For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா அச்சுறுத்தல்

தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா நோய் உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதுவகை மலேரியா நோயானது தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடு

|

தென்கிழக்கு ஆசியாவில் மருந்துகளால் குணப்படுத்த முடியாத மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதுவகை மலேரியா நோயானது தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது.தென்கிழக்கு ஆசியாவில் பரவி வரும் மலேரியா நோய் இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் உலக சுகாதார அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.

Malaria

மலேரியா நோயைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலானது. மலேரியா நோயை உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளும் பூச்சிக்கொல்லிகளும் செயல்படுகின்றன. ஆனால் 10 முதல் 20 ஆண்டுகளில் அந்த மருந்துகளுக்கு எதிராக செயல்படும் அளவுக்கு ஆற்றலை பெறுவதாக ஜின்னர் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஆட்ரியன் ஹில் கருத்து தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2 முக்கியமான ஆய்வுகள்

2 முக்கியமான ஆய்வுகள்

இந்த புதுவகையான மலேரியா குறித்து சீரற்ற சோதனை மற்றும் மரபணு ஆய்வு ஆகிய இரண்டு முக்கியமான ஆய்வுகளை தி லேன்செட் எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகளின் படி மலேரியத் தாக்குதல் உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள்:

2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள்:

பெண் அனாஃபில்ஸ் கொசுக்கள் கடிப்பதால் மலேரியா நோய்கள் பரவுகின்றன. மலேரியா நோயால் மட்டும் ஏறக்குறைய 500000க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 2000ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை இந்த நோய் இறப்பு விகிதம் 62 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் 41 சதவீதம் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதுள்ள சூழலில் மலேரியா நோய் திரும்பவும் கம்பேக் கொடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2018ம் ஆண்டு அளித்த அறிக்கையில் உலகம் முழுக்க 2016-2017ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியன் ஆகும்.

Most Read:செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்

அச்சுறுத்தும் மலேரியா

அச்சுறுத்தும் மலேரியா

தென்கிழக்கு ஆசியாவில் பரவி வரும் மலேரியா நோய் இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் உலக சுகாதார அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். 20ம் நூற்றாண்டுகளின் மத்தியில் மலேரியாவுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளை எல்லாம் முறியடித்துவிட்டது.

மலேரியா எதிர்ப்பு மருந்து

மலேரியா எதிர்ப்பு மருந்து

எப்படிப் பார்த்தாலும் மலேரியா எதிர்ப்பு மருந்து தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுவதாக மஹிடோல் ஆக்ஸ்ஃபோர்டு வெப்பமண்டல மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவில் மலேரியாவுக்கான ஆராய்ச்சியில் தலைமைத் தாங்கியவரும், மேலும் சீரற்ற மலேரிய சோதனை அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான அர்ஜென் டண்டோர்ப் தெரிவித்துள்ளார்.

புதுவகை மலேரியா நோயின் தாயகம்

புதுவகை மலேரியா நோயின் தாயகம்

குளோரோ குயின் எதிர்ப்பு மருந்தும் தயாரிக்கப்பட்டதும் அங்கு தான். அடுத்த தலைமுறை மலேரியா எதிர்ப்பு மருந்தான சல்படோக்ஸின் - பைரிமெத்தமைன் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு தான். மேலும் தற்போது ஆர்டிமிசினின் எதிர்ப்பும் கிழக்கு கம்போடியாவில் தான் ஏற்பட்டிருக்கிறது.

Most Read:மன உளைச்சல், மனச்சிதைவுக்கு நோய்க்கு வைட்டமின் பி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாமா?

ஒட்டுண்ணிகள் மருந்துக்கு எதிராக பரவுகிறது

ஒட்டுண்ணிகள் மருந்துக்கு எதிராக பரவுகிறது

மலேரியா நோயைக் குணப்படுத்தும் மருந்துகளை உட்கொண்ட போதும் நோய்த்தொற்றுக் கொண்டவர்கள் இறப்பைச் சந்திக்கிறார்கள். மலேரியா நோயுக்கான எதிர்ப்பு மருந்துகளை மலேரியா ஒட்டுண்ணிகள் எதிர்த்து போராடுவதில்லை. மாறாக எளிதாக அதிதீவிரமாகப் பரவுகிறது. மேலும் மருந்து எதிர்ப்பு விகாரங்கள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில இடங்களில் வெற்றி

சில இடங்களில் வெற்றி

மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக சுகாதார வல்லுனர்கள் போராடிவரும் சூழலில் அல்ஜெரியா மற்றும் அர்ஜெண்டிணாவில் மலேரியா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் ஒட்டுண்ணித் தொற்று மற்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது.

தோல்வியைச் சந்திக்கும் நோய் எதிர்மருந்து

தோல்வியைச் சந்திக்கும் நோய் எதிர்மருந்து

டை- ஹைட்ரோ-ஆர்ட்டெமிசினின் (டி.எச்.எச் - பிபி.க்யூ) எனும் தற்போது நடைமுறையிலுள்ள மலேரியா நோய் எதிர்ப்பு மருந்து கிழக்கு கம்போடியாவில் 62 சதவீதம் தோல்வியையும், வடமேற்கு கம்போடியாவில் கம்போடியாவில் 27 சதவீதத் தோல்வியையும், தென்கிழக்கு வியட்நாமில் 53 சதவீதத் தோல்வியையும், வடமேற்கு தாய்லாந்தில் 87 சதவீதத் தோல்வியையும் சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுவகை மலேரியாவின் தோற்றம்

புதுவகை மலேரியாவின் தோற்றம்

மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்வினையாற்றும் ஒட்டுண்ணிப் பெருக்கம் கிழக்கு கம்போடியாவில் 2008ம் ஆண்டு தோற்றமாகியது. அப்போதிலிருந்து இன்று வரை நோய் எதிர்ப்பு ஒட்டுண்ணியின் தாக்கம் பரிணாம வளர்ச்சியின் காரணமாக அதன் துணைக் குழுக்கள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன. இதன் வெற்றிக்கரமான துணைக் குழுக்கள் தனிப்பட்ட மரபு பண்புகளைக் கொண்டுள்ளது . மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ள ஆப்ரிக்காவில் குளோரோகுயின் மருந்துக்கு எதிராக நின்று மனித உயிர்களைக் கொன்றுக் குவித்த ஒட்டுண்ணிகளைப் போல் மீண்டும் தற்போது புதிய அவதாரம் எடுத்து டி.எச்.எ - பி.பி.க்யூ மருந்து மலேரியாத் தடுப்பில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Most Read: இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க

புது மருந்துகள் கண்டுபிடிப்பு:

புது மருந்துகள் கண்டுபிடிப்பு:

மலேரியா நோயின் தாயகங்களில் ஒன்றான தென்கிழக்கு ஆசியாவில் 1950களின் பிறபகுதியில் இருந்து இன்றுவரை மலேரியா நோய் எதிர்ப்பு ஒட்டுண்ணியின் புது புது அவதாரங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. 1950களில் குளோரோக்யின் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக அவதாரம் எடுத்த ஒட்டுண்ணிகள் தற்போது ஆர்டிமிசின் மருந்துகளுக்கு எதிராக தற்போது செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க புதிய வகை மலேரியா நோய் பரவுவதற்கு முன் நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: drugs
English summary

Malaria Parasites Spreading Aggressively' Across South-East Asia

Drug-resistant malaria is rapidly spreading in Southeast Asia. Moreover, there has been a global health emergency. The new malaria epidemic is spreading in Thailand, Cambodia, Laos and Vietnam.Treating malaria is very complicated. Drugs and pesticides are effective against the causes of malaria. But Adrian Hill, director of the Zinner Institute, said that in the next 10 to 20 years, the drug will have enough energy to be effective against it.
Story first published: Wednesday, July 24, 2019, 12:10 [IST]
Desktop Bottom Promotion