For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…!

நிமோனியாவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். பொதுவாக வயது, நுண்ணுயிரிகளின் வகை மற்றும் உடல்நிலை பொருத்து நிமோனியா அறிகுறிகள் காணலாம்.

|

உலகில் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை (ஐந்து வயதுக்குட்பட்ட) நிமோனியா காரணமாக மரணமடைகிறது என்கிறது இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை. 2015இல் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், அந்த ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.

World Pneumonia Day

நிமோனியா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ஆம் தேதியை "உலக நிமோனியா தினமாக" உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது. நிமோனியாவால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நிமோனியா முதன்மையான காரணமாக உள்ளது. முதியவர்களின் இறப்பைப் பொருத்தவரை மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடுத்தப்படியாக மூன்றாவது காரணமாக நிமோனியா உள்ளது. மார்பகப் பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதித்தல், ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிமோனியா என்றால் என்ன?

நிமோனியா என்றால் என்ன?

நுரையீரல் திசு அழற்சியே (வீக்கம்) நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப்படுகின்றன. வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் இந்நோய் ஏற்படுகிறது. பொதுவாக நாம் காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நிமோனியாவை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் நிமோனியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

நிமோனியாவின் அறிகுறிகள்

நிமோனியாவின் அறிகுறிகள்

நிமோனியாவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். பொதுவாக வயது, நுண்ணுயிரிகளின் வகை மற்றும் உடல்நிலை பொருத்து நிமோனியா அறிகுறிகள் காணலாம்.

இருமல்

குளிர் காய்ச்சல்

நடுக்கம்

வேகமாக மூச்சுவிடுதல்

மூச்சுத் திணறல்

வயிற்றுப்போக்கு

அதிகளவு வியர்வை வெளியேறுதல்

உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல்

நெஞ்சு வலி

பசியின்மை

உடல் சோர்வு

அதிகப்படியான இதய துடிப்பு

நிமோனியா எவ்வாறு பரவுகிறது?

நிமோனியா எவ்வாறு பரவுகிறது?

குழந்தையின் மூக்கு அல்லது தொண்டையில் பொதுவாக இருக்கும் வைரஸ் அல்லது நுண்ணுயிரி நுரையீரலைப் பாதித்தல் மூலம் நிமோனியா பரவுகிறது. இருமல் அல்லது தும்மல் மூலம் நோய்பரப்பிகள் பரவலாம். இரத்தம் மூலமும் பரவலாம் (பிறக்கும்போது மற்றும் பிறந்த உடனையும்).

யாரையெல்லாம் நிமோனியா தாக்கும்?

யாரையெல்லாம் நிமோனியா தாக்கும்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறையும்போது, குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இதானால் குழந்தைகளை எளிதில் நிமோனியா தாக்கும். 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நிமோனியா வர வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பக்கவாதத்தால் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு.

நிமோனியாவுக்கு என்ன சிகிச்சை?

நிமோனியாவுக்கு என்ன சிகிச்சை?

நிமோனியா சிகிச்சையானது முக்கியமாக நிமோனியாவின் வகை, அதன் தீவிரத்தன்மை, அதை உண்டாகும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பொறுத்தது மேற்கொள்ளப்படும். நிமோனியா அறிகுறிகள் தென்பட்டால் நிவாரணம் அளித்தல், நோய் தொற்றுதலைத் தீர்த்தல் மற்றும் மேலும் உடல்நிலை மோசமடையாமல் தடுத்தல் ஆகிய சிகிச்சை முறைகள் கொடுக்கப்படும். பொதுவாக நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமான நீர் வறட்சி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, அவர்களுக்கு அதிகமான திரவ உணவுகளை வழங்க வேண்டும்.

நிமோனியா வராமல் பாதுகாப்பது எப்படி?

நிமோனியா வராமல் பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளுக்கு சரியான கால அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமால் இருப்பதாலும் நிமோனியா ஏற்படவாய்ப்பிருக்கிறது. ஆதலால், பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் கட்டாயமாகத் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். பிறந்த குழந்தைகளுக்கு சரியான கால அளவில் நிமோனியா தடுப்பு ஊசி கட்டாயம் போடவேண்டும். ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. முதியவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப்படுகிறது.

சாதாரணமாக காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் கூட, அலட்சிய படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தைகளை நிமோனியா போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது. தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுத்தம் பேணிவந்தால் நிமோனியாவை வரவிடாமல் தடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Pneumonia Day: Pneumonia Causes, Symptoms, Complications and Treatment

Read on to know the Pneumonia Causes, Symptoms, Complications and Treatment
Story first published: Wednesday, November 13, 2019, 10:43 [IST]
Desktop Bottom Promotion