Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இதெல்லாம் உங்க நாக்கு உங்களிடம் சொல்ல முயற்சிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்பது தெரியுமா?
நாவின் வடிவம், நிறம் அல்லது அளவு போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், அது ஏதோ உங்கள் உடலில் உள்ள பிரச்சனைக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கு விலை உயர்ந்த செயல்முறை எதுவும் தேவையில்லை. வேறு என்ன செய்ய வேண்டும்? ஒரு கண்ணாடியின் முன் நின்று உங்கள் நாக்கை நீட்டிப் பார்த்தாலே போதும். உங்கள் நாக்கில் நிலையே உங்களைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களைச் சொல்லும். முக்கியமாக உங்கள் உள் ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக சொல்லும்.
நாவின் வடிவம், நிறம் அல்லது அளவு போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், அது ஏதோ உங்கள் உடலில் உள்ள பிரச்சனைக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ஒருவரின் நாக்கில் வெளிப்படும் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு நோயையும் குறிக்கிறது. இப்போது நாவில் தென்படும் ஒவ்வொரு மாற்றங்களும் எதைக் குறிக்கிறது என்பதைக் காண்போம்.

மென்மையான மற்றும் பிங்க் நிற நாக்கு
உங்கள் நாக்கு பிங்க் அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், புள்ளிகள் மற்றும் கசப்பு ஏதும் இல்லாததாகவும், சுவை மொட்டுகள் நிறைந்ததாகவும் இருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியே. அதோடு உங்கள் நாக்கு கொஞ்சம் சமதளமாக இருக்க வேண்டும். ஆனால் நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கலாம். இல்லையெனில், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிவந்த மற்றும் வீங்கிய நிலையில் நாக்கு
நாக்கு வீக்கமடைந்தும், அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அது வைட்டமின் குறைபாட்டிற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், நாக்கின் நிறம் மற்றும் அளவில் மாற்றத்தைக் காணக்கூடும். இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாக்கின் நுனி அலைப் போன்ற வடிவத்தில் இருப்பது
உங்கள் நாக்கின் நுனிப் பகுதியைப் பாருங்கள். நாக்கு நுனிப் பகுதி அலைப் போன்ற வடிவத்தில் இருந்தால், அது தைராய்டு கோளாறுக்கான அறிகுறியாக இருக்கலாம். அத்துடன் மிகுந்த சோர்வு, முடி உதிர்வு, குறைவான இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளையும் உணரக்கூடும். ஒருவேளை உங்கள் நாக்கின் நுனி அலை வடிவிலான தோற்றத்துடனும், வீங்கியும் காணப்பட்டால், அது உடல் வறட்சிக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

நாக்கில் விரிசல்
உங்கள் நாக்கில் விரிசல் ஏற்படுவது ஆபத்தானதாக தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு தீவிரமான ஒன்று அல்ல. இருப்பினும், இந்த பிரச்சனையை பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் சென்று கூறுங்கள். சில அரிய சந்தர்ப்பங்களில், இந்த விரிசல் ஆட்டோ-இம்யூன் கோளாறைக் குறிக்கும். இந்த விரிசல்கள் சுருக்கங்கள் போன்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க, அவையும் விரிவடையும்.

கருப்பு அல்லது ப்ரௌன் படலம்
உங்கள் நாக்கின் மேல் பகுதியில் கருப்பு அல்லது ப்ரௌன் நிற படலம் காணப்பட்டால், இது பெரும்பாலும் மோசமான வாய் சுகாதாரத்தின் அறிகுறியாகும். சர்க்கரை நோயாளிகள், ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பவர்கள் அல்லது ஹீமோதெரபி நோயாளிகளுக்கு இம்மாதிரியான நிலை தோன்றக்கூடும். வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க தினமும் தவறாமல் இரண்டு முறை பற்களைத் துலக்கவும் மற்றும் ப்ளாஷ் செய்யவும். அதோடு பல் மருத்துவரை அடிக்கடி காணவும்.

வெள்ளை படலம்
நாக்கில் வெள்ளை படலாம் காணப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் நாக்கில் வெள்ளை படலம் படிந்திருப்பது, வாயில் ஈஸ்ட் தொற்றைக் குறிக்கிறது. இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இருப்பினும், புகைப்பிடிப்பவருக்கு, நாக்கில் வெள்ளைப் படலம் படிந்தால், அது நாக்கு புற்றுநோயின் ஆரம்ப நிலையான லுகோபிளாக்கியாவின் அறிகுறியாக இருக்கலாம்.

நாக்கு புண்கள்
நாக்கில் ஏற்படும் புண்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முற்றிலும் இயல்பானவை அல்லது மிகவும் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலான வாய் புண்கள் சாதாரணமானவையாகவே இருக்கும். இந்த வகை புண்கள் மன அழுத்தத்தால் ஏற்படுபவைகளாகும். இவை ஓரிரு நாட்களில் தானாக சரியாகிவிடும். இருப்பினும், இந்த புண்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து, சிவப்பு திட்டுகளுடன் காணப்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications











