Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
நீங்கள் தினமும் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்கள் எலும்புகளை இரும்பு போல மாற்றும் தெரியுமா?
ஆரோக்கியம் என்று வரும்பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியானதாகும். ஏனெனில் நமது உடலுக்கு சரியான வடிவத்தை கொடுப்பது நமது எலும்புகள்தான்.
ஒருவரின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியம் என்று வரும்பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியானதாகும். ஏனெனில் நமது உடலுக்கு சரியான வடிவத்தை கொடுப்பது நமது எலும்புகள்தான்.

ஒருவரின் வலிமை என்பது அவர்களின் எலும்புகள் எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதால் எலும்புகளில் பலவீனம் ஏற்படுகிறது. இவ்வாறு எலும்புகள் பலவீனம் அடைவதை உங்களின் சில தினசரி செயல்கள் தடுக்கக்கூடும். இந்த பதிவில் எலும்புகளை பாதுகாக்க நீங்கள் தினமும் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்க்கலாம்.

வேகமாக ஒடுங்கள்
ஒட்டப்பயிற்சி என்பது உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி தினமும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வேகமாக ஓடுவது உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். அதிக அழுத்தத்துடன் செய்யும் செயல்கள் உங்களின் எலும்பு செல்களைத் தூண்டும். இதன்மூலம் உங்கள் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

எடை தூக்குவது
பொதுவாக எடை தூக்குவது எலும்புகளை வலிமைப்படுத்தும் என்று நாம் அறிவோம். மாதவிடாய் நின்ற பெண்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது எடைகளை தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களின் எலும்புகளின் வலிமை சீராக இருக்கும். மற்றவர்கள் இதை தினசரி பழக்கமாக வைத்துக்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வைட்டமின் டி
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானதாகும் ஏனெனில் இதுதான் நமது உடலின் கால்சியத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. தினமும் வைட்டமின் டி இருக்கும் பொருட்களை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்/ மாத்திரைகள் மூலம் வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்வதை காட்டிலும் உணவுகள் மூலம் எடுத்துக் கொள்வது அதிக பலனைத் தரும்.

அதிக மீன் சாப்பிடுங்கள்
மீன் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறீர்களோ உங்கள் எலும்புகள் அவ்வளவு வலிமையாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்ற பொருட்களைக் காட்டிலும் மீனில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. எனவே வாரத்திற்கு மூன்று முறையாவது மீன் சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.

குதிப்பது
தினமும் காலையும் , மாலையும் 10 முதல் 20 முறை வரை குதிப்பது உங்களின் இடுப்பெலும்பை வலிமையாக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது அதிக பலனை வழங்கும். குதிப்பது எலும்புகளின் மீது நுண்ணிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, எலும்புகள் மீண்டும் கட்டமைக்கப்படும்போது அது வலிமை பெறுகிறது.

டயட் வேண்டாம்
உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள பலரும் நம்பியிருப்பது உடற்பயிற்சியையும், டயட்டையும்தான். அதிகளவு உடற்பயிற்சி செய்யும்போது அதற்கு சற்று பொருத்தமில்லாமல் கடுமையான டயட் இருக்கும்போது உங்களின் எலும்புகள் பலவீனமடையக்கூடும். குறிப்பாக பெண்கள் இவ்வாறு செய்யும்போது அவர்களின் மாதவிடாய் சுழற்சி, ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியில் பாதிப்பு போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

சமையல்
சமைக்கும் போது அதில் மிளகுத்தூள், பூண்டு போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக மசாலாப்பொருட்கள் உணவில் இருக்கும் உப்பின் அளவை குறைக்க உதவும். ஏனெனில் உப்பு அதிகமாக சாப்பிடும்போது அது உங்கள் உடலின் கால்சியம் உறிஞ்சும் குறைக்கும்.

சோயா உணவுகள்
உங்கள் உணவில் அதிக சோயா பொருட்களை சேர்த்துக் கொள்வது உங்கள் எலும்புகளை வலிமைப்படுத்த ஒரு புத்திசாலித்தனமான வழியாகும். சோயா உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வலிமையான எலும்புகளை பெற்றிருப்பார்கள் காரணம் அதிலிருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள். இதிலிருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் கலவை மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் உங்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மாத்திரைகள்
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் சில மாத்திரைகள் எலும்புகளின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் அவை உங்களின் எலும்புகளை பாதிக்குமா என்று மருத்துவரிடம் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அதிக ஆலிவ் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஆலிவ் பழங்களையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தத்தையும், வீக்கம் ஏற்படுவதையும் தடுக்கும். மேலும் அவை எலும்பு செல்கள் உருவாவதையும் ஊக்குவிக்கும். ஆலிவ் ஆயில் உங்கள் எலும்புகளுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்கும்.

சிகரெட்டை தவிர்க்கவும்
உங்கள் எலும்புகள் சிதையாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்றே புகைபிடிப்பதை நிறுத்தி விடுங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்த எண்ணற்ற காரணங்கள் உள்ளது, அதில் இத்தனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சிகரெட் குடிப்பது உங்கள் எலும்புகளின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

யோகா
யோகா செய்வதற்கெல்லாம் உங்களுக்கு நேரமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். தினமும் 12 நிமிடம் பாம்பு வடிவ யோகா செய்வது உங்களின் எலும்புகளின் மீது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த் யோகா உங்களின் முதுகெலும்பு, இடுப்பெலும்பு, தொடை எலும்பு போன்றவற்றை வலிமைப்படுத்தும்.



Click it and Unblock the Notifications