Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்... உஷாரா இருங்க...
வாழைப்பழம் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இவற்றிலும் ஒருசில தீமைகள் உள்ளன. குறிப்பாக வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
வாழைப்பழம் மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டதும் கூட. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுவைக்காக பல உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடவும் உதவுகிறது. இந்த அற்புதமான பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழக்குகிறது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறத, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது, இதயத்தை பாதுகாக்கிறது, சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் அஜீரணத்தை விடுவிக்கிறது.

வாழைப்பழம் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இவற்றிலும் ஒருசில தீமைகள் உள்ளன. குறிப்பாக வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, உங்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் அல்லது சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டும். இல்லாவிட்டால், சாப்பிடும் வாழைப்பழமானது உடலில் சளியை அதிகம் தேங்கி வைத்துவிடும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத்தில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி6 போன்ற அனைத்துமே உள்ளன. இந்த அனைத்து சத்துக்களும் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உறுப்புகள் சீராக செயல்பட உதவக்கூடியவை.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்:
எலும்புகளுக்கு நல்லது
குளிர்காலத்தில் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், கால்சியம் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை தினமும் ஒன்று சப்பிட்டு வந்தால், எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைத்து, எலும்புகளின் அடர்த்தியும், வலிமையும் பராமரிக்கப்படும்.

உடல் எடை கட்டுப்படும்
வாழைப்பழம் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். ஏனெனில், இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை தாமதமாக்கும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். ஆகவே அடிக்கடி பசி எடுக்காது மற்றும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதயத்திற்கு நல்லது
ஆய்வுகளின் படி, நார்ச்சத்துள்ள உணவுகள் இதய நோய்கள் மற்றும் கரோனரி தமனி நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் இரத்த அழுத்தமும் எகிறாமல் இருக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்
வாழைப்பழத்தை தினமும் மாலையில் சாப்பிடுவது மிகவும் நல்ல பழக்கம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நாள் முழுவதும் கடினமாக உழைத்த தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவுகிறது. ஆகவே தினமும் மாலையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவது, உடல் சோர்வைக் குறைத்து, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது?
இன்று பலர் அவதிப்படும் ஓர் பொதுவான பிரச்சனையாக சைனஸ் பிரச்சனை உள்ளது. இப்பிரச்சனை இருப்பவர்கள் சளியை உடலினுள் அதிகம் உருவாக்கும் அல்லது தேக்கும் உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதுவும் பழங்களில், வாழைப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது அல்லது அளவாக சாப்பிடலாம்.

சைனஸ் பிரச்சனை என்றால் என்ன?
மருத்துவ மொழியில் சைனசிடிஸ் என்று அழைக்கப்படும் பிரச்சனை தான் சைனஸ் பிரச்சனை என்று மக்களால் பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில், நோயாளியின் நாசி எலும்பு அதிகப்படியான குளிர்ச்சியின் காரணமாக பெரிதாகிறது. குளிர்ச்சியான உணவுகள் அல்லது விஷயங்களைத் தவிர்த்தால், இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். ஆனால் நீண்ட காலமாக இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனை இல்லாதவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாழைப்பழத்தை அளவாக சாப்பிட்டால் தான் அவற்றின் நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
