Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆயுளை அதிகரிக்க இந்த சமையலறை பொருட்களே போதும்...!
காற்று, மழை, மசாலா, உணவு, மருத்துவ மூலிகைகள் போன்றவற்றில் நம் உடலை தூய்மைப்படுத்த அதற்கென தனித்துவமான சக்தி உள்ளது.
" உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமயலறையில் தீர்வு உள்ளது " என்று ஒரு பழமொழி உள்ளது. பூமியிலிருந்து இயற்கையாகவே உருவாகும் அனைத்தும் நம் உடலையும், மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் அதிசய சக்தியை எவ்வாறு கொண்டுள்ளன என்று பண்டைய இந்திய வேதங்கள் கூறுகின்றன.

காற்று, மழை, மசாலா, உணவு, மருத்துவ மூலிகைகள் போன்றவற்றில் நம் உடலை தூய்மைப்படுத்த அதற்கென தனித்துவமான சக்தி உள்ளது. மசாலா பொருட்கள் எப்படி நம் உடலை தூய்மைப்படுத்தும் என்று கேள்வி எழலாம். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்கள் உணவில் சுவையூட்டும் பொருட்கள் மற்றும் சுவையை அதிகரிக்கும் பொருட்களாக பயன்படுத்துவது இந்திய சமையலறை மற்றும் உணவுகளில் மிகவும் பொதுவானது. இருப்பினும், அவற்றின் உண்மையான நன்மை சுவைக்கும் அப்பாற்பட்டது. இந்த மசாலாப் பொருட்கள் நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி நம் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. நம் உடலை தூமைப்படுத்தும் மசாலாப்பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சீரகம்
இந்த சிறிய விதைக்க பெரும் நன்மைகளை வழங்கக்கூடியவை. ஜீரா அல்லது சீரகம் விதைகள் செரிமானத்தை அதிகரிப்பதற்கு அறிவியல் பூர்வமாக அறியப்படுகின்றன. சில நேரங்களில் நம் உடல் நச்சுகளை வெளியிடுகிறது, அவை செரிமானம் குறைவாக இருப்பதால் நம் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும். சீரகத்தை தவறாமல் உட்கொள்வது குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு மட்டுமல்லாமல், உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

குங்குமப்பூ
பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி, குங்குமப்பூ மிகவும் பயனுள்ள மசாலாப்பொருட்களில் ஒன்றாகும். இது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குங்குமப்பூ சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, இதனால் உங்கள் சிறுநீர் வழியாக நச்சுகள் வெளியேறும். அனைத்து உறுப்புகளின் தாயாகக் கருதப்படும் கல்லீரல், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களுக்கும் எதிராக உங்களைப் பாதுகாக்கிறது. கல்லீரலை பாதுகாக்கும் பணியை குங்குமப்பூ சிறப்பாக செய்கிறது. ஆனால் ஒருநாளைக்கு இதனை ஒரு சிட்டிகை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள்
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் மஞ்சள் முதன்மை மசாலாப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் தனித்துவமான சுவை தவிர இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க மஞ்சள் முக்கியமான ஒன்றாகும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டவும் வெளியேற்றவும் உதவுகிறது. வலுவான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுடன், மஞ்சள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது.

இலவங்கப்பட்டை
எல்லாவற்றிலும் மிகவும் பயனுள்ள மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, உங்கள் உடலை நச்சுகளை சுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த பொருட்களை தயாரிப்பதில் பெரும்பாலும் இது பயன்படுத்தப்படுகிறது, இலவங்கப்பட்டை, அதன் இயற்கையான வடிவத்தில் உட்கொண்டால், எப்போதும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இரவில் ஊறவைத்து அடுத்தநாள் குடிப்பது அல்லது வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்து குடிப்பது சிறப்பான பலன்களை வழங்கும்.

இஞ்சி
இஞ்சி ஒரு வலிமையான மசாலா பொருளாகும். இது நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் திரவத்திலிருந்து தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நம் உடலுக்கு உதவுகிறது. பண்டைய மருத்துவ நூல்களின்படி, இஞ்சி சாறு செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியின் வழக்கமான நுகர்வு வீக்கம் மற்றும் மென்மையான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது.

குதிரை முள்ளங்கி
ஒருவர் தங்கள் உடலை நச்சுத்தன்மையிலிருந்து சுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர் தன்னுடைய கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கான சிறந்த வழி குதிரைமுள்ளங்கிதான். இதன் சுவை சிறப்பானதாக இல்லை என்றாலும் இதன் ஆரோக்கிய நன்மை மிகவும் அவசியமானதாகும்.

மிளகாய்
பண்டைய காலங்களிலிருந்து மிளகாய் உணவுத் தயாரிப்புகளிலும் மருத்துவ மூலிகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவும் ஒரு சக்திவாய்ந்த பொருளாகவும் கருதப்படுகிறது, இது உடல் எடையை வெகுவாக குறைக்கிறது. மிளகாயை தொடர்ச்சியாக உட்கொள்வது நம் உடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் பிடிவாதமான நச்சுகளை நம் உடலில் இருந்து நீக்குகிறது.



Click it and Unblock the Notifications