Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து கொண்டிருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அந்த உறுப்பு சேதமடைவதைத் தடுக்கலாம். நமது உடலில் புற்றுநோய் செல்கள் எந்த பகுதியிலும் வளரலாம்.
புற்றுநோய் என்பது மிகவும் மோசமான மற்றும் கொடிய நோய். ஒருவருக்கு புற்றுநோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் எளிதில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. உடலின் ஒவ்வொரு பகுதியையும் தாக்குவதைக் கொண்டு இதன் வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் குணமாகிவிடலாம். மேலும் பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அந்த உறுப்பு சேதமடைவதைத் தடுக்கலாம். நமது உடலில் புற்றுநோய் செல்கள் எந்த பகுதியிலும் வளரலாம். ஆனால் அப்படி வளரும் போது அது ஒருசில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். அப்படிப்பட்ட ஆரம்ப கால புற்றுநோயின் அறிகுறிகளைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

சருமத்திற்கு அடியில் கட்டிகள்
உங்கள் உடலில் எங்கேனும் திடீரென்று சருமத்திற்கு அடியில் கட்டிகள் உருவானால், அது புற்றுநோயைக் குறிக்கும். ஆனால் அப்படி உருவான கட்டிகளைத் தொடும் போது நீங்கள் எவ்வித வலியும் தெரியாமல் இருந்தால், அது வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் இருக்கலாம். ஆனாலும், இம்மாதிரி திடீரென்று கட்டிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வதே புத்திசாலித்தனம். குறிப்பாக ஒருவர் தங்கள் உடலின் ஒருசில பகுதிகளை அவ்வப்போது சோதிக்க வேண்டும். அவை மார்பகம், விரைவிதைகள், அக்குள், தொண்டை, அடிவயிறு போன்றவை. ஏனெனில் இந்த பகுதிகளில் அசாதாரண கட்டிகள் உருவாகினால் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

சரும அரிப்பு
நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது புற்றுநோயை ஒரு பாக்டீரியா ஆக்கிரமிப்பது போல் நடத்துகிறது. இதன் விளைவாக இரத்த வெள்ளையணுக்கள் புற்றுநோய் செல்கள் உள்ள பகுதிக்கு அழிப்பதற்கான அனுப்பப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அப்பகுதி வெதுவெதுப்பாகவும், சிவந்தும், நிறமாற்றத்துடனும், ஒருவித இறுக்கம் அல்லது அரிப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறது. எனவே உங்களுக்கு காரணமின்றி திடீரென்று ஒரு பகுதியில் தீவிரமான அரிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்.

ஆறாத காயங்கள்
சருமத்தில் எங்கேனும் காயங்கள் அல்லது வெட்டு காயங்கள் ஏற்பட்டால், அது குணமடைய நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அந்த காயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தால், அது உடனே கவனிக்க வேண்டிய அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இதுவும் ஒரு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி. ஏனெனில் நோயெதிர்ப்பு மண்டலம் உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு முன்னுரிமை அளித்து, சிறு காயத்தை குணமாக்க முயற்சிக்காமல் இருக்கிறது. ஆகவே உங்களுக்கு இம்மாதிரியான பிரச்சனை இருந்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

நாக்கு அல்லது வாயினுள் புடைப்புகள்
உங்கள் வாயின் உள்ளே ஏதேனும் கட்டிகள் இருந்தால், குறிப்பாக ஈறுகள் அல்லது தொண்டையில் வெள்ளை நிறத்தில் ஏதேனும் புடைப்புகள் இருந்தால், உடனே கவனிக்க வேண்டும். ஏனெனில் இதுவும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்றாகும்.

பசியின்மை அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்
உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது எவ்விதமான இடையூறும் ஏற்பட்டால், அது கவலைக்குரிய ஒன்று. ஏனெனில் இச்செயலால் ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான உடலின் திறன் பாதிக்கப்படுகிறது மற்றும் குணப்படுத்தும் செயல்முறையும் தடைப்படுகிறது. எனவே நீங்கள் திடீரென்று விவரிக்க முடியாத பசியின்மையை உணர்ந்தால், அதுக்குறித்து உடனே மருத்துவரிடம் பேசுங்கள்.

குடலியக்கத்தில் மாற்றம்
இரண்டு நாட்களுக்கு மேல் உடல் கழிவுகள் வெளியேற்றப்படாமல் இருந்தால், அது கவலைக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும். அதுவும் மலத்தில் இரத்தம் இருப்பதைக் கண்டால், மலத்தின் நிறத்தில் மாற்றங்களைக் கவனித்தால், அதாவது மலம் கருமையாகவோ அல்லது வெளிரிய நிறத்திலோ தோற்றமளிக்கும். மேலும் மலம் கழிக்கும் போது கடுமையான வலியை அனுபவிக்க்கூடும், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது மலத்தில் சளியைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள். ஏனென்றால் இந்த அறிகுறிகள் அனைத்தும் குடல் புற்றுநோயைக் குறிக்கிறது.

சிறுநீர் கழிப்பதில் மாற்றம்
உங்கள் குடல் இயக்கத்தைப் போன்றே, சிறுநீர்ப்பை செயல்பாட்டிலும் அசாதாரணமான மாற்றங்களை கவனித்தால், அதுவும் கவலைக்குரிய அறிகுறிகளில் ஒன்றாகும். அதுவும் கழிக்கும் சிறுநீரின் அளவு, நிறம்,வாசனை அல்லது ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால், உடனே மருத்துவரிடம் கூறி உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

விவரிக்கப்படாத இரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தை தவிர பிற நாட்களில் விவரிக்கமுடியாத அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி அவரிடம் கூறி சோதிக்க வேண்டும். ஏனெனில் புற்றுநோய் இருந்தால், இம்மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.

குரல் மாற்றம்
உங்கள் குரலில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அது தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்று அல்லது தொண்டை புண்ணால் மட்டும் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை, குரல்வளையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இம்மாதிரியான மாற்றம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள்.

தொடர்ச்சியான இருமல்
இருமல் பல காரணங்களுக்காக ஒருவருக்கு ஏற்படலாம். ஆனால் நீங்கள் நீண்ட காலமாக தொடர்ச்சியான இருமலை சந்தித்தால், உங்கள் நுரையீரல், உணவுக்குழாய், தொண்டை அல்லது வயிற்றில் புற்றுநோய் செல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இருமலை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications











