Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
இந்த பிரச்சனை இருந்தா பப்பாளி சாப்பிடாதீங்க... இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்..!
இதுவரை நீங்கள் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ஒரு உணவின் நன்மையை எந்த அளவு தெரிந்து வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவில் அதன் தீமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு அற்புத பழம். அதோடு இது எளிதில் கிடைக்கும் பழமும் கூட. பப்பாளியை சாப்பிடுவது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவதற்கு நல்லதாக கருதப்படுகிறது. இத தவிர, பப்பாளி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதாக கருதப்படுகிறது.

பப்பாளியை நன்கு கனிந்த நிலையிலும் சாப்பிடலாம் மற்றும் காயாகவும் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிட்டாலும் அவற்றில் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டுமே உள்ளன. இதுவரை நீங்கள் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ஒரு உணவின் நன்மையை எந்த அளவு தெரிந்து வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவில் அதன் தீமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியின் சில தீமைகளையும், இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதையும் காண்போம்.

ஆஸ்துமா அல்லது சுவாச நோய் உள்ளவர்கள்
உங்களுக்கு ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள். ஏனெனில் பப்பாளியில் பாப்பைன் உள்ளது. இது இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும். இது தவிர, பப்பாளியை உட்கொண்டால் வீக்கம், தலைச்சுற்றல், முகப்பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது
பப்பாளி சூடான பண்புகளைக் கொண்டது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக பப்பாளி கருச்சிதைவை கூட ஏற்படுத்தும். ஆகவே இப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள்
மஞ்சள் காமாலை உள்ள நோயாளிகள் பப்பாளியை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள்
அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயம் விரைவில் ஆறாமல் பாடாய் படுத்திவிடும்.

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து எளிதில் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும். ஆனால் இந்த பப்பாளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்புகள் போன்றவற்றை உண்டாக்கும்.

இதய நோயாளிகள்
இதய நோய் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு பப்பாளியை சாப்பிட்டால், அது இதயத் துடிப்பைக் குறைத்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள்
இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், பப்பாளியும் இரத்தத்தை மெலிதாக்கும் திறன் கொண்டது. ஆகவே இந்த மருந்துகளை எடுப்பவர்கள் பப்பாளியை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்
பப்பாளி இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்பதால் சர்க்கரை நோய்க்கான மருந்தை எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது. தற்போது ஏராளமான மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், இதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

பப்பாளியை வாழைப்பழத்துடன் சாப்பிடாதீர்கள்
எப்போதுமே பப்பாளி பழத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் இந்த இரண்டு பழங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றன. ஆயுர்வேதத்தில், இவ்விரண்டு பழங்களை ஒன்றாக சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீர்குலையும் மற்றும் அஜீரண கோளாறு, வாந்தி, குமட்டல், வாய்வு தொல்லை மற்றும் அடிக்கடி தலைவலியையும் உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications