Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
உடலில் அழுக்குகள் அதிகம் தேங்கியுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமாக அழுக்குகள் தேங்கியுள்ளதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். நமது உடலில் அழுக்குகள் அதிகம் இருந்தால், நமது உடல் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
ஒருவரது உடலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தால், அது பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். நமது பழக்கவழக்கங்கள், உண்ணும் உணவுகள் முதல் தினமும் பல்வேறு விஷயங்களால் நமது உடலில் அழுக்குகள் சேர்கின்றன. இப்படி சேரும் அழுக்குகளை உடலினுள் உள்ள பல்வேறு உறுப்புக்கள் அவ்வப்போது வெளியேற்றும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஒருவரது உடலில் அழுக்குகள் சேர்கிறது என்றால், அதற்கு நமது செரிமான மண்டலம் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம்.

ஆம், நாம் உண்ணும் உணவுகளை செரிமான மண்டலம் சரியாக ஜீரணிக்காத போது, உடலினுள் நச்சுக்கள் தேங்க ஆரம்பிக்கின்றன. இது தவிர ஒருவரது உடலில் நச்சுக்கள் அதிகரிக்க சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுகளில் உள்ள கெமிக்கல்கள், நாம் தினமும் பயன்படுத்தும் சில கெமிக்கல்கள் கலந்த பொருட்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவைகளும் காரணங்களாக உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இவற்றை நம்மால் முழுமையாக தவிர்க்க முடியாது. ஆனால் உடலை சுத்தம் செய்யும் உணவுகளை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அந்த அழுக்குகளை வெளியேற்றலாம்.
சரி, ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமாக அழுக்குகள் தேங்கியுள்ளதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். நமது உடலில் அழுக்குகள் அதிகம் இருந்தால், நமது உடல் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் பருமன்
உடலில் அழுக்குகள் அதிகரிக்கும் போது, அவை உடலில் உள்ள கொழுப்புத் திசுக்களில் படிந்து, அதிகப்படியான உடல் எடை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நச்சுக்கள் அதிகாமக உடலில் சேரும் போது மெட்டபாலிசத்தின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, உடல் எடையை எளிதில் குறைக்க முடியாதவாறு செய்யும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தும், உடல் எடையைக் குறைப்பதில் சிரமத்தைக் கண்டால், உடலில் அழுக்குகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

சரும பிரச்சனைகள்
நமது சருமமும் உடலில் உள்ள அழுக்குகளை வியர்வையின் மூலம் வெளியேற்றும். இருப்பினும், சில நச்சுப் பொருட்கள் சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் தான் சருமத்தில் அரிப்புகள், முகப்பரு, சொரியாசிஸ், சீழ் நிறைந்த பருக்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே நீங்கள் அதிகமாக சரும பிரச்சனைகளை சந்தித்தால், உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

அதிகப்படியான சளி
மூச்சுத் திணறல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகல், மார்பு பகுதியில் வலி போன்றவை அனைத்துமே நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் அதிகளவு நச்சுக்கள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளாகும்.

தலைச்சுற்றல்
உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும் போது, அது நரம்புகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். நரம்புகளில் நச்சுக்கள் அதிகம் தேங்கும் போது, அது மைய நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். இதன் விளைவாக தலைச்சுற்றல், கவனச்சிதறல் மற்றும் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.

செரிமான பிரச்சனைகள்
அழுக்குகள் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, குடலில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது. மேலும் நச்சுக்கள் குடல் சுவற்றில் படிந்து, தேவையற்ற பொருட்கள் உடலில் சுற்ற வழிவகை செய்கிறது. இதன் விளைவாக குடல் சுவர் பாதிக்கப்பட்டு, வாந்தி, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

மோசமான இரத்த ஓட்டம்
உடலில் நச்சுக்கள் அதிகமாக இருக்கும் போது, அது உடலின் இரத்த ஒட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும் போது, இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் உடலின் பல்வேறு உறுப்புக்களான கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றில் அப்படியே படிந்து, அவற்றின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தும்.

உடல் சோர்வு
உங்களால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அடிக்கடி நள்ளிரவில் எழுகிறீர்களா அல்லது காலையில் எழ முடியாமல் சிரமப்படுகிறீர்களா? இது தவிர எப்போதும் உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோம்பல் போகவில்லையா? அப்படியானால் உடலில் அழுக்குகள் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி நோய்வாய்ப்படுவது
உடலில் அழுக்குகள் அதிகரிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப்டுகிறது. எப்படியெனில் அழுக்குகளானது நோயெதிர்ப்பு செல்களின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்குகிறது. மேலும் அதிகப்படியான நச்சுக்கள் உடலில் அழற்சியை தூண்டிவிடுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படகூடும்.

தசைவலி மற்றும் மூட்டு வலி
உடலில் நச்சுக்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை பாதிப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இதன் விளைவாக உடலின் ஆற்றல் குறைவதுடன், உடலில் பல்வேறு வலிகளை சந்திக்கக்கூடும். உடலுக்கு போதுமான கனிமச்சத்துக்கள் கிடைக்காத போது, தசை மற்றும் எலும்புகளில் வலி எடுக்க ஆரம்பிக்கும். இதைக் கொண்டும் உடலில் அதிக அழுக்குகள் உள்ளது என்பதை அறியலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்துமே, தினசரி நீங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளாக இருக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகளை தொடர்ந்து அனுபவிக்கும் போது, உடனே உஷாராகி, உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ள தொடங்கி, உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications