Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஆண்களை இந்த இடங்களில் தீண்டுவது அவர்களின் பாலியல் ஆசையை பலமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
ஆண்கள் சிலசமயம் உறவில் ஈடுபட விரும்பமாட்டார்கள், அதற்கு அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது வெளிப்புற சூழ்நிலைகளோ காரணமாக இருக்கலாம்.
பொதுவாகவே ஆண்களுக்கு பாலியல் உறவில் அதிக ஆர்வமும், விருப்பமும் இருக்கும். உடலுறவில் ஈடுபடுவது என்பது வேடிக்கையும், சுவாரஸ்யமும் கலந்த ஒன்றாகும். உடலுறவில் ஆணுறுப்பு மட்டும்தான் ஈடுபடுகிறது என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும், ஆனால் உண்மையில் இதில் ஈடுபடும்போது ஆண்களின் பல உறுப்புகள் இதில் பங்கேற்கிறது.

ஆண்கள் சிலசமயம் உறவில் ஈடுபட விரும்பமாட்டார்கள், அதற்கு அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது வெளிப்புற சூழ்நிலைகளோ காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆண்களின் உடலில் சில பாகங்களை தீண்டுவது அவர்களின் பாலியல் ஆசையைத் தூண்டக்கூடும் என்று பாலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் ஆண்களின் பாலியல் ஆசையைத் தூண்டும் பாகங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பாதங்கள்
மனித உடலில் பாதங்கள் மிகவும் உணர்திறன் மிக்கவையாகும், இது ஆண்களுக்கு சிற்றின்பத்தை ஏற்படுத்தும் முக்கியமான பாகமாகும். இந்த இடத்தில் தீண்டுவது உங்கள் துணை உறவிற்கு தயார் என்பதற்கானஅறிகுறி ஆகும். கால்களின் பாதம் பிறப்புறுப்புடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். இங்கு கொடுக்கும் அழுத்தம் உங்களின் பாலியல் உணர்வைத் தூண்டும்.

தொப்புள்
நமது உடலில் மிகவும் குறைவான கவனத்தை பெறும் ஒரு இடம் என்றால் அது இதுதான். ஆனால் இதனைத் தொடும்போது உங்கள் உடலில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். இது அனைவருக்கும் உணர்திறன் கொண்ட பகுதியாக இருக்குமா என்றால் அது சந்தேகம்தான் ஆனால் உணர்திறன் இருந்தால் இது உங்களின் பாலியல் ஆசையை வெகுவாகத் தூண்டும். உங்கள் துணைக்கு இந்த இடத்தில் உணர்த்திறன் இருக்கிறதா என்பதை இதனைச் சுற்றி இருக்கும் வட்டமான இடத்தில் தீண்டுவதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உதடுகள்
ஆண்கள் உடலின் மிகவும் முக்கியமான அதிக உணர்திறன் கொண்ட பகுதி இதுவாகும். இது அதிகளவு சிறிய திசுக்களால் நிறைந்த இடமாகும். உதடுகளை தீண்டும் போதெல்லாம் அது முதுகெலும்புக்கு கீழே கூச்சத்தை உருவாக்கும், இது பாலியல் உணர்வை அதிகரிக்கும்.

கழுத்து
இது நரம்புகள் முடிவடையும் இடமாகும், இதனை உதடுகள், கைகள் மற்றும் நாக்கு மூலம் தீண்டுவதன் மூலம் உங்களின் பாலியல் உணர்வைத் தூண்டும். இது உங்கள் பாலியல் உணர்வின் திருப்புமுனையாகும். மேலும் உங்கள் விரல்களை வருடுவதன் மூலமும் பாலியல் ஆசையை அதிகரிக்கலாம்.

காது மடல்கள்
காதில் கிசுகிசுப்பதற்கு இது மேலும் ஒரு காரணமாகும். காதுகள் பொதுவாகவே அதிக உணர்திறன் கொண்டவையாகும். காது மடல்களும், குழாய்களும் அனைத்து வகை தீண்டுதல்களுக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடும். இங்கே நாக்கைக் கொண்டு தீண்டுவது ஆண்களின் பாலியல் உணர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும்.

மார்புக்காம்புகள்
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது அதிக உணர்திறன் கொண்ட பாகமாகும். இது ஆண்களை மெய்மறக்கச் செய்யும். விரல்களால் தீண்டுவதில் இருந்து உதடுகளால் தீண்டுவது வரை அனைத்தும் ஆண்களின் பாலியல் ஆசையை அதிகரிக்கும்.

உச்சந்தலை
தலைமுடியை கோதுவது எப்போதும் ஆண்களுக்கு ஏன் உற்சாகத்தை அளிக்கிறது தெரியுமா? இதற்கு காரணம் அவர்களின் முடி மட்டுமல்ல ஆண்களின் உணர்திறன் மிக்க உச்சந்தலையை தொடுவதுதான். உச்சந்தலையில் இருக்கும் நரம்புகளை தீண்டுவது பாலியல் உணர்வைத் தூண்டும்.

அடிவயிறு
அடிவயிற்றில் இருந்து தொப்புளுக்கு இடைப்பட்ட பகுதியானது அதிக உணர்திறன் கொண்ட பகுதியாகும். மேலும் இந்த இடமானது ஆணுறுப்புக்கு மிகவும் அருகில் உள்ளது, எனவே இந்த இடத்தைத் தீண்டுவது அதிக பாலுணர்வைத் தூண்டும்.

முழங்கால்களின் பின்புறம்
இது பலரும் அறியாத ஒரு இடமாகும், ஆனால் மிகவும் சக்திவாய்ந்த இடமாகும். அதிக உணர்திறன் கொண்ட இந்த இடத்தை கையாளும்போது மென்மையாக தீண்டவேண்டியது அவசியமாகும். மென்மையாக தீண்டுவது அதிக ஆசையைத் தூண்டும்.

உள் தொடைகள்
இந்த இடத்தில் தீண்டுவது ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும். உள் தொடைகளை தீண்டுவது பாலியல் உணர்ச்சியை வெகுவாக அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications