Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க.. பிபி கண்ட்ரோலா இருக்கும்..
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இன்று உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் என்பது, தமனிகளை பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் இரத்தத்தை மற்ற உறுப்புக்ளுக்கு அனுப்ப இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மோசமான தூக்க பழக்கம் மற்றும் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்காமை போன்றவையாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்தை பாதிப்பதோடு, உடலில் பிற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரியான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகளின் உதவியுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இது தவிர ஒருசில டீக்களும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நீங்கள் தினமும் காலையில் டீ குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஒருசில டீக்களை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் டீக்கள் எவையென்பதைக் காண்போம்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைப்பது முதல் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நிர்வகிப்பது வரை, பல நன்மைகளை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான டீ தான் க்ரீன் டீ. ஆய்வுகளில் க்ரீன் டீயை குடிப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இதய திசுக்களில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. மேலும் க்ரீன் டீயில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே பிபி நோயாளிகள், ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பிபியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

செம்பருத்தி டீ
இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் உள்ள ஒரு பூச்செடி தான் செம்பருத்தி. இந்த செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மை விளைவிக்கும் பண்புகள் உள்ளன. குறிப்பாக இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க செம்பருத்தி டீ பெரிதும் உதவி புரிகிறது. செம்பருத்தி டீயை குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், இந்த செம்பருத்தி டீயை உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குடிக்கும் முன், மருத்துவரிடம் கேடுக் கொள்ள வேண்டும்.

ஊலாங் டீ
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும் மற்றொரு அற்புதமான மற்றும் ஆரோக்கியமான டீ தான் ஊலாங் டீ. இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கின்றன.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீ தற்போது ஏராளமான மக்களால் குடிக்கப்பட்டு வரும் மற்றொரு அற்புதமான டீயாகும். இந்த டீ உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆய்வுகளிலும் சீமைச்சாமந்தி டீ உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. செம்பருத்தி டீயைப் போன்றே, சீமைச்சாமந்தி டீயும் ரத்த நாளங்களை ரிலாக்ஸடைய செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இந்த டீயை தினமும் குடித்து வந்தால், இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றால், அதுவே இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கும்.

ப்ளாக் டீ
பால் டீயை விரும்பாத பலரும் தினமும் குடித்து வரும் ஒரு டீ தான் ப்ளாக் டீ. இந்த ப்ளாக் டீ ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது. ஆய்வுகளில் கூட, ஒரு நாளைக்கு 3 கப் ப்ளாக் டீ குடித்து வந்த உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்த அளவானது 2-3 புள்ளிகள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் டீ பிரியராக இருந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, ப்ளாக் டீயை தினமும் குடித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications
