Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. இந்த கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் பலவீனமாகி, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மனித உடலில் எலும்புகள் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை தானே! மனித உடலுக்கு நல்ல அமைப்பையும், ஆதரவையும் வழங்குவதில் எலும்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த எலும்புகள் இல்லாவிட்டால் நமது உடல் ஒரு பெரிய தசைப்பகுதியாக மட்டுமே இருக்கும். எனவே உடலில் எலும்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க போதுமான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. இந்த கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் பலவீனமாகி, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வயது அதிகரிக்கும் போது எலும்புகள் தேய்மானமானவது இயற்கை தான். எனவே வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் மீது அதிக அக்கறைக் காட்ட வேண்டும். இதனால் எலும்புகளை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

எலும்புகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்
தற்போது ஏராளமானோர் ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவுகள், சுளுக்கு, கீல்வாதம், ஸ்கோலியோசிஸ் மற்றும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இவை அனைத்துமே எலும்புகளில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் ஆகும். இந்த பிரச்சனைகள் ஒருவருக்கு வந்துவிட்டால், எலும்புகள் தனது வலிமையை இழந்து, மெதுவாக அழிந்து போகக்கூடும். எனவே முடிந்தவரை இந்த பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம். இப்போது ஒருவரது எலும்பு திசுக்கள் பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைக் காண்போம். அந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகி போதுமான சிகிச்சையைப் பெறுங்கள்.

தொடர்ச்சியான முதுகு வலி
இன்று ஏராளமானோர் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் முதுகுவலி. இந்த முதுகு வலி பெரும்பாலும் மோசமான உடல் தோரணையால் வரக்கூடியதாகும். இருப்பினும் தொடர்ச்சியான முதுகு வலியை ஒருவர் அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது ஆரோக்கியமற்ற எலும்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். மோசமான வாழ்க்கைமுறை, உடலுழைப்பில்லாமை மற்றும் மோசமான உடல் தோரணை போன்றவை முதுகு வலிக்கு வழிவகுக்கும் காரணிகளாகும்.

நகம் உரிதல்
நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான நகங்களைப் பராமரிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. அதுவும் ஒருவரது நகங்களில் தோல் உரிவது மற்றும் நகங்கள் உடைவது போன்றவை மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் இவை உடலில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் எலும்புகள் பவீனமாக இருப்பதைக் குறிக்கின்றன. எனவே உங்கள் நகங்களில் இம்மாதிரியான பிரச்சனையை சந்தித்தால், மருத்துவரை அணுகி போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

எதையும் தூக்க அல்லது பிடிக்க முடியாமை
இதுவரை உங்களால் தூக்க முடிந்த பொருட்களைத் திடீரென்று தூக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அது எலும்பு பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இந்த அறிகுறியை கைப்பிடிகள், கதவு கைப்பிடிகளை பிடிக்கும் போது அல்லது கனமான பொருட்களைத் தூக்கும் போது உணரலாம்.

எளிதில் எலும்புகளில் காயங்கள்
பலவீனமான எலும்புகள் வலிமை, ஆயுள் மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கின்றன. இதனால் ஒருவர் உடற்பயிற்சிகள், ரன்னிங் அல்லது வாக்கிங் மேற்கொள்ளும் போது எளிதில் எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற எலும்பு பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கிறது. நீங்கள் சமீபத்தில் இம்மாதிரியான எலும்பு பிரச்சனையை அனுபவித்திருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டிய நேரம் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஈறுகள் சுருங்குவது
வாய் ஆரோக்கியத்தைக் கொண்டும் ஆரோக்கியமற்ற எலும்புகளை அறிந்து கொள்ள முடியும். எப்படியெனில் பற்கள் மற்றும் தாடை எலும்புகள் வாய் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், ஆரோக்கியமற்ற எலும்புகளின் வாயில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எலும்புகள் ஆரோக்கியமற்று பலவீனமாக இருந்தால், ஈறுகள் சுருங்குவது மட்டுமின்றி, பற்களும் விழ ஆரம்பிக்கும்.
மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் பலவீனமான மற்றும் பெரிய ஆபத்தில் உள்ள எலும்புகளின் அறிகுறிகளாகும்.



Click it and Unblock the Notifications