உலகெங்கிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் அவஸ்தைப்படும் நோய் குறித்து தெரியுமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் தினந்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பால்வினை தொற்றுக்களால் அவஸ்தைப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் தினந்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பால்வினை தொற்றுக்களால் அவஸ்தைப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதில் பொதுவான சில பால்வினை தொற்றுக்களாவன கிளமிடியா, கோனோரியா, ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் சிபிலிஸ்.

உலக அளவில் ஒவ்வொரு 25 பேரில் சராசரியாக ஒருவருக்கு இந்த பால்வினை தொற்றுக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Over One Million STIs Diagnosed Every Day: All You Need To Know About These Infections

பால்வினை தொற்றுக்களாவது உடலுறவின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் இரத்தம், விந்தணு அல்லது யோனி மற்றும் இதர உடல் திரவங்கள் வழியாக பரவுகின்றன. அதில் பொதுவான சில பாலியல் நோய்களாவன ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், கிளமிடியா, கோனோரியா, சிபிலிஸ், ஹெர்பீஸ், எச்.ஐ.வி மற்றும் பல.

பல சந்தர்பங்களில், கர்ப்ப காலம்/பிரசவத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கு, அல்லது தொற்று ஏற்பட்ட இரத்தம் அல்லது பகிரப்பட்ட ஊசிகள் போன்ற பாலியல் அல்லாத காரணங்களாலும் தொற்றுக்கள் ஏற்படக்கூடும். பால்வினை நோய்கள் எப்போதும் அறிகுறிகளை வெளிக்காட்டாது. இதன் பொருள், பாதிக்கப்பட்டவர் என்பது தெரியாமல், ஆரோக்கியமானவராக காணப்படும் நபர்களிடமிருந்தும் கூட பால்வினை நோய்களுக்கு ஆளாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்வினை தொற்றுக்களின் அறிகுறிகள் என்ன?

பால்வினை தொற்றுக்களின் அறிகுறிகள் என்ன?

பால்வினை நோய்கள் அல்லது பால்வினை தொற்றுக்கள் வெவ்வேறு வகையான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. அதில் சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரியாது. இந்த காரணங்களால் பலருக்கும் நிலைமை மோசமான பின்னரே பால்வினை நோய்கள் அல்லது தொற்றுக்கள் இருப்பது தெரிய வருகிறது. ஒருவருக்கு பால்வினை நோய்களின் அறிகுறிகள் தொற்று ஏற்பட்ட சில நாட்களில் தெரிய வரும் அல்லது சில வருடங்கள் கழித்து கூட கண்டறியப்படும். அது ஒருவரைத் தாக்கிய உயிரினங்களைப் பொறுத்தது.

முக்கிய அறிகுறிகள்

முக்கிய அறிகுறிகள்

* பிறப்புறுப்பில், வாயில் அல்லது மலக்குடல் பகுதியில் புண் அல்லது வீக்கம்

* சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சலுணர்வு

* ஆண்குறியில் இருந்து திரவ கசிவு

* துர்நாற்றமிக்க யோனி கசிவு

* அசாதாரண இரத்தக் கசிவு

* உடலுறவின் போது வலி

* அடிவயிற்றுப் பகுதியில் வலி

* காய்ச்சல்

* கவட்டைப் பகுதி, கைகள் அல்லது பாதங்களில் கடுமையான அரிப்பு

பால்வினை தொற்றுகளுக்கு காரணம் என்ன?

பால்வினை தொற்றுகளுக்கு காரணம் என்ன?

பால்வினை நோய்கள் மற்றும் பால்வினை தொற்றுக்களைப் பரப்புவதில் பாலியல் செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நோய்த்தொற்றுகளானது பாலியல் தொடர்பு இல்லாமலும் பரவக்கூடும். உதாரணமாக, ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி வைரஸ்கள், ஷிகெல்லா மற்றும் ஜியார்டியா இன்டெஸ்டினாலிஸ். பாலியல் நோய்களானது பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படலாம்.

பாலியல் நோய்களின் அபாய காரணிகள்

பாலியல் நோய்களின் அபாய காரணிகள்

பாலியல் நோய்கள் ஒருவருக்கு ஏற்படுவதற்கு பல்வேறு அபாய காரணிங்கள் உள்ளன. யார் ஒருவர் பாலியல் செயல்பாட்டில் அதிகம் ஈடுபடுகிறாரோ அவருக்கு பால்வினை தொற்றுக்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. இதர காரணிகளும், பால்வினை நோய்கள் அபாயத்தை அதிகரிக்கும். அவையாவன:

பாதுகாப்பற்ற உடலுறவு

பாதுகாப்பற்ற உடலுறவு

தொற்று ஏற்பட்ட நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் போது, பால்வினை நோய்களுக்கான அபாயம் அதிகமாக உள்ளது. பால்வினை தொற்றுள்ளவருடன் எப்படி உடலுறவில் ஈடுபட்டாலும், நுண்ணுயிரிகளானது ஊடுருவி மற்றவருக்கு பரவும். எனவே எப்போது காண்டம் அணிய வேண்டும்.

பல நபருடன் உடலுறவு

பல நபருடன் உடலுறவு

அதிக நபருடன் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகவே உள்ளது.

பாலியல் நோய்களுக்கான வரலாறு

பாலியல் நோய்களுக்கான வரலாறு

உங்களுக்கு ஏற்கனவே ஒரு பால்வினை நோய்களுக்கான வரலாறு இருந்தால், மற்றொரு வகை பால்வினை தொற்றுக்கள் எளிதில் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

ஊசிகள்

ஊசிகள்

பாலியல் உறவைத் தவிர்த்து, ஊசிகளை பகிர்வதாலும் பால்வினை தொற்றுக்கள் பரவலாம். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை பல்வேறு நபர்களுகு பயன்படுத்துவதன் மூலம், தீவிர தொற்றுக்களான எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தாயிடமிருந்து குழந்தைக்கு

தாயிடமிருந்து குழந்தைக்கு

கோனோரியா, கிளமிடியா, எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்கள் கர்ப்பம் அல்லது பிரசவத்தின்போது பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு எளிதில் பரவுகின்றன.

பால்வினை நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி?

பால்வினை நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி?

ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது பால்வினை நோய்களுக்கு லேசான ஆபத்து இருந்தாலும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கலாம். கீழே பாலியல் நோய்த்தொற்றுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதற்கான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* தொற்று இல்லாத ஒருவருடன் மட்டும் உடலுறவில் ஈடுபட வேண்டும். இது பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கான மிகவும் சிறப்பான வழி.

* வாய்வழி உடலுறவு நோய்கள் எளிதில் பரப்பும். ஆகவே வாய்வழி உடலுறவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேப் போல் உடலுறவின் போது காண்டம் போன்றவற்றைப் பயன்படுத்த மறவாதீர்கள்.

* தடுப்பூசிகள் மனித பாப்பிலோமா வைரஸ், ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்றவற்றை தடுப்பதற்கான சிறந்த வழி. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கான HPV தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளது. மேலும் ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி பொதுவாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் 1 வயது குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion