Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க எலும்பு பலவீனமா இருக்க காரணம் உங்களோட இந்த தினசரி பழக்கம்தானாம் தெரியுமா?
எலும்புகள் பலவீனமடைய பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நம்முடைய உணவுப்பழக்கம்தான். உணவுப்பழக்கம் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கைமுறையும் நம்முடைய எலும்புகளை பலவீனமாக்குகிறது.
நமது ஆரோக்கியமான வாழ்விற்கு எலும்புகள் என்பது மிகவும் அவசியமானதாகும். நம்முடைய உடலுக்கு முழுமையான அமைப்பை வழங்குவது எலும்புகள்தான். எலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எலும்புகள் பலவீனமடைய பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நம்முடைய உணவுப்பழக்கம்தான்.

உணவுப்பழக்கம் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கைமுறையும் நம்முடைய எலும்புகளை பலவீனமாக்குகிறது. நமக்கே தெரியாமல் நாம் செய்யும் இந்த தவறுகள் நம்முடைய எலும்புகளில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இந்த பதிவில் உங்கள் எலும்புகளை பலவீனமாக்கும் உங்களின் அன்றாட பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

போதுமான அளவு இயங்குவதில்லை
நமது எலும்புகளுக்கும் உயிர் உள்ளது, அதனை நீங்கள் எவ்வளவு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு வலிமையாக உங்கள் எலும்புகள் மாறும். அதனை உபயோகிக்காத போது அது பயனற்றதாக மாறிவிடுகிறது. எடை தூக்கும் பயிற்சி, நடைப்பயிற்சி, எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சி போன்றவை உங்களின் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மாமிசத்தை அதிகம் விரும்புவது
அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் அதிக கால்சியத்தை வெளியேற்றக்கூடும், இது எலும்புகளின் அடர்த்தி குறைவதற்கு வழிவகுக்கும்.எலும்புகளின் அடர்த்தி குறையும்போது அது ஆஸ்டோபோரோசிஸ்க்கு வழிவகுக்கிறது. சில ஆய்வுகள் படி புரதம் நமது உடல் அதிக கால்சியத்தை உறிஞ்ச வழிவகுப்பதாக கூறுகிறது. எலும்புகளின் ஆரோக்கியம் என்று வரும்போது இறைச்சியை குறைவான அளவு சாப்பிடுவதுதான் உங்களுக்கு நல்லது.

உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனிகள்
ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக சோடியம் உட்கொள்ளும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு குறைந்த சோடியம் உட்கொள்ளும் நபர்களைக் காட்டிலும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகமாகும். இதனால்தான் நமது இரத்தத்தில் இருக்கும் சோடியம் மற்றும் கால்சியத்தை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.

சூரிய ஒளியை தவிர்ப்பது
அமெரிக்க தேசிய ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளையின் கூற்றுப்படி, 50 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு தினமும் 400 முதல் 800 IU வைட்டமின் டி தேவைப்படுகிறது, மேலும் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு 800 முதல் 1,000 IU தேவைப்படுகிறது.சூரிய ஒளியில் இருந்து உங்களுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால் செயற்கை வழியில் அதனை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே சூரிய ஒளியை தவிர்க்காமல் அதிக நேரம் வெளியே இருக்க முயற்சி செய்யுங்கள்.

எடை குறைப்பு
சீரான எடையை பராமரிப்பது என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது ஆனால் அதிகளவு எடையைக் குறைப்பது உங்களின் எலும்புகளுக்கு நல்லதல்ல. உங்களின் BMI 18.5 க்கு குறைவாக இருந்தால் அது ஆஸ்டியோபோரோசிஸுக்கு நோய்க்கு வழிவகுக்கும். உங்கள் BMI ஒரு பாயிண்ட் அதிகரிப்பது உங்கள் எலும்பு பலவீனமடையும் வாய்ப்பை 12 சதவீதம் குறைக்கிறது.

மது அருந்துவது
குறைந்த அளவு வைன் குடிப்பது உங்களின் எலும்புகளுக்கு நல்லது, ஆனால் தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட கிளாஸ் மது அருந்துவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகப்படியான ஆல்கஹால் கார்டிசோலின் அளவையும் அதிகரிக்கக்கூடும், இது எலும்பு தாது அடர்த்தியைக் குறைக்கும். ஆல்கஹால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பெண்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர். எலும்பு செல்களாக மாறும் செல்களுக்கு ஆல்கஹால் நச்சுத்தன்மை வாய்ந்தது.

காற்று மாசுபாட்டில் வாழ்வது
காற்றில் அதிக மாசுபாடு இருப்பது வயதானவர்களுக்கு ஆஸ்டோபோரியோசிஸ் ஏற்படும் வாய்ப்பை பலமடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு புகைமூட்டமான பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டில் அதிக திறன் கொண்ட துகள் காற்று (ஹெப்பா) வடிகட்டியைக் கொண்ட காற்று சுத்திகரிப்பு ஒன்றைப் பயன்படுத்துங்கள், காற்றின் தரம் மோசமாக இருக்கும்போது வெளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications