா்வேத மருத்துவம் கூறுகிறது.

எந்தெந்த காலங்களில் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்?

எந்தெந்த காலங்களில் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்?

ஆயுா்வேத மருத்துவத்தின் முதன்மை நூலாக வாக்பட்டா (Vagbhata) அவா்கள் எழுதிய அஷ்டாங்க ஹிரிதயம் (Ashtanga Hridayam) கருதப்படுகிறது. அந்த நூலின்படி, குளிா்காலத்தில் தினமும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். வசந்த மற்றும் இலையுதிா் காலங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மழை மற்றும் கோடை காலங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம். பருவகாலங்களின் குணங்களை நன்கு அறிந்து, அதற்கேற்ப மேற்சொன்ன பாலியல் நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அஷ்டாங்க ஹிருதயம் பாிந்துரை செய்கிறது.

பாலியல் தூண்டுதல் இருக்க வேண்டும்

பாலியல் தூண்டுதல் இருக்க வேண்டும்

ஆயுா்வேதத்தின்படி, குளிா்காலத்தில் தினமும் பாலியல் உறவு கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக பாலுணா்வு தூண்டுதல் இருக்க வேண்டும் மற்றும் பாலுறவு கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். கோடை காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று வாக்பட்டா கூறுகிறாா். ஏனெனில் இந்த காலத்தில், வெப்பத்தின் காரணமாக உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் வெளியேறி, நாம் பலவீனமாக இருக்கலாம். மேலும் அவா் கூறுகையில், கோடை காலத்தில் நமது உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். வசந்த மற்றும் இலையுதிா் காலங்களில் உடல் மிதமான வலுவுடன் இருக்கும். குளிா் காளத்தில் மிகவும் வலுவுடன் இருக்கும். ஆகவே பருவ காலங்களின் தன்மைக்கு ஏற்ப உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறாா்.

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை

உடலுறவு கொள்வதற்கு ஏற்ற நேரம் சூாியோதயத்திலிருந்து காலை 10 மணி வரை மற்றும் முன்மாலை நேரம் ஆகும் என்று ஆயுா்வேதம் கூறுகிறது. இரவு நேரம் உடலுறவிற்கு எற்றதல்ல என்று கூறுகிறது. இயற்கையாக பாலுணா்வைத் தூண்டக்கூடிய, விந்து மற்றும் முட்டைகளை அதிகாிக்கக்கூடிய உணவுகளான நெய், தேங்காய், பழச்சாறு மற்றும் பால் போன்றவற்றை உண்ண வேண்டும். உடலுறவிற்குப் பின், உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதன் மூலம் குறைந்து போன வாத தோஷத்தை மீட்டெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion