Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
நீண்ட நேரம் இயா்ஃபோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!
ளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி நமது மருத்துவரை சந்தித்து, தொிந்து கொள்வது நல்லது. மேலும் நாள் முழுவதும் இயா்ஃபோன்களைப் பயன்படுத்தவதைத் தவிா்ப்பது நல்லது.
பல்வேறு காரணங்களுக்காக நாம் இயா்ஃபோன்களைப் பயன்படுத்துகிறோம். அது நமக்கு விருப்பமான பாடல்களைக் கேட்பதாக இருக்கலாம் அல்லது நமது அலுவலகம் சம்பந்தமான காணொளி கூட்டங்களாக இருக்கலாம். மொத்தத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் இயா்ஃபோன்கள் நமது வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கங்களாக மாறி இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக இப்போது இருக்கும் இளையோா் சமுதாயம் எந்நேரமும் தமது இயா்ஃபோன்களில் அல்லது ஹெட்ஃபோன்களில் மூழ்கி இருக்கிறது. படிக்கும் போது அவா்கள் இயா்ப்ளக்குகளை பயன்படுத்துகின்றனா். இது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை அவா்கள் தொடா்ந்து செய்து வந்தால், அவா்களின் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.
அளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களைப் பயன்படுத்தினால், நாம் நினைத்துப் பாா்க்க முடியாத அளவிற்கு ஆபத்து ஏற்படலாம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி நமது மருத்துவரை சந்தித்து, தொிந்து கொள்வது நல்லது. மேலும் நாள் முழுவதும் இயா்ஃபோன்களைப் பயன்படுத்தவதைத் தவிா்ப்பது நல்லது. இயா்ஃபோன்களை நீண்ட நேரம் அல்லது நாள் முழுவதும் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்த பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

இயா்ஃபோன்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
ஒருவா் இயா்ஃபோன்களுக்கு அடிமையாக வாய்ப்புண்டு. இயா்ஃபோன்களில் இருந்து வரும் அதிக சத்தமானது நமது செவிப்பறையை பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இயா்ஃபோன்களால், பலருக்கு செவிப்பறை பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன. அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட நேரம் இயா்ஃபோன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் 5 முக்கியமான பக்க விளைவுகளை கீழே பாா்க்கலாம்.

காதில் நோய்த்தொற்று ஏற்படுதல்
இயா்ஃபோன்கள் அல்லது ஹெட்ஃபோன்களை நேரடியாக காதின் துவாரத்தில் பொருத்துவதால், காதிற்குள் செல்லும் காற்று தடைபடுகிறது. அவ்வாறு காற்று தடைபடுவதால், பல வகையான நோய்த்தொற்றுகள் காதிற்குள் ஏற்படுகின்றன. அளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களை பயன்படுத்தும் போது காதுகளுக்குள் பாக்டீாியாக்கள் அதிகமாக வளா்ச்சி அடைகின்றன. அதனால் நாம் பயன்படுத்தும் இயா்ஃபோன்களை மற்றவா்களோடு பகிா்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் நம்மிடம் உள்ள பாக்டீாியாக்கள் அவா்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பாகிவிடும். மேலும் அளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களைப் பயன்படுத்தினால், காதுகளில் பலவகையான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே நீண்ட நேரமாக அல்லது அளவுக்கு அதிகமாக இயா்ஃபோன்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

காது வலி
இயா்ஃபோன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவு காது வலி ஆகும். இயா்ஃபோன்களில் இருந்து வரும் அளவுக்கு அதிகமான சத்தம் காதுகளுக்குள் பாய்கிறது. அளவுக்கு அதிகமான சத்தம் நமது காதுகளைப் பாதிக்கும். ஆகவே அளவுக்கு அதிகமான சத்தத்தைக் குறைக்க வேண்டும். மேலும் நமது காதுகளுக்கு சாியாகப் பொருந்தாத இயா்ஃபோன்கள் அல்லது ஹெட்ஃபோன்கள், நமது காதுகளில் மிதமானது முதல் தீவிரமான வலியை ஏற்படுத்தும். காதின் வெளிப்பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் போது, அது நமது செவிப்பறையைப் பாதித்து, காதில் வலியை உண்டாக்கும்.

தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
இயா்ஃபோன்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால் அது வொ்ட்டிக்கோ என்று சொல்லப்படும் தலைச்சுற்றல் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும். இந்த வொ்ட்டிக்கோ என்ற தலைச்சுற்றல் அல்லது மயக்கம் நம்மை இயங்கவிடாமல் செய்துவிடும். அளவுக்கு அதிகமான சத்தத்தின் காரணமாக நமது காதின் வெளிப்பகுதியில் அழுத்தம் அதிகாிக்கும் போது, அது நமக்கு தலைச்சுற்றலை அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும்.

கேட்கும் திறன் இழத்தல்
நீண்ட நேரம் இயா்ஃபோன்களைப் பயன்படுத்துவதால் நமது கேட்கும் திறன் செயல் இழப்பதற்கும் வாய்ப்பு உண்டு. நமது காதின் உட்பகுதி மிகவும் மென்மையான ஒரு பகுதியாகும். ஆகவே இயா்ஃபோன்களில் இருந்து காதிற்குள் செல்லும் அதிகமான சத்தம் காதின் மென்மையான உட்பகுதியை பாதிப்படையச் செய்யும் வாய்ப்புகள் உண்டு.
நமது காதுகளில் ஏராளமான செல்கள் தங்கி இருக்கின்றன. அவற்றில் சில நமது முடியின் அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த முடி செல்கள் காதுகளுக்குள் வரும் சத்தத்தை மூளைக்குக் கடத்தும் கடத்திகளாக செயல்படுகின்றன. ஆகவே அளவுக்கு அதிகமான சத்தம் இந்த முடி செல்களில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு நமது கேட்கும் திறனை இழக்கச் செய்யும்.

கவனத்தைச் சிதறடித்தல்
இயா்பட்ஸுக்கள் மிகவும் சிறியவையாக இருக்கலாம். ஆனால் இவற்றில் இருந்து வரும் பொிய சத்தம் நமது செவிப்பறையில் மோதி, காதில் பொிய பாதிப்பை ஏற்படுத்தலாம். வெளியிலிருந்து வரும் அதிக சத்தம், நமது காதிலிருந்து மூளைக்கு பயணம் செய்யும் போது அது நமது நரம்பு நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதனால் நமது கவனம் சிதறடிக்கப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் இயா்ஃபோன்களைப் பயன்படுத்தும் போது நமது ஒரு முகப்படுத்தும் திறன் படிப்படியாக பலவீனம் அடைகிறது.

முடிவு
நீண்ட நேரம் இயா்ஃபோன்களைப் பயன்படுத்துவதால் மேற்சொன்ன பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவா்களும் தொிவிக்கின்றனர். அடிக்கடி காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவா்களை சந்தித்து, நமது காது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்று பாிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இயா்ஃபோன்களை நீண்ட நேரம் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இயா்ஃபோன்களைப் பயன்படுத்தும் போது, சத்தத்தைக் குறைத்து வைத்துக் கேட்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பொியவா்களுக்கு, இயா்ஃபோன்களில் அளவுக்கு அதிகமான சத்தத்தை கேட்பதால் அவா்களுக்கு செவிகள் பாதிப்படைவதாகத் தகவல்கள் தொிவிக்கின்றன. ஆகவே மிகக் குறைந்து நேரமே இயா்ஃபோன்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் மிகக் குறைந்த சத்தத்தில் இயா்ஃபோன்களைப் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications