Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்தால் வெளிப்படும் சில அசாதாரண அறிகுறிகள்!
கனெக்டிகட் பல்கலைகழகத்தின் மனித செயல்திறன் ஆய்வகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் படி, லேசான உடல் வறட்சி/நீரிழப்பு கூட ஒருவரின் மனநிலை, ஆற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மாற்றும்.
என்ன தான் மழைக்காலம் ஆரம்பித்தாலும், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கிறது. இதனால் அதிகமாக வியர்த்து, உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தீவிரமாகி, அதன் விளைவாக இரத்தம் உறைவது, வலிப்பு மற்றும் உயிருக்கே உலை வைக்கும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கனெக்டிகட் பல்கலைகழகத்தின் மனித செயல்திறன் ஆய்வகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் படி, லேசான உடல் வறட்சி/நீரிழப்பு கூட ஒருவரின் மனநிலை, ஆற்றல் நிலை மற்றும் சிந்திக்கும் திறனை மாற்றும் என தெரிய வந்தது.
ஆய்வில் நடத்தப்பட்ட சோதனைகளின் படி, ஒருவர் ட்ரெட்மில்லில் 40 நிமிடம் நடந்தாலோ அல்லது ஓய்வு நிலையில் அமர்ந்திருந்தாலோ எதுவாயினும் லேசான உடல் வறட்சி ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். லேசான உடல் வறட்சி என்பது உடலில் உள்ள சாதாரண நீரின் அளவில் சுமார் 1.5 சதவீதம் இழப்பாக வரையறுக்கப்படுகிறது. அதனால் தான் ஆரம்பத்திலேயே உடல் வறட்சியை அறிந்து சரிசெய்ய முயற்சிப்பது மிகவும் முக்கியமாக கூறப்படுகிறது.
இருப்பினும், தாகம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் சாதாரணமாக ஒருவர் சந்திப்பது. இதைக் கொண்டு உறுதியாக உடல் வறட்சியை அறிவது என்பது கடினம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை உடல் வறட்சிக்கான சில அசாதாரண அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

வாய் துர்நாற்றம்
உடல் வறட்சியாக இருந்தால், உடலால் வாயில் போதுமான எச்சிலை சுரக்க முடியாமல் போகும். நிபுணர்களின் படி, ஒருவரது வாயில் போதுமான அளவு எச்சில் சுரக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி பெருக்கமடைந்து, அதன் ஒரு விளைவாக கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சரும வறட்சி
பெரும்பாலானோர் அதிகமாக வியர்ப்பவர்களுக்கு தான் உடல் வறட்சி ஏற்படக்கூடும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களின் படி, உடல் வறட்சியில் பல்வேறு நிலைகளை கடந்து செல்லும் போது, நீங்கள் அடிக்கடி தலைச்சுற்றலை சந்திப்பீர்கள் மற்றும் உடலில் போதுமான இரத்தம் இருக்காது. எனவே, கடுமையான சரும வறட்சியை சந்திப்பீர்கள். எனவே உங்கள் சருமத்தில் திடீரென்று வறட்சி ஏற்படுமாயின், உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தசைப் பிடிப்புகள்
உடல் அதிகமாக வெப்பமடையும் போது, தசைப் பிடிப்பு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். உடல் எவ்வளவுக்கு எவ்வளவு வெப்பமடைகிறதோ, அவ்வளவு தசைப் பிடிப்பை சந்திக்கக்கூடும். பொதுவாக தசைகள் கடினமாக உழைக்கும் போது, அவை அதிகமாக வெப்பமடையும். மேலும் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றின் மாற்றங்களின் விளைவாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

காய்ச்சல் மற்றும் குளிர்
நாள்பட்ட உடல் வறட்சியை சந்தித்தால், காய்ச்சல் அல்லது குளிர் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். காய்ச்சல் வருவது மிகவும் ஆபத்தானது. அதிலும் 101°F அதிகமாக காய்ச்சல் இருக்கும் போது, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இனிப்புக்களின் மீது ஆவல்
உடல் வறட்சியுடன் இருக்கும் போது, கல்லீரல் போன்ற உறுப்புக்கள் நீரைப் பயன்படுத்துவதால், கிளைக்கோஜன்கள் மற்றும் பிற ஆற்றல் கூறுகளை வெளியிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இது உணவின் மீதான ஆவலை அதிகரிக்க வழிவகுக்கும். எந்த மாதிரியான உணவின் மீதும் ஆவல் அதிகரிக்கலாம். ஆனால் உடலானது கிளைகோஜன் உற்பத்தில் சிரமப்பட்டால், இனிப்புகளின் மீதான ஆவல் அதிகம் காணப்படும். ஆகையால், நீங்கள் கடந்த சில நாட்களாக இனிப்புக்களின் மீது அதிக ஏக்கம் கொள்பவராக தெரிந்தால், நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, செலரி கீரை, லெட்யூஸ், சுரைக்காய், வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை வாங்கி அதிகம் சாப்பிடுங்கள். இதனால் உடல் வறட்சியில் இருந்து விடுபடலாம்.

தலைவலி
பொதுவாக மூளை ஒரு திரவ பையினுள் உள்ளது. இது மண்டைஓட்டை மோதாமல் பாதுகாக்கிறது. உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருக்கும் போது, திரவ பையினுள் உள்ள திரவ அளவு குறைந்து, மூளை மண்டை ஓட்டின் சில பகுதிக்கு எதிராக மோதி, தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு
ஆண்களுக்கு தினசரி போதுமான திரவ உட்கொள்ளல் சுமார் 15.5 கப் (3.7 லிட்டர்) திரவங்களும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 11.5 கப் (2.7 லிட்டர்) திரவங்களும் ஆகும். அதோடு அனைத்து பானங்களும் உடலில் நீர்ச்சத்தின் அளவை ஊக்குவிப்பதில்லை. குறிப்பாக ஆல்கஹால், எனர்ஜி பானங்கள் மற்றும் காஃப்பைன் போன்றவை உடல் வறட்சியை உண்டாக்கும். எனவே நற்பதமான பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பதோடு, குடிக்கும் நீரின் அளவையும் அதிகரியுங்கள்.



Click it and Unblock the Notifications