Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
யாரெல்லாம் எலுமிச்சையை தங்கள் உணவில் சேர்க்கக்கூடாது தெரியுமா?
எலுமிச்சையில் என்ன தான் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், ஒருசிலருக்கு எலுமிச்சை மோசமான விளைவை ஏற்படுத்தும்.
பழங்களில் வைட்டமின் சி அதிகம் கொண்ட ஓர் புளிப்புச் சுவைக் கொண்ட ஓர் பழம் தான் எலுமிச்சை. இப்பழத்தின் புளிப்புச் சுவையினால் இது பல்வேறு சாலட்டுகள் மற்றும் உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் 58 கிராம் எலுமிச்சையில் இருந்து உடலுக்கு 30 கிராம் வைட்டமின் சி கிடைக்கின்றன. மேலும் கை வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் எலுமிச்சையானது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படிப்பட்ட எலுமிச்சையில் என்ன தான் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருந்தாலும், ஒருசிலருக்கு எலுமிச்சை மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆம், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் எலுமிச்சையை தங்களின் உணவில் சேர்க்கும் போது, அது தீங்கு விளைவிப்பதோடு மட்டுமின்றி, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை யாரெல்லாம் எலுமிச்சையை சாப்பிடக்கூடாது என்பதை இப்போது சொல்லவிருக்கிறது. அதைப் படித்து உங்களுக்கு அப்பிரச்சனை இருப்பின் எலுமிச்சையை உணவில் சேர்க்காதீர்கள்.

மிகவும் குறைவான இரத்தம்
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும். இப்படி இரும்புச்சத்து மாத்திரைகளை எடுப்பவர்கள் எலுமிச்சையை எடுக்காதீர்கள். ஏனெனில் இது இம்மாத்திரைகளின் விளைவை நடுநிலையாக்கிவிடும்.

வயிற்றுப்புண்
அல்சர் அல்லது வயிற்றில் புண் இருப்பவர்கள், எக்காரணம் கொண்டும் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், வயிற்றில் உள்ள புண்ணை மேலும் பெரிதாக்கி, நிலைமையை மோசமாக்கிவிடும்.

பல் கூச்சம்
உங்களுக்கு பல் கூச்சம் இருந்தால், எலுமிச்சையை எடுக்காதீர்கள். ஏனென்றால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் எனாமலை சேதப்படுத்திவிடும். அதேப்போல் பற்களைத் துலக்கியதும் எலுமிச்சை நீரை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், அது பற்களை பலவீனமாக்கும்.

வெறும் வயிற்றில் கூடாது
உடல் எடையைக் குறைக்க அல்லது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பார்கள். ஆனால் இது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அசிடிட்டி ஏற்கனவே இருந்து, எலுமிச்சை நீரைக் குடித்தால், அது வயிற்று காயத்தை தீவிரமாக்கிவிடும். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை அருந்தாதீர்கள்.

வாய்ப்புண்
வாய்ப்புண் இருப்பவர்கள் அமிலத்தன்மை அதிகம் கொண்ட எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது வாய்ப்புண்ணை பெரிதாக்குவதோடு, எரிச்சலையும் உண்டாக்கும். உங்களுக்கு வாய்ப்புண் விரைவில் குணமாக வேண்டுமானால், எலுமிச்சை உட்கொள்வதை நிறுத்துங்கள்.

நெஞ்செரிச்சல்/அசிடிட்டி
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.

சென்சிடிவ் சருமத்தினர்
எலுமிச்சை சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை. ஆனால் எப்போதும் இதன் சாற்றினை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் பருக்களை உண்டாக்கும்.

குறிப்பு
எக்காரணம் கொண்டும் எலுமிச்சையை பால், பப்பாளி, இறைச்சி, தயிர், தக்காளி, பால் பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இந்த உணவுகளுடன் சேர்ந்தால், அது வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் பற்களின் எனாமல் தேய ஆரம்பிக்கும். பற்களின் எனாமல் போய்விட்டால், அதை மீண்டும் பெற இயலாது மற்றும் எனாமல் இல்லாவிட்டால், பற்களின் நிறம் மாறும் மற்றும் பற்கள் மிகவும் சென்சிடிவ்வாகிவிடும். எலுமிச்சையில் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பெற அளவாக சாப்பிடுவதே நல்லது. அளவுக்கு மிஞ்சினால் எலுமிச்சையும் நஞ்சாகிவிடும்.
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது பற்களின் எனாமலை அழிக்கும். அதன் ஆபத்தைக் குறைப்பதற்கு, எலுமிச்சை நீரை ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிக்கவும் மற்றும் அதன் பின் வாயை நீரால் கழுவ வேண்டும். நெஞ்செரிச்சலைப் பற்றி கூறும் போது, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிலருக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம்.
எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர கலவைகள் உள்ளதால், இவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. எலுமிச்சையானது எடை இழப்பிற்கு உதவும் மற்றும் இது இதய நோய், இரத்த சோகை, சிறுநீரக கற்கள், செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications