Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...
கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான, மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.
கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. சிறிதும் பாரபட்சம் பார்க்காமல் மக்கள் அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. என்ன தான் அனைவரையும் தாக்கினாலும், அது ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் லேசான மற்றும் மிதமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் சிலர் கடுமையான கோவிட் சிக்கல்களை சந்திப்பதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.

உதாரணமாக, வயதானவர்கள் மற்றும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களை கொரோனா நோய்த்தொற்று தாக்கினால், அவர்கள் கோவிட்-19 இன் கடுமையான சிக்கல்களைப் பெறுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக பல்வேறு சுகாதார அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளனர். கீழே ஆய்வுகள் பரிந்துரைத்தபடி கடுமையான கோவிட் -19 ஐ உருவாக்கும் சில ஆபத்து காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் பருமனாக இருப்பது
தி லான்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அதிக எடையுடன் இருப்பது ICU சேர்க்கை உட்பட கோவிட்-19 இன் கடுமையான விளைவுகளின் அபாயத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 இன் மோசமான விளைவுகளின் ஆபத்து ஒரு சதுர மீட்டருக்கு 23 கிலோகிராம் (கிலோ / மீ 2) க்கு மேல் BMI உள்ளவர்களில் உயரத் தொடங்குகிறது. அதுவும் BMI-யின் ஒவ்வொரு யூனிட் அதிகரிப்பிற்கும், மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்து 5 சதவீதம் அதிகமாகவும், ICU சேர்க்கையின் ஆபத்து 10 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எடை குறைவாக இருப்பது
எடை குறைவான நபர்களும் (BMI 18.5 க்கும் குறைவானவர்கள்) கடுமையான கோவிட்-19 ஐ உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று மேற்குறிப்பிட்டுள்ள அதே லான்செட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. முந்தைய ஆய்வுகள் கூட எடை குறைவாக இருப்பதை மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பது ஆகியவற்றுடன் இணைத்துள்ளன. மேலும் ஒரு ஆய்வில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஆராய்ச்சியாளர்கள், மிக அதிகமான அல்லது மிகக் குறைந்த BMI இருப்பது கோவிட்-19 இன் கடுமையான நிகழ்வுகளுக்கு வலுவான ஆபத்து காரணி எனவும் விவரித்தனர்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது, அவர்கள் கடுமையான அறிகுறிகளையும், சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதுவும் சர்க்கரை நோயுடன், இதய நோய் அல்லது பிற நோய்களை கொண்டிருந்தால், அது கோவிட்-19 இன் தீவிரத்தை மேலும் மோசமாக்கும். எனவே கோவிட் தொற்றால் நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க சர்க்கரை நோயை நன்கு நிர்வகிக்க முயலுங்கள்.

கர்ப்பம்
கடுமையான கோவிட்-19 க்கு கர்ப்பமும் ஒரு ஆபத்து காரணியாக நம்பப்படுகிறது. கோவிட்-19 இன் கடுமையான அறிகுறிகளை அனுபவித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தக்கசிவு, கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் மற்றும் குறைப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு தேசிய சுகாதார ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் சிகிச்சை
EBioMedicine இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நீண்டகால கோவிட் -19 நோய்த்தொற்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலங்களின் சமரசம் காரணமாக பல மாதங்களுக்கு கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், புற்றுநோய் அல்லாத நோயாளிகளுடன் ஒப்பிடும் போது புற்றுநோய் உள்ள நோயாளிகளில் மிகவும் கடுமையான கோவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.



Click it and Unblock the Notifications