Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
ஊரடங்கு முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த விஷயங்களை தெரியாம கூட பண்ணிராதீங்க.... இல்லனா ஆபத்துதான்...!
கொரோனா வைரஸை தடுக்க இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது கொரோனா வைரஸ்தான். கொரோனா வைரஸை தடுக்க இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இந்த ஊரடங்கு எப்போது முடியும் என்பதுதான். இந்த ஊரடங்கு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் பாதித்துள்ளது.

நண்பர்களை சந்திக்க செல்வது, விரும்பிய ஹோட்டலுக்கு செல்வது, விரும்பிய ஊருக்கு செல்வது என அனைவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக ஊரடங்கு முடிவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஊரடங்கு முடிந்தால் மட்டும் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என்று நினைத்தால் அது தவறாகும். ஊரடங்கு முடிந்த பிறகும் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் உள்ளது. COVID-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதால், நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிவில் ஊரடங்கு முடிந்த பிறகு செய்யக்கூடாதா விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வெளியூர் செல்ல திட்டமிட வேண்டாம்
கொரோனா இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாற காரணம் மக்களின் பயணம்தான். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் நடமாட்டம்தான் உலகளவில் இந்த நோய் பரவ வழிவகுத்தது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும், சில மாதங்களுக்கு குடும்ப விடுமுறையையோ அல்லது வெளியூர் செல்வதையோ தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள். விடுமுறைக்கு வெளியூர் சென்று உங்கள் ஆரோக்யத்தை ஆபத்தில் வைப்பதை விட, வீட்டில் தங்கி பாதுகாப்பாக இருப்பது நல்லது.

கை கழுவுவதை நிறுத்தாதீர்கள்
COVID-19 இன் பரவலால் மக்கள் தங்களின் சுகாதாரத்தில் அதிகளவு அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளார்கள், பெரும்பாலான மக்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கை சுகாதாரத்தை கடைப்பிடிப்பது கொரோனா வைரஸைத் தடுப்பது மட்டுமல்லாமல், பல நோய்களையும் தடுக்ககிறது. கொரோனா வைரஸின் பரவல் முடிவுக்கு வந்தாலும், உங்கள் கைகளை தவறாமல் கழுவும் இந்த நல்ல பழக்கத்தை நிறுத்த வேண்டாம், ஏனெனில் இது உங்களை ஆரோக்கியமாகவும் நீண்ட காலமாக பிட்டாகவும் வைத்திருக்கும்.

க்ளப் மற்றும் பார்ட்டி செல்வதைத் தவிர்க்கவும்
நண்பர்களுடன் பார்ட்டி, க்ளப், போன்றவற்றிற்கு சென்று 1 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக நீங்கள் துடித்துக் கொண்டிருக்கலாம். பார்ட்டிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதுபோன்ற கூட்டமான இடங்களுக்கு செல்வது தொற்று ஏற்பட வழிவகுக்கும். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான சூழ்நிலை நிலவும் நிலையில் இதுபோன்ற இடங்களுக்கு செல்வது உங்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். கொரோனா ஆபத்து முற்றிலுமாக நீங்கும் வரை உங்கள் நண்பர்களுடன் இதுபோன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

மாஸ்க்கை தூக்கி எரிந்து விடாதீர்கள்
‘குணப்படுத்துவதை விட முன்னெச்சரிக்கை சிறந்தது' என்று சொல்வது போல, பொது இடங்களுக்கு செல்லும்போது உங்கள் முகமூடிகளை இன்னும் பயன்படுத்துவது சிறந்த வழி. நெரிசலான இடத்திற்குச் செல்லும்போது அல்லது ஷாப்பிங் செய்யும்போது உங்கள் முகமூடிகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. நீங்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க, முகமூடிகளைப் பயன்படுத்துவதைத் தொடரவும், கைகளை கழுவவும், சமூக தூரத்தை சிறிது காலம் கடைபிடிப்பது நல்லது.

பொது இடங்களில் சுவாச சுகாதாரத்தை பராமரிக்கவும்
ஊரடங்கு முடிந்த பிறகும் பொது இடங்களில் இருமல் மற்றும் தும்மல் வரும்போது அருகில் இருப்பவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். இருமல் மற்றும் தும்மலினால் வெளிப்படும் நீர்த்துளிகள் தான் உலகளவில் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையில் இதுபோன்ற அதிகரிப்புக்கு வழிவகுத்தது. எனவே பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் சுவாச சுகாதாரத்தை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு இருமல் அல்லது தும்மல் வரும்போது வாயை மூடிக்கொள்ளவும்.

வீட்டில் விஷேசம் வைக்க வேண்டாம்
அதிக எண்ணிக்கையிலான அறிகுறியற்ற COVID-19 வழக்குகள் வருவதால், பாதிக்கப்பட்டவர் யார், பாதிக்கப்படாதவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரடங்கு முடிவடைந்தாலும் தொடர்ந்து சமூக தூரத்தை கடைப்பிடிப்பது நல்லது. சில மாதங்களுக்கு பெரிய விருந்துகள் வைப்பதைத் தவிர்க்கவும். குடும்பச் செயல்பாடுகளுக்கு ஒன்றுகூடுவதையோ அல்லது பெரிய விருந்துகளை ஒன்றாகச் செய்வதையோ தவிர்க்கவும். முடிந்தவரை சமூகக் கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கலாம்.

பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சந்திக்க வேண்டாம்
உங்களுக்கு தெரிந்தவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தால் அவர்களை உடனடியாக சந்திக்க வேண்டாம். ஏனெனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அதற்கான குறிப்பிட்ட காலம் முடியும் வரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications











