Just In
- 17 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 21 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 1 day ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 1 day ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- News
உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?
உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கிய பணியான இரத்தத்தில் உள்ள நச்சுக்கள், அதிகப்படியான கனிமங்கள் மற்றும் உப்புக்கள், அதிகளவு நீர் மற்றும் உப்பு போன்றவற்றை வடிகட்டி, சுத்தமான இரத்தத்தை உடலுக்கு அனுப்புகிறது. மேலும் சிறுநீரகங்கள் கூட இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இதர உடலியக்கங்களுக்குத் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
சிறுநீரகங்கள் சுத்தம் செய்யும் பணியை செய்வதால் என்னவோ, இதில் பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறுநீரகங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. உலகிலேயே ஆண்களை அதிகம் தாக்கும் நோய்களுள் ஒன்று தான் சிறுநீரக புற்றுநோய். இந்த புற்றுநோய் பெரும்பாலும் 45 வயதிற்கு மேல் தான் ஒருவரைத் தாக்கும். மேலும் இந்த புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகள் உள்ளன.
முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...
ஆபத்துக் காரணிகள் என்பது புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிப்பவைகள். பலருக்கு ஆபத்துக் காரணிகளால் புற்றுநோய் வந்தாலும், பெரும்பாலும் நேரடியாக புற்றுநோய் ஒருவரைத் தாக்குவதில்லை. மேலும் பல ஆபத்துக் காரணிகள் புற்றுநோயை உண்டாக்குவதில்லை. சில சமயங்களில் தெரியாத காரணிகளாலும் புற்றுநோய் தாக்கக்கூடும். இப்போது சிறுநீரக புற்றுநோயின் ஆபத்துக் காரணிகளைக் காண்போம்.

புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பதால் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். அதிலும் புகைப்பிடிப்பதால் ஆண்களுக்கு 30% சிறுநீரக புற்றுநோயும், பெண்களுக்கு 25% சிறுநீரக புற்றுநோயும் வருவதற்கான அபாயம் உள்ளதாக நம்பப்படுகிறது.

பாலினம்
பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறுநீரக புற்றுநோயின் அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

இனம்
சிறுநீரக புற்றுநோயால் கருப்பின மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வயது
சிறுநீரக புற்றுநோய் பொதுவாக பெரியவர்களிடம் தான் காணப்படுகிறது. அதிலும் 50 முதல் 70 வயது வரை உள்ளவர்களிடம் கண்டறியப்படுகிறது.

உடல் எடை
குண்டாக உடல் பருமனுடன் உள்ளவர்களுக்கும், சிறுநீரக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக, இதுக்குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் பருமனுடன் இருப்பவர்கள், அதைக் குறைக்கும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம்
ஆண்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் இருந்தால், அவர்களுக்கு சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வலி நிவாரண மருந்துகள்
பீனாசிடின் என்னும் பொருள் நிறைந்த வலி நிவாரணிகள் அதெரிக்காவில் 193 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப் போல் நீர்ப்பெருக்கிகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளான ஆஸ்பிரின், அசிட்டமினோபென் மற்றும் ஐபுரோஃபென் போன்றவைகளும் சிறுநீரக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டுள்ளது.

கேட்மியம் வெளிப்பாடு
சில ஆய்வுகளில் மெட்டாலிக் பொருளான கேட்மிய வெளிப்பாட்டிற்கும், சிறுநீரக புற்றுநோய்க்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் பேட்டரி கம்பெனிகள், பெயிண்ட் கம்பெனிகள் அல்லது வெல்டிங் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய்
சிறுநீரக செயல்பாடு பல நாட்களாக மோசமாக உள்ளவர்களுக்கு சிறுநீரக புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பலநாள் டயாலிசிஸ்
யார் ஒருவர் பல நாட்களாக டயாலிசிஸ் மேற்கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு சிறுநீரகங்களில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் டயாலிசிஸ் மேற்கொள்பவர்களுக்கு புற்றுநோயின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அது பரவுவதற்கு முன் நீக்கிவிட முடியும்.

பரம்பரை
பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக புற்றுநோய் இருந்திருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 50 வயதிற்கு முன் ஒருமுறை சிறுநீரகங்களை பரிசோதித்துக் கொள்வதன் மூலம், இந்நோயின் தீவிரத்தைக் குறைத்து, ஆரம்பத்திலேயே சரிசெய்ய முடியும்.